யாழ். பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகம் ஆரம்பிக்கப்பட்டு 25 ஆவது ஆண்டு நிறைவையொட்டி இன்று காலை நடைபவனியொன்று இடம்பெற்றது.
வவுனியா புகையிரத நிலையத்திற்கு முன்பாகவுள்ள கட்டிடத்தில் 1991 ஆம் அண்டு வவுனியா வளாகம் ஆரம்பிக்கப்பட்டது.
இதனை நினைவுபடுத்தும் முகமாக புகையிரத நிலையத்திற்கு முன்பாக இருந்து நடைபவனியொன்று அரம்பமாகி, வவுனியா நகர் வழியாக பூங்கா வீதியில் அமைந்துள்ள வளாகத்தின் பிரதான அலுவலகத் தொகுதியை சென்றடைந்தது.
இந்த நடைபவனியில் வளாகத்தின் முதல்வர், பீடாதிபதிகள், விரிவுரையாளர்கள், மாணவர்கள், பழைய மாணவர்கள் என பலர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

