Ad Widget

கெழுத்து மீனை விழுங்கிய நாரையின் நிலையில் தமிழர்கள்! :பசுபதிப்பிள்ளை

கெழுத்து மீனை விழுங்கிய நாரையின் நிலைமையில்தான் தற்போது தமிழர்கள் இருக்கிறார்கள் என வடமாகாண சபை உறுப்பினர் சு.பசுபதிப்பிள்ளை அவர்கள் தெரிவித்துள்ளார்.

pasupathi-pillai

கிளிநொச்சி ஊற்றுப்புலத்தில் நடைபெற்ற விதைச் சுத்திகரிப்பு நிலையத் திறப்பு விழாவில் கலந்துகொண்ட வடமாகாண சபை உறுப்பினர் மேலும் தெரிவித்ததாவது,

பத்து வருடங்கள் நடைபெற்ற கொடுங்கோல் ஆட்சியை வீழ்த்தி நல்லாட்சி அரசாங்கத்தைக் கொண்டுவந்தாக நம்மவர்கள் மார்தட்டிக்கொள்கிறார்கள் ஆனால் அந்த நல்லாட்சியால் எம்மக்களுக்கு எந்தவித நன்மையும் இல்லை ஆனால் அவர்கள் சந்தோசமாக இருக்கிறார்கள். நல்லாட்சி அரசாங்கத்தில்தான் ஒரு பௌத்த பிக்கு அரச அதிபரை மிரட்டித் தூசனம் பேசுகிறார். ஒரு கிராம சேவையாளரை மிரட்டித் தூசனம் பேசுகிறார் ஆனால் இதற்கெல்லாம் நல்லாட்சி அரசாங்கதில் நடவடிக்கை இல்லை.

நம்மவர்கள் எல்லாம் சந்தோசமாக இருக்கிறார்கள் ஆனால் தமிழர்கள் கெழுத்து மீனை விழுங்கிய நாரையின் நிலையில் இருக்கிறார்கள். கெழுத்து மீனை நாரை விழுங்கினால் என்ன நடக்கும்? அது உள்ளுக்கும் போகாது வெளியிலும் வராது. பலவந்தமாக அதை எடுக்க முயற்சித்தால் அது தொண்டையை அறுக்கும். அந்த நிலைதான் தற்போது தமிழர்களுக்கும். ஆகவே அன்புள்ள சகோதரர்களே நாங்கள் மிகத் தெளிவாக இருக்கோணும். நாங்கள் இந்த மண்ணிலே வாழ்ந்தவர்கள், இந்த மண்ணிலே வாழ்பவர்கள் மீண்டும் இந்த மண்ணிலே வாழ்வோம் என்ற நோக்கத்தோடுதான் நிமிர்ந்து நிற்கின்றோம். விடுதலைப் புலிகளின் காலப்பகுதியில் நாங்கள் நிமிர்ந்து நின்றோம். வெடிகுண்டுகளுக்கு மத்தியில்கூட நாம் எங்கள் கலை கலாசாரத்தைக் கண்டிக்காத்து இந்த மண்ணோடு வரலாற்று நாயகர்களாக வாழ்ந்து வந்தோம்.

பூனகரியின் கடற்கதையோரம் இரண்டாயிரம் ஏக்கர் கம்பிவேலி அடைத்து ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. முல்லைத் தீவில ஐந்நூறு ஏக்கர் கடற்கரையோரத்திலிருந்து வீதிவிரை கம்பிவேலி அடைத்து ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில 40 அல்லது 50 ஏக்கர் விடுறாங்கள் என்றால் எங்கடை ஆட்கள் நாங்கள் கதை கதையென்று கதைத்துச் சாதித்துவிட்டோம் என்று தற்பெருமைகொள்கிறார்கள். 40 ஏக்கருக்கு கதைத்தவர்கள் மற்றப்பக்கத்தில் ஆக்கிரமிக்கப்படும் 2000 ஏக்கரைப்பற்றியும் 500 ஏக்கரைப்பற்றியும் கதைக்கிறார்கள் இல்லை. இந்தப் பகுதிகளில் வாழும் நாங்கள் எங்களை நாங்களே காப்பாற்றிக்கொள்ளவேண்டிய நிலையில் இருக்கிறோம்.

நல்லாட்சி அரசாங்கக் காலப்பகுதியில் மாத்திரம் கிளிநொச்சியில் பத்திற்கு மேற்பட்ட புத்தர் சிலைகள் நிறுவப்பட்டுள்ளன.

இவ்வாறு அவர் தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்

Related Posts