யாழ்ப்பாணம் உள்ளிட்ட பகுதிகளில் அண்மைய நாட்களாக ஆவா என அடையாளப்படுத்தப்பட்டுள்ள குழுவின் சமூக விரோத செயற்பாடுகள் அதிகரித்துள்ள நிலையில், ஆவா குழுவிற்கு புலம்பெயர் அமைப்புக்களிடமிருந்து உதவிகள் கிடைக்கப் பெற்றுள்ளமை குறித்த தகவல் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆவா குழு உறுப்பினர்கள் என தெரிவித்து கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்களை நேற்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போது பயங்கரவாத தடுப்பு பிரிவினர் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் இதனை தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்களிடம் தொடர்ந்தும் விசாரணைகள் நடாத்தப்பட்டு வருவதாகவும், ஆவா குழுவுடன் தொடர்புடையவர் என கூறப்படும் விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர் ஒருவரை கைது செய்வதற்கான விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பயங்கரவாத தடுப்பு பிரிவினர் நீதிமன்றத்தில் குறிப்பிட்டுள்ளனர்.
இதேவேளை, நீதிமன்றத்தில் முன்வைக்கப்படுகின்ற விடயங்களை ஏற்றுக் கொள்ள முடியாது என கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்களின் உறவினர்கள் நீதிமன்ற வளாகத்தில் வைத்து தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
தொடர்புடைய செய்தி