கன்டர் மோதி அதிபர் படுகாயம்

திருட்டு மண் ஏற்றி வந்த கன்டர் வாகனம் மோதி, அதிபர் பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நெல்லியடி, பொலிஸார் தெரிவித்தனர்.

இச் விபத்து, முள்ளி சந்தியில் நேற்று செவ்வாய்க்கிழமை (15) காலை இடம்பெற்றுள்ளது.
லேனாஸ்குமார் (வயது 39) என்பவரே படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவத்துடன் தொடர்புடைய வாகனம் நிற்காமல் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். எனினும், குறித்த வாகனத்தை தேடி பொலிஸார் விசாரைணகளை மேற்கொண்டுள்ளனர்.

Related Posts