Ad Widget

யாழ் மாநகர சபை ஊழியர்களின் போராட்டம் கைவிடப்பட்டது

நிரந்தர நியமனம் வழங்க கோரி யாழ்.மாநகரசபை சுகாதார ஊழியர்கள் மற்றும் குடும்பல நல உத்தியோகத்தர்கள் ஒன்பது நாட்களாக மேற்கொண்டு வந்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.

நேற்றய தினம் காலை 8 மணியளவில் மாநகர சபைக்குள் நுழையும் சகல வீதிகளையும் மூடி நிர்வாக முடக்கல் போராட்டத்தில் இவர்கள் ஈடுபட்டனர்.

இதனால் அவ்விடத்தில் சிறுது நேரம் பரபரப்பு ஏற்பட்டிருந்தது. இதையடுத்து யாழ் நகரில் ஒன்பது நாட்களாக தேங்கியிருந்த குப்பைகளை மாவட்டத்தின் வேறு பிரதேச செயலகத்திலுள்ள சுத்திகரிப்பு தொழிலாளர்களைக் கொண்டு அகற்ற முற்பட்டனர்.

குறித்த செயலுக்கு யாழ் மாநகர சுத்திகரிப்பு தொழிலாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன் கைகலப்பு நடவடிக்கைகளிலும் ஈடுபட்டனர்.

இதனையடுத்து குறித்த பகுதிக்கு கலகமடக்கும் பொலிசார் வருகை தந்து நிலமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

மேலும் இவ்விடயத்திற்கு தீர்வுகாணும் பொருட்டு வடமாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் தலைமையில் சுகாதார ஊழியர் சங்கத்தினருக்கும் மாநாகர சபை ஆணையபளர் மற்றும் வடமாகாண உள்ளு}ராட்சி ஆணையாளர் ஆகியோருக்கும் இடையில் நேற்று மாலை பேச்சுவார்த்தை ஒன்று இடம்பெற்றது.

மூன்று மாதகால இடைவெளிக்குள் முதற்கட்டமாக தொண்ணூறு பேருக்கு நிரந்தர நியமனம் வழங்குவதாக இக்கலந்துரையாடலில் முடிவு எட்டப்பட்டது.

இதை ஏற்றுக்கொண்ட சுத்திகரிப்பு தொழிலாளர் சங்கத்தினர் போராட்டத்தை கை விடுவதாக அறிவித்தனர்.

Related Posts