- Wednesday
- May 13th, 2026
சோமாலிய கடற்கொள்ளையர்களின் பிடியின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ள ஏரிஸ் 13 என்ற பெயரைக்கொண்ட கப்பலில் இருந்த இலங்கையர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். சோமாலிய கடற்படையினர் சுற்றிவளைத்து துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டிருந்தனர். இந்நிலையில், கப்பலையும் அதில் இருந்தவர்களையும் விடுவிப்பதற்கு கொள்ளையர்கள் கப்பம் கேட்டிருந்த போதிலும் கப்பம் வழங்கப்படாத நிலையில் அவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர்களுக்கு, அறிவித்தல் ஒன்றை பதிவாளர் யாழ்ப்பாண பல்கலைக்கழக பதிவாளர் வி.காண்டீபன் நேற்று (17) வெளியிட்டுள்ளார். யாழ். பல்கலைகழக பதிவாளர் வி.காண்டீபன் இது தொடர்பாக தெரிவிக்கையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீடத்தின் 2014, 2015 கல்வியாண்டுக்கான முதலாம் மற்றும் இரண்டாம் வருட மாணவர்களுக்கும், 2015, 2016 கல்வியாண்டுக்கான முதலாம் வருட மாணவர்களுக்குமான கல்வி நடவடிக்கைகள்...
வடக்குமக்களின் வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரமேம்பாட்டை மீள்நல்லிணக்கத்தின் ஊடாக ஏற்படுத்தல் என்ற புதிய கருத்திட்டம் நோர்வேநாட்டின் நிதியுதவியுடன் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதற்கான தொடக்க நிகழ்ச்சி கடந்த புதன்கிழமை (15.03.2017) வவுனியாவில் நடைபெற்றுள்ளது. இந்நிகழ்ச்சியில் வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு கருத்திட்டத்தைச் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைத்துள்ளார். தொழில் முயற்சியில் வடக்கைத் தெற்குடன் இணைக்கும் மீள்நல்லிணக்கத்தின் ஊடாக...
கவுனவத்தை வயிரவர் கோவில், வேள்வி உற்சவத்தில் மிருக பலியிடலுக்கு யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் தடையை நீடித்துள்ளார். யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் முன்னிலையில் குறித்த வழக்கு நேற்றய தினம் எடுத்து கொள்ளப்பட்டது. அதன் போது மேல் நீதிபதி கவுனவத்தை ஆலய நிர்வாகத்தினருக்கு கடும் எச்சரிக்கையும் விடுத்திருந்தார். நீதிபதி அத தொடர்பில் குறிப்பிடுகையில் , ஆலயத்தில்...
போலிக் கடவுச்சீட்டு வைத்திருந்த நான்கு இலங்கையர்கள் இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கை மற்றும் பிரித்தானியாவைச் சேர்ந்த எட்டு பேரை இந்திய அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் இரண்டு பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. நான்கு இலங்கையர்களும் போலி இந்தியக் கடவுச்சீட்டை பயன்படுத்தியுள்ளனர் என்பது விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது. இந்த இலங்கையர்களுடன் நான்கு பிரித்தானியர்களும்...
சுன்னாகம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட, சுமணன் எனும் இளைஞனின் உடலில் 06 வெளிகாயங்களும் 16 உள்காயங்களும் காணப்பட்டதாக விசேட சட்ட வைத்திய அதிகாரி சாட்சியம் அளித்துள்ளார். சுன்னாக காவல்துறையினரால் கைது செய்யபப்ட்ட சுமணன் எனும் இளைஞன் சித்திரவதை செய்து படுகொலை செய்யப்பட்டமை தொடர்பான வழக்கு விசாரணை யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில்...
வாள்வெட்டுச் சம்பவம் ஒன்றுடன் தொடர்புபட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில், யாழ்.நகரிலுள்ள பிரபல பாடசாலையை சேர்ந்த 5 மாணவர்கள் யாழ்.பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த கைதுச் சம்பவம் நேற்றைய தினம் யாழ்.நகரில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது,பாடசாலையில் நடைபெற்ற வாய்த் தகாராறு ஒன்றின் நிமித்தம் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக இரு மாணவ குழுக்களிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த...
கிளிநொச்சி பொலிஸ் நிலையப் பிரிவில் கிளிநொச்சி பொலிஸ் நிலையப் போதைப் பொருள் தடுப்பு பிரிவு பொலிஸாரின் விசேட வீதிப் பரிசோதனையின் போது யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்புக்கு இ.போ.ச பேருந்தில் கடத்தப்பட்ட கேரளக் கஞ்சா பொதிகளை கைப்பற்றியுள்ளதுடன், சந்தேகத்தின் பேரில் இரு சந்தேக நபர்களையும் கைது செய்துள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்துள்ளார். இச்சம்பவம் நேற்று புதன்கிழமை நடைபெற்றுள்ளது....
சுயேச்சையான சர்வதேச விசாரணை மூலமே தமிழ் மக்களுக்கு நீதியை வழங்க முடியும். இலங்கை அரசாங்கமானது ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தீர்மா னத்தைத் தெளிவாக நிராகரித்துள்ள நிலை யில் அந்தத் தீர்மானத்தை நடைமுறைப் படுத்துவதற்கு மேலும் கால அவகாசம் வழங்கியிருப்பது மனித உரிமை ஆணைக்குழுவின் நம்பகத்தன்மைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின்...
நாட்டிலுள்ள சில ஹோட்டல்களுக்கு சென்று சமையல் செய்வதனைப் பார்த்தால், அந்த ஹோட்டலில் உணவு உண்பது குறித்து நினைத்துக் கூட பார்க்க முடியாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். இவ்வாறான ஹோட்டல்களில்சமைக்கும் உணவுகளை உண்பவர்கள் இதுவரையில் உயிர்வாழ்வதும் பெரிய ஆச்சரியமான ஒன்று எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். உலக நுகர்வோர் உரிமைகளைப் பாதுகாக்கும் தினத்தை முன்னிட்டு நடாத்தப்பட்ட...
இனியும் உழைத்து சீவிப்பதற்கான தெம்பு எமக்கில்லை. எமக்கான வாழ்வாதாரம் கேப்பாப்பிலவில் எமது காலடிக்குள் காணப்படுகிறது. எனவே நாம் நிம்மதியாக வாழ்வதற்கு எமது பூர்வீக காணிகள் விடுவிக்கப்பட வேண்டும் என தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கேப்பாப்பிலவு மக்கள் வலியுறுத்தியுள்ளனர். தமது பூர்வீகக் காணிகளை மீளக் கையளிக்குமாறு கோரி, முல்லைத்தீவு ராணுவத் தலைமையகத்திற்கு முன்னாள் கேப்பாப்பிலவு மக்கள் கடந்த...
எத்தகைய அழுத்தங்கள் பிரயோகிக்கப்படினும் இலங்கையில் எந்த தருணத்திலும் கலப்பு நீதிமன்றம் ஒன்று உருவாக்கப்பட மாட்டாது என்று அரசாங்கம் மீண்டும் திட்டவட்டமாக அறிவித்துள்ளது. அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பிரதியமைச்சர் அஜித் பீ பெரேரா இதனைத் தெரிவித்துள்ளார். அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், “மனித உரிமை விவகாரம் தொடர்பில் கலப்பு நீதிமன்றத்தையோ,...
இடம்பெயர்ந்த மக்களை வாக்காளர்களாக பதிவு செய்யும் விசேட சட்டமூலத்தை வர்த்தமானியில் வெளியிடுவதற்கும் அதனை நாடாளுமன்றுக்கு கொண்டுவருவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. யுத்தம், இயற்றை அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மக்களுள் சிலர் நிரந்தர முகவரிகளின்றி இடம்பெயர்ந்தவர்களாகவும் அகதிகளாகவும் தொடர்ந்தும் வசித்து வரும் அவலநிலைமை நாட்டில் காணப்படுகின்றது. எவ்வாறாயினும் இவர்களின் வாக்குரிமையையும் பாதுகாக்க வேண்டும் எனும் நோக்கிலேயே அரசாங்கம் இந்த நடவடிக்கையினை எடுத்துள்ளது....
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் யாழ். மாவட்டத்தில் முதலாவது தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தினை நேற்று 11 மணியளவில் வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பிரதேச செயலகம் முன்பாக ஆரம்பித்துள்ளனர். இவர்கள் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் பதில் கூற வேண்டும், அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும், சர்வதேச விசாரணை கட்டாயமாக நடைபெற வேண்டும், ஜெனீவாவில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் மனித...
முல்லைத்தீவு இராணுவ முகாமுக்கு முன்னால் போராட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் கேப்பாப்புலவு மக்களில் சிலரை இன்று நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கேப்பாப்புலவிலுள்ள தமது பூர்வீகக் காணிகளை விடுவிக்குமாறு கேப்பாப்புலவு மக்கள் 15 நாட்களாகத் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இராணுவ முகாமுக்கு முன்பாக இப்போராட்டம் நடத்தப்பட்டு வருவதால் தங்களது பணிகளுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்து...
அநுராதபுரம் பொலநறுவை மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களை அடிப்படையாகக் கொண்டு 2016ம் ஆண்டில் முன்னெடுக்கப்பட்ட வறுமையை ஒழிப்பதற்கான திட்டம் இவ்வருடத்தில் முல்லைத்தீவு மட்டக்களப்பு உள்ளிட்ட பல பிரதேசங்களில் நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் ஊடகத்துறை அமைச்சரும் அமைச்சரவை துணைப்பேச்சாளருமான கஜந்த...
ஆசிரியர் சேவையில் தற்பொழுது 50 ஆயிரம் வெற்றிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்திருப்பதாக கல்வி அமைச்சர் அக்கில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். 238 பேருக்கு புதிய நியமனம் மற்றும் பதவி உயர்வு வழங்கும் நிகழ்வில் அமைச்சர் உரையாற்றுகையில் இந்த விடயங்களைக் குறிப்பிட்டார். கல்வியமைச்சில் இது தொடர்பான வைபவம் இடம்பெற்றது. கல்வி அமைச்சர்...
பெண் ஒருவரை காப்பாற்றியமை தொடர்பில் தென் கொரியாவில் இலங்கையர் ஒருவருக்கு மனிதாபிமான விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளதாக, எல்.ஜீ.பவுண்டேசன் தெரிவித்துள்ளது. கட்டபில்லா கெட்டியகே நிமலசிறி என்ற 39 வயது இலங்கையருக்கே இந்த விருது வழங்கி வைக்கப்பட்டுள்ளது. தென்கொரியாவில் தீப் பற்றிக் கொண்டிருந்த வீடொன்றில் இருந்து பெண் ஒருவரின் அலறல் சத்தத்தை கேட்ட நிமலசிறி, விரைந்து செயற்பட்டு, அந்த...
சோமலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்டதாக கூறப்படும் கப்பலில் உள்ளதாக நம்பப்படும் இலங்கையர்கள் குறித்த விபரம் வௌியாகியுள்ளது. தலைமை அதிகாரி - மதுகமவைச் சேர்ந்த ருவன் சம்பத் தலைமை பொறியியலாளர் - ஹொரண பகுதியைச் சேர்ந்த ஜே.களுபோவில மாலுமி - மட்டக்குளிய பகுதியைச் சேர்ந்த எஸ்.ஏ.நிகோலஸ் மூன்றாவது அதிகாரி - காலியைச் சேர்ந்த திலிப் ரணவீர மூன்றாவது பொறியியலாளர்...
வவுனியாவில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கூட்டத்தில் போர்க்குற்ற விசாரணை தொடர் பில் நிறைவேற்றப்பட்டிருக்கும் தீர்மானத்தை தமிழீழ விடுதலை இயக்கத்தின் சார்பிலும் அதன் செயலாளர் நாயகம் என்ற அடிப்படையிலும் நிராகரிக்கின்றோம் என தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகம் சிறிகாந்தா தெரிவித்துள்ளார். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வவுனியா கூட்டம் தொடர்பில் கேட்கப்பட்ட போதே...
Loading posts...
All posts loaded
No more posts
