நீதி விசாரணை தேவையில்லை என யாரும் சொல்ல முடியாது

“உண்மை கண்டறியப்பட வேண்டும் என்பதோலோ அல்லது அத்தகைய உண்மை கண்டறிய நடவடிக்கை எடுக்கப்படுவதாலோ, நீதி விசாரணை நடத்தப்படக் கூடாது, நீதி விசாரணை தேவையில்லை என்று எவரும் சொல்ல முடியாது” என, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். இலங்கை அரசாங்கமானது நீதி விசாரணைகளை மேற்கொள்ளாது உண்மை கண்டறியும் நடவடிக்கைகளை முன்னெடுக்கப் போவதாக தெரிவித்திருக்கும்...

யாழ்ப்பாணத்தின் உட்கட்டமைப்பு மேம்பாட்டுக்கு கனடாவின் உதவி

யாழ்ப்பாண மாவட்டத்தின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு உதவிகளை வழங்க கனடா - டொரென்டோ மாநகர சபை முன்வந்துள்ளது. இதன்படி, கனடாவின் டொ​ரெண்டோ மாநகர சபைக்கும், யாழ்ப்பாண மாவட்டத்திற்கும் இடையில் அபிவிருத்தி தொடர்பான உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தில் டொரெண்டோ மாநகர சபை சார்பாக நகர முதல்வர் John Tory யாழ்ப்பாண மாவட்டம் சார்பாக வடமாகாண முதலமைச்சர்...
Ad Widget

ஆவா குழுவுடன் தொடர்புடைய 3 சந்தேகநபர்கள் கைது

யாழ்ப்பாணத்தில் கொள்ளை மற்றும் கப்பம் பெறும் செயற்பாடுகளில் பிரதானமாக ஈடுபட்டு வரும் ஆவா குழுவினருடன் தொடர்புடையதாக சந்தேகநபர்கள் 3 பேர் அண்மையில் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண பாதுகாப்பு பிரிவினர் தெரிவித்தனர். யாழ்ப்பாண பொலிஸூடன் தொடர்புடைய சில குழுவினர் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக யாழ்ப்பாண பாதுகாப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர். கொழும்பு - கொட்டாஞ்சேனை...

சம்பந்தனின் வீட்டின் முன் வெடித்தது போராட்டம்

திருகோணமலையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் எதிர்கட்சித் தலைவர் சம்பந்தனின் இல்லத்தின் முன் திரண்டு ஞாயிற்றுக்கிழமை மாலை முதல் ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர். திருகோணமலை மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் 15 தினங்களாகவே, கிழக்கு மாகாண ஆளுநர் பணிமனையின் முன்னே சுழற்சி முறையிலான உண்ணாவிரதம் மேற்கொண்டு வரும் நிலையில், ஞாயிறன்று மாலை...

பன்னங்கண்டி போராட்டம் நிறைவு

கிளிநொச்சி, பன்னங்கண்டி பகுதியில் உள்ள தனியார் ஒருவருக்கு சொந்தமான காணி பொதுமக்களுக்காக வழங்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி, பன்னங்கண்டி பகுதியில் தங்கியுள்ள தமக்கு, காணி மற்றும் வீட்டுத்திட்டங்களை பெற்றுத்தரக்கோரி, கடந்த 15 நாட்களாக மேற்கொள்ளுப்பட்டுவந்த கவனயீர்ப்புப் போராட்டம், முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. காணி உரிமையாளர், கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம், கிராமசேவகர் மற்றும் மதகுரு ஆகியோர், போராட்டத்தில்...

 15 வருடங்களின் பின்னர் நியமிக்கப்பட்ட தமிழரின் நியமனம் இரத்து?

இலங்கை அரச போக்குவரத்து சபையின் மன்னார் டிப்போவின் புதிய முகாமையாளராக, 15 வருடங்களின் பின்னர் தமிழர் ஒருவர் நியமிக்கப்பட்டிருந்த நிலையில், குறித்த நியமனம் நேற்று வெள்ளிக்கிழமை(17) இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது. இலங்கை அரச போக்குவரத்து சபையின் மன்னார் டிப்போவின் புதிய முகாமையாளராக, மன்னார் வங்காலை கிராமத்தைச் சேர்ந்த ஏ.ஜே.லெம்பேட், கடந்த 7 ஆம் திகதி...

விபத்தில் முன்னாள் போராளி மரணம்

நேற்றைய தினம் ஓடிசுட்டன் சந்தியில் பிரதான வீதிக்கு ஏற முற்பட்ட மோட்டார் வாகனமும் பிரதான வீதியில் வந்துகொண்டிருந்த டிப்பர்வாகனமும் விபத்துக்குள்ளானதில் மோட்டர் சைக்கிளில் பயணித்த முன்னாள் போராளியும் வன்னி விழிப்புலன் அற்றோர் சங்கத்தின் முன்னாள் பொருளாளருமான குமாரசாமி நந்தகோபால்(நந்தன்) என்பவரும் அவருடைய மகனும் காயமடைந்த நிலையில் முல்லைத்தீவு மாஞ்சோலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக குமாரசாமி...

சித்திரவதை குற்றச்சாட்டுகளுக்கு இலக்கான அரச அதிகாரிகள் இடைநிறுத்தப்பட வேண்டும்

சித்திரவதை மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில், விசாரணை ஆணைக்குழுக்களாலும், ஐ.நா அறிக்கைகளிலும் குற்றம் சாட்டப்பட்டுள்ள அதிகாரிகளை பொதுப்பணிகளிலிருந்து இடைநிறுத்த வேண்டும் என சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான செயற்திட்டம் இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது. குறித்த அமைப்பினால் நேற்று (வெள்ளிக்கிழமை) வெளியிடப்பட்ட அறிக்கையிலேயே இவ்விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மேலும் தற்போதைய பிரேஸில் நாட்டின் இலங்கைக்கான தூதுவராக பணியாற்றும் முன்னாள்...

டெங்கு நோயினால் காத்தான்குடியில் சிறுமி உயிரிழப்பு

டெங்கு காய்ச்சலினால் பீடிக்கப்பட்ட நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த காத்தான்குடி, நூறாணியா பிரதேசத்தை சேர்ந்த ஒன்பது வயது சிறுமியொருவர் உயிரிழந்துள்ளார். மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் நேற்று (வெள்ளிக்கிழமை) அனுமதிக்கப்பட்ட குறித்த சிறுமி, இன்று அதிகாலை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இது குறித்து காத்தான்குடி பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி யு.எல்.நஸீர்தீன் தெரிவிக்கையில், காத்தான்குடியில் கடந்த இரு...

டெங்கின் தாக்கம் அதிகரிப்பு: யாழில் ஒருவர் உயிரிழப்பு !

யாழ்ப்பாணத்தில் டெங்கு நோய் தற்போது அதிகமாக பரவி வருகின்ற நிலையில் இவ்வருடம் 96 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலைய சுற்றுச்சுழல் பாதுகாப்பு பிரிவு தெரிவித்துள்ளது. யாழ்.குடாநாட்டின் பல்வேறு இடங்களில் தற்போது டெங்கு நோய்த் தாக்கம் அதிகமாகியுள்ளதாக சுற்றுச்சுழல் பாதுகாப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் அவற்றினை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் தற்போது துரித கதியில் செயற்பாடு...

வவுனியா வேலையற்ற பட்டதாரிகளை பதிவு செய்யும் நடவடிக்கை ஆரம்பம்

வவுனியா மாவட்ட அரச வேலையற்ற பட்டதாரிகளை பதிவு செய்யும் நடவடிக்கைகள் நேற்று முன்தினம் தொடக்கம் வவுனியா மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள பொதுமக்கள் தொழில் சேவை மத்திய நிலையத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வட மாகாண வேலையற்ற பட்டதாரிகள் சமூகத்தின் வவுனியா மாவட்ட பிரதி நிதி தெரிவித்துள்ளார். இப்பதிவானது தினமும் காலை 9 மணி தொடக்கம் மாலை 4.30 மணி...

மிதிபலகை பயணம் இருவர் காயம்

வேகக்கட்டுப்பாட்டை இழந்த சிற்றூர்தி (மினிபஸ்) வீதியின் அருகில் இருந்த மின் கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் சிற்றூர்தியில் பயணம் செய்த ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு மற்றுமொருவர் சிறு காயங்களுக்கும் உள்ளாகியுள்ளார்.இச் சம்பவம் நேற்று காலை 7.40 மணியளவில் மானிப்பாய் வீதி சண்டிலிப்பாய் சந்தியில் இடம்பெற்றுள்ளது. இதில் மாதகல் துறைமுகத்தை...

அரச பல்கலைக்கழகத்துக்கு மீண்டும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்

அரச பல்கலைக்கழகங்களிலுள்ள விஞ்ஞானம் மற்றும் விவசாயம் ஆகிய பீடங்களுக்கு இம்முறை கல்வியாண்டுக்கு மாணவர்களின் விண்ணப்பங்கள் போதியளவு கிடைக்கப் பெறாதுள்ளதாகவும், இதனால் மீண்டும் அவற்றுக்கு எதிர்வரும் 23 ஆம் திகதி வரை தகுதியான மாணவர்கள் விண்ணப்பிக்க முடியும் எனவும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. அரச பல்கலைக்கழகங்களின் விஞ்ஞான பீடாதிபதிகள் இதற்கு தமது விருப்பத்தை தெரிவித்துள்ளனர். பல்கலைக்கழக...

சேதம், இழப்பு இன்றி கப்பல் மீட்கப்பட்டமை இராஜதந்திர வெற்றி- அரசாங்கம்

சோமாலிய கடற்கொள்ளையர்களினால் கடத்தப்பட்ட கப்பலையும் அதிலிருந்த எட்டு இலங்கையர்களையும் எந்தவிதமான ஆபத்துக்களும் இன்றி மீட்க முடிந்தமை இலங்கை அரசாங்கத்தின் இராஜதந்திர வெற்றியாகும் என வௌிவிவகார பிரதியமைச்சர் ஹர்ஷ த சில்வா தெரிவித்துள்ளார். எரிஸ் – 13 எனும் கப்பல் கடற் கொள்ளையர்களிடம் இருந்து மீட்கப்பட்டமையை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர்...

யாரையும் பாதிக்காத வகையில் இனப்பிரச்சினை தீர்வு எட்டப்படும்: பிரதமர்

தமிழ், சிங்கள எந்த இனத்தவருக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் மதனவாசனின் நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய பிரதமர், இனப்பிரச்சினைக்கான தீர்வில் தமக்கு பாதிப்பு ஏற்படுமா...

இலங்கை குறித்த ஐ.நா. அறிக்கை வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்படும் சாத்தியம்

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் கடந்த 2015ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட பிரேரணையை முழுமையாக அமுல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி எதிர்வரும் வாரத்தில் வெளியிடப்படவுள்ள இலங்கை தொடர்பான பிரேரணையானது, இம்முறையும் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்படும் சாத்தியம் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த பிரேரணைக்கு இதுவரை 12 நாடுகள் இணை அனுசரணை வழங்கியுள்ள நிலையில், மேலும் பல நாடுகள் இந்த வரைவுக்கு...

அனைத்து பல்கலைக்கழக மாணவர்களும் போராட்டத்திற்கு ஆதரவு கொடுங்கள்

அனைத்து பல்கலைக்கழக மாணவர்களும் கேப்பாபுலவில் நில மீட்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களிற்கு ஆதரவு வழங்கவேண்டும் என யாழப்பல்கலைக்கழக முகாமைத்து பீட மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கேப்பாபுலவு மக்களின் சொந்த நிலத்தை மீட்பதற்கான தொடர் போராட்டம் நேற்று பதினேழாவது நாளாக நடைபெற்றது. 138 குடும்பங்களுக்கு சொந்தமான 482 ஏக்கர் காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு...

கனடா விசா முறையில் மாற்றமில்லை

வீசா இன்றி இலங்கை பிரஜைகள் கனடாவிற்கு செல்ல முடியும் என வெளியான செய்தியில் எவ்வித உண்மையும் இல்லை என இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. அத்துடன் இலங்கையர்கள் கனடாவுக்குள் பிரவேசிப்பது தொடர்பிலான சட்டங்களில் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை எனவும் அந்த உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. வீசா நடைமுறையில் வழமையான நடைமுறைகளே பின்பற்றப்படுவதாக அந்த உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. இதேவேளை...

சர்வதேச நீதிபதிகளின் தலையீடு அவசியம் என்பதில் மாற்று கருத்து இல்லை

இலங்கையில் இடம்பெற்ற யுத்தக் குற்றச்சாட்டுக்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேச நீதிபதிகளின் தலையீடுகளுடன் விசாரணை மேற்கொள்ளப்படுவது அவசியம் என்பதில் மாற்று கருத்து இல்லை என தமிழ்த் தேசிய கூட்டமைப்பு மீண்டும் வலியுறுத்தியுள்ளது. சர்வதேச நீதிபதிகளை உள்ளடக்கிய விசாரணையை மேற்கொள்வதற்கு அரசமைப்பில் எந்தவித தடையும் இல்லை எனவும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. ஸ்ரீலங்காவின்...

காணாமல் போனவர்கள் அனைவரும் கொல்லப்பட்டிருக்கலாம்!

காணாமல்போனவர்கள் அல்லது கடத்தப்பட்டவர்கள் அன்றைய தினமே கொல்லப்பட்டிருக்கலாம் என வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். வெளிவிவகார அமைச்சில் நேற்று முன்தினம் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே காணாமல் போனவர்கள் தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் அவர் தெரிவிக்கையில், காணாமல் போனவர்களில் சிலர் வெளிநாடுகளுக்குத் தப்பிச் சென்றிருக்கலாம். எப்படியிருப்பினும், காணாமல் போனவர்களைத் தேடிக்...
Loading posts...

All posts loaded

No more posts