- Wednesday
- May 13th, 2026
வடமராட்சி பகுதியில் வயோதிபர் மீது கும்பல் ஒன்று வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டதில் வயோதிபர் படுகாயமடைந்த நிலையில், பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். வடமராட்சி அல்வாய் மகாத்மா வீதியை சேர்ந்த கு. கந்தசாமி (வயது 72) எனும் வயோதிபரே தாக்குதலுக்கு இலக்காகி உள்ளார். குறித்த வயோதிபரின் வீட்டுக்கு ஞாயிறு இரவு மோட்டார் சைக்கிளில்...
இலங்கை கடற்பகுதிக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டுவந்த 10 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் இன்று (செவ்வாய்க்கிழமை) கைது செய்துள்ளதுடன் படகு ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது. குறித்த கைது நடவடிக்கை நெடுந்தீவு கடற்பகுதியில் முன்னெடுக்கப்பட்டதாகவும் கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
தம்மீது ஏற்பட்ட நம்பிக்கையீனம் காரணமாகவே வேலைவாய்ப்பு வழங்க தனியார் நிறுவனங்கள் மறுப்பு தெரிவிப்பதாக வட மாகாண வேலையற்ற பட்டதாரிகள் கவலை வெளியிட்டுள்ளனர். பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கினால் அரச வேலைவாய்ப்புக்கள் கிடைக்கும் பட்சத்தில் அவர்கள் தனியார் நிறுவனங்களை விட்டு வெளியேறுவுதாக குறித்த நிறுவுனங்கள் தெரிவிப்பதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். வேலைவாய்ப்பை வழங்குமாறு வலியுறுத்தி வட மாகாண வேலையற்ற பட்டதாரிகள்...
வன்னியில் இடம்பெற்ற மூன்றுதசாப்தகால போரில் 150,000 இற்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் கொல்லப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். கொழும்பிலிருந்து வெளியாகும் ஆங்கில நாளிதழான தி ஐலண்ட் பத்திரிகை இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. இந்தியாவின், புதுடில்லியில் அண்மையில் நடைபெற்ற பயங்கரவாதத்திற்கு எதிரான மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே எதிர்கட்சித் தலைவர் இதனைக் கூறியுள்ளதாக அந்த செய்தியில்...
ஐநா அமைதிகாக்கும் படையணியில் பணியாற்றவுள்ள சிறிலங்காப் படையினரின் அணியொன்றுக்கு காங்கேசன்துறையில் ஒத்திகைப் பயிற்சி நடாத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இப்பயிற்சியானது எதிர்வரும் 27ஆம் நாள் காங்கேசன்துறையில் ஆரம்பித்து 9 நாட்கள் 1166 கி.மீ பயணம் செய்து, அம்பாந்தோட்டை மாவட்டத்தில் உள்ள சூரியவெவவில் நிறைவடையவுள்ளது. மாலியில் பணியாற்றும் ஐநாவின் சண்டை வாகனத் தொடரணியில் பணியாற்றவுள்ள சிறிலங்காவின் 15 அதிகாரிகள் மற்றும்...
ஊர்காவற்றுறை, கரம்பன் பகுதியில் 7 மாத கர்ப்பிணி பெண் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் தொடர்பில், உயிரிழந்த பெண்ணின் கணவரின் இரத்த மாதிரிகளைப் பெற்றுக்கொள்ள, ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.எம்.எம்.றியால், உத்தரவிட்டார். ஊர்காவற்றுறை கரம்பன் பகுதியில் 7 மாத கர்ப்பிணியும் 4 வயது சிறுவன் ஒருவரின் தாயான ஞானசேகரம் ஹம்சிகா (வயது...
யாழ்ப்பாணத்தில் தேங்காய் மற்றும் இளநீர் என்பன அதிகூடிய விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. தேங்காய் ஒன்று 70 ரூபாய் தொடக்கம் 80 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்படுவதுடன், இளநீர் 120 ரூபாய் தொடக்கம் 150 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்படுகின்றது. யாழ்ப்பாணத்தில் தற்போது கடும் வரட்சியான காலநிலை நிலவுவதுடன், ஒருவகை வைரஸ் காய்ச்சலும் பரவி வருகின்றது....
“வடக்கு மாகாணத்தின் முல்லைத்தீவு மாவட்டமானது, மிக வேகமாக முன்னெடுக்கப்பட்டுவரும் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்கள், படையினருக்கான நில சுவீகரிப்புக்கள், கடல்வள சுறண்டல்கள், பௌத்த மயமாக்கல் மற்றும் இராணுவ மயமாக்கல் போன்றவற்றினால் விழுங்கப்பட்டு வருகின்றது. முழுமையாக விழுங்கப்படுவதற்கு முன்னர், மாவட்டத்தையும் மக்களையும் காப்பாற்றுவதற்கான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்” என, முல்லைத்தீவு மாவட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்...
நேற்று முன்தினம் (1 9 . ௦ 3. 2 ௦ 1 7 ) இடம்பெற்ற தொலைக்காட்சி நிகழ்வொன்றில் பேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் இலங்கையில் நடந்தது இனப்படுகொலைதான் என்பதற்கான ஆதாரங்கள் தம்மிடம் இல்லை இனக் குறிப்பிட்திருந்தார். இதற்கு பதிலளிக்கும் வகையில் தற்போது ஜெனிவாவில் ஈழத் தமிழர்கள் சார்பில் கலந்துகொண்டிருக்கும் பிரபல சட்டத்தரணி சுஹாஸ்...
ஸ்ரீலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரை நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. எதிர்வரும் ஜூலை மாதம் 17ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளது. கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது பொது அப்போதைய எதிர்க்கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்குமிடையில் இரகசிய ஒப்பந்தம் ஒன்று...
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரான இரா.சம்பந்தன் இன்று எதிர்க்கட்சி தலைவராக செயற்படுகின்றார் என்றால் அதற்கு விடுதலைப் போராட்டமே காரணமென தெரிவித்துள்ள விடுதலைப் புலிகளின் நிர்வாகத்துறை துணை பொறுப்பாளராக செயற்பட்ட இளஞ்சேரனின் மனைவி, ஆனால் அதனை மறந்து சம்பந்தன் செயற்படுகின்றார் என குற்றஞ்சாட்டியுள்ளார். கிளிநொச்சி கந்தசுவாமி கோயில் முன்றலில் ஆரம்பிக்கப்பட்ட காணாமல் போனோரின் உறவினர்களது போராட்டம், இன்று...
பாடசாலை மாணவன் ஒருவரின் கையில் ஆசிரியர் ஒருவர் கற்பூரம் கொழுத்திய சம்பவம் ஒன்று ஹட்டனில் பதிவாகியுள்ளது. ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட பொகவந்தலாவ ரொப்கில் தமிழ் வித்தியாத்தில் தரம் 03ல் கல்வி பயிலும் மாணவன் ஒருவரின் வலது கையில் வகுப்பு ஆசிரியர் கடந்த வெள்ளிக்கிழமை கற்பூரத்தை கொழுத்தியுள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை வகுப்பறையில் மாணவி ஒருவரின் 20 ரூபா...
மாகாணசபைத் தேர்தல்களை பிற்போடுவதற்கான காரணங்கள் எதுவுமே கிடையாது என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். மாகாணசபைகளின் பதவிக்காலம் நிறைவடைந்ததன் பின்னர் அவற்றுக்கான தேர்தலை நடத்தாது, காலம் தாழ்த்த வேண்டியது அவசியமில்லையென குறிப்பிட்டுள்ள அவர் வடமத்திய, சப்ரகமுவ மற்றும் கிழக்கு மாகாணசபைகளின் பதவிக் காலம் இந்த ஆண்டு செப்டெம்பர் மாதத்துடன் பூர்த்தியாவதாக சுட்டிக்காட்டியுள்ளார். உள்ளுாராட்சி...
இலங்கையில் 2017, கடந்த இரண்டு மாத காலப்பகுதிக்குள் மாத்திரம் 55 பேர் எச்.ஐ.வி நோயாளர்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய பாலியல் மற்றும் தடுப்பு பிரிவின் பணிப்பாளர் சிசிர லியனகே தெரிவித்துள்ளார். இதேவேளை, இந்த எச்.ஐ.வி பாதிப்பிற்குள்ளானவர்கள் பெரும்பாலும் ஆண்களே எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எச்.ஐ.வி பரிசோதனைக்காக வருவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில்...
நாட்டில் உள்ள அமைச்சுக்களில் நிலவும் வெற்றிடங்களுக்கு தமிழர்களை நியமித்தால், பட்டதாரிகள் தெருவில் நிற்கும் நிலை ஏற்படாது என்று சிறுவர் மகளிர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார். தற்போதைய சூழ்நிலையில் அதிகளவில் பட்டம் பெற்று வெளியேறிய பெண்கள் உட்பட பட்டதாரிகள் வீதியில் நிற்பது வேதனையளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கிளிநொச்சியில் நேற்றையதினம் இடம்பெற்ற நில மெஹெவர...
ஸ்ரீலங்காவில் இறுதிக்கட்ட யுத்தத்தின் இறுதி தருணங்களில் படையினரிடம் எவரும் சரணடைந்ததற்கான ஆதரங்கள் எவையும் இல்லை என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். கொழும்பிலுள்ள ஆங்கில ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். கிராமங்களிலுள்ள தமிழர்களுக்கு ஸ்ரீலங்கா ஜனாதிபதி மற்றும் பிரதமரின் பெயரே தெரியாது, அவ்வாறான நிலையில் எவ்வாறு இராணுவ அதிகாரியைச் சுட்டிக்காட்டி...
கனடா ரொறன்ரோ மாநகர முதல்வர் ஜோன் ரொறி வடமாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான குழுவினருடன் நேற்று ஞாயிற்றுக்கிழமை (19.03.2017) முல்லைத்தீவின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று பொதுமக்கள் சந்திப்பு ஒன்றை நிகழ்த்தியுள்ளார். கனடா ரொறன்ரோ மாநகர சபைக்கும் யாழ் மாநகர சபைக்கும் இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்று இன்று ஞாயிற்றுக்கிழமை (19.03.2017) கைச்சாத்திடப்பட்டுள்ளது. யாழ் பொது நூலக...
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் மீது நம்பிக்கையிழந்த மறைந்த முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ்காந்தி அவரைச் சுட்டுக்கொல்லுமாறு இந்திய இராணுவத்தினருக்கு கட்டளை பிறப்பித்ததாக கருணா என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளீதரன் தெரிவித்துள்ளார். பத்திரிகையொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில், விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் இந்தியாவுக்குச் சென்று தாக்குதலில் ஈடுபடுவதில்லையென சமாதான ஒப்பந்தம்...
யாழ்ப்பாணத்தில் ஒருமாதகாலமாக புதியதொரு சுவாசம் தொடர்புபட்ட நோய் பரவிவருவதாக யாழ். போதனா வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவு பொறுப்பு வைத்திய அதிகாரி வைத்தியர் ஜமுனாநந்தா தெரிவித்துள்ளார். அத்துடன் இந்நோயினால் சராசரியாக நாளொன்றுக்கு 1000 பேர் வரையில் சிகிச்சைக்கு வந்துசெல்வதாகவும் தெரிவித்துள்ளார். இந்நிலையில் இந்நோயின் தாக்கம் தொடர்பாகவும், அதனை தவிர்ப்பதற்கான வழிமுறைகள் தொடர்பாகவும் வைத்தியர் ஜமுனாந்தா தெரிவித்ததாவது, தற்போது...
கிளிநொச்சியில் 28 ஆவது நாளாக தொடர் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளை நேற்று காலை வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். இதன்போது, காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் முதலமைச்சரின் காலில் விழுந்து தமது உறவுகளை மீட்டுத் தருமாறு கதறி அழுதுள்ளனர். அத்துடன் தமது உறவுகளின் விடுதலைக்கு முதலமைச்சர் முயற்சி எடுக்கவேண்டுமெனவும், தங்களுக்காக குரல்கொடுக்கவேண்டுமெனவும் அவரின்...
Loading posts...
All posts loaded
No more posts
