இன்புளுவன்சா நோய்க்கான மருந்துகளுக்கு தட்டுப்பாடு என்ற செய்தி பொய்யானது

இன்புளுவன்சா நோயாளிகளுக்கு வழங்கும் டெம்ப்லு மருந்துக்கு எந்தவொரு பற்றாக்குறையும் இல்லை என, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ஜெயசுந்தர பண்டார தெரிவித்துள்ளார்.

டெங்கு, வைரஸ் காய்ச்சல் மற்றும் இன்புளுவன்சா போன்ற நோய்களுக்கு வழங்கும் குறித்த மருந்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக, அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் குற்றம்சாட்டியிருந்தது.

இது குறித்து அச் சங்கத்தால் வௌியிடப்பட்ட அறிக்கையிலேயே இந்த விடயம் கூறப்பட்டிருந்தது.

எனினும், இந்தக் குற்றச்சாட்டுக்கள் முற்றாக பொய்யானது என, ஜெயசுந்தர பண்டார சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், டெம்ப்லு மருந்துகள் இன்புளுவன்சா நோயாளிகளுக்கு மட்டுமே பாவிக்கப்படுவதாகவும், அவை டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சலுக்கு பயன்படுத்துவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Posts