Ad Widget

காணாமல்போனோர் அலுவலகம் தொடர்பில் ஜனாதிபதியே முடிவெடுப்பார்: பாதுகாப்பு செயலாளர்

காணாமல்போனோர் அலுவலகத்தை அமைப்பது குறித்த சட்டம் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விரைவில் முடிவெடுப்பார் என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.

நேற்று (செவ்வாய்கிழமை) கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

“காணாமல்போனோர் அலுவலகத்தை நிறுவும் சட்டம் கடந்த வருடம் இறுதிப் பகுதியில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதில் குறிப்பிடப்பட்டுள்ள சில விடயங்கள் தொடர்பில், குறிப்பாக இராணுவ முகாம்களுக்குள் தேடுதல் நடத்துதல் உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக, பாதுகாப்புத் தரப்பினர் ஆட்சேபனைகளை எழுப்பியிருந்தனர்.

காணாமல்போனோர் அலுவலக சட்டத்தில் எந்த விடயங்களில் தமக்கு ஆட்சேபனைகள் உள்ளன என்பதைக் குறிப்பிட்டு 15 பக்கத்திலான ஆவணத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம், பாதுகாப்பு அமைச்சின் செயலர் என்ற வகையில் நான் கையளித்திருந்தேன். விரைவில் பதில் வழங்குவதாக ஜனாதிபதி மைத்திரிபால தெரிவித்துள்ளார்” என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி மேலும் தெரிவித்தார்.

Related Posts