வடக்கு, கிழக்கு மாகாணத்தில் வேலையில்லா பட்டதாரிகளின் போராட்டத்திற்கு தீர்வினை பெற்றுக்கொடுப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
அதனை முகாமைத்துவ திணைக்களத்திற்கு அனுப்பி அதற்கான வெற்றிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அதற்கான அமைச்சரவையின் அனுமதிகள் கிடைத்த பின்னர் அதற்கான விண்ணப்பக் கோரல்கள் இடம்பெறும் என்று சுமந்திரன் தெரிவித்தார்.
வடமாகாண ஆளுநர் செயலகத்தின் ஏற்பாட்டில் தமிழ், சிங்கள புத்தாண்டில் நாட்டின் தேசிய இன நல்லிணக்கத்திற்கான வகிபாகம் என்னும் தொனிப் பொருளிலான புத்தாண்டு நிகழ்வு நேற்று யாழ்ப்பாண மாவட்டத்தில் அமைந்துள்ள வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் வடமாகாண ஆளுநர் ரெஐினோல்ட் குரே தலைமையில் நடைபெற்றது.
குறித்த நிகழ்வுக்கு பிரதம அதிதியாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.
இதில் வடமாகாணத்தில் பின்தாங்கியுள்ள பாடசாலைகளில் கல்வி கற்றுவரும் 150 மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் ஆளுநர் ரெஐினோல்ட் குரே வழங்கி வைக்கப்பட்டது.
குறித்த நிகழ்வில் யாழ்ப்பாண இந்திய துணைத்தூதுவர் அ.நடராஐன், வடமாகாண பிரதம செயலாளர் அ.பத்திநாதன், வடமாகாண சபையின் அவைத்தலைவர் சி.வி.கே சிவஞானம், வடமாகாண அரச அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இதில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் காணாமல் போனவர்களுக்கான அலுவலகம் தான் சட்டமாக நிறைவேற்றப்பட்டது.
நிலைமாறு நீதிக்கான கொள்கையில் முதலாவது விடயமாக உள்ளது.
அதன்பின்னர் தற்போதைய நடைமுறையில் அது நிறைவேற்றப்பட்டு இருக்கின்றது.
அதில் ஆகஸ்ட் மாதம் வரை அது இன்னும் நடைமுறைப்படுத்த வில்லை அது நிறைவேறும் வேளையில் அன்று பாராளுமன்றத்தினால் ஜே.வி.பி யினர் கொண்டு வந்துள்ள திருத்தம் அன்றைக்கு செயற்படுத்தவில்லை.
அதனை நடமுறைப்படுத்த வேண்டும் என்று அரசாங்கத்திடம் கோரியுள்ளனர்.
அதன் திருத்தத்தினை வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டு இருக்கின்றது.
அது பாராளுமன்றத்தில் சமர்க்கப்பட்டு அது நிறைவேற்றப்படும். அதன் மூலமாக உடனடியாக அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஐனாதிபதி தமக்கு தெரிவித்துள்ளதாக குறிப்பிட்டார்.
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இடம்பெறும் மக்கள் காணிகள் தொடர்பான போராட்டத்தில் நாங்கள் ஐனாதிபதியிடம் கதைத்தோம்.
அதன் பின்னர் பாதுகாப்பு தலைமையகம், படைத் தளபதிகளுடன் பேச்சுவார்த்தையினை நடாத்தியுள்ளோம்.
தொடர்ந்து வட மாகாணத்தில் உள்ள இராணுவ படைத்தளபதி இருக்கும் இடங்களிலும் அதில் உள்ள மக்கள் பிரதி நிதிகளையும் சேர்த்து உடனடியாக விடுவிக்க வேண்டிய இடங்களை விடுக்க வேண்டிய செயற்பாடுகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.
இது தொடர்பாக பேச்சுவார்தையினை நாளை முல்லைத்தீவு, கிளிநொச்சி, யாழ்ப்பாணம், மன்னார், வவுனியா ஆகிய மாவட்டங்களில் நடத்தி மற்றும் கிழக்கு மாகாணத்திலும் இதனைப்பற்றி நடைமுறைப்படுத்தி விட்டு வரைபடங்களோ உடனடியாக விடுவிக்கப்ப வேண்டிய இடங்கள் பற்றியும் ஆராயப்படவுள்ளது.