Ad Widget

வடக்கு முதல்வர் பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் என்கிறது கத்தோலிக்க திருச்சபை

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.விக்னேஸ்வரன் இயேசுக்கிறிஸ்துவை விமர்சித்து கருத்து வெளியிட்டமைக்கு பகிரங்கமாக மன்னிப்பு கோர வேண்டும் என கத்தோலிக்க திருச்சபை தெரிவித்துள்ளது.

பாலியல் வழக்கில் சிக்கியுள்ள பிறேமானந்த சுவாமியுடன் இயேசுவை ஒப்பிட்டு, வடக்கில் இருந்து வெளிவரும் பத்திரிகை ஒன்றுக்கு விக்னேஸ்வரன் வழங்கிய செவ்வி தொடர்பில் அந்த சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கருத்து வெளியிட்டு இயேசுக்கிறிஸ்துவை கேவலப்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ள கத்தோலிக்க திருச்சபை, இதனை கத்தோலிக்க இறை மக்களும், கத்தோலிக்க திருச்சபையும் வன்மையாக கண்டிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது.

இது போன்ற பிழையான கருத்துக்களை பகிர்ந்துகொள்ளக்கூடாது என்பதனையும் அவருக்கு தெரிவித்துக்கொள்வதாக மன்னார் மறைமாவட்ட கத்தோலிக்க ஒன்றியத்தின் தலைவரும், மன்னார், யாழ். மறைமாவட்ட சட்ட ஆலோசகருமான சிரேஷ்ட சட்டத்தரணி ப. அன்ரன் புனிதநாயகமும் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் பதவி என்பது எல்லா மக்களுக்குமான சேவையை செய்யக்கூடிய பதவி எனவும் இதன்போது இன மத பேதமின்றி செயற்பட வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related Posts