சூடான காலநிலை அடுத்த மாதம் முதல் வாரம் வரை தொடரும்

நாட்டில் தற்பொழுது காணப்படும் சூடான காலநிலை அடுத்த மாதம் முதல் வாரம் வரை நீடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

எமது நாட்டுக்கு சூரியன் உச்சம் கொடுத்திருப்பதும், மாலை நேரத்தில் பெய்வதற்கிருந்த மழை பெய்யாமல் இருப்பதும், மழை மேகங்கள் உயர்ந்திருப்பதும், காற்று குறைந்து காணப்படுவதும் இந்த சூடான கால நிலைக்கு காரணமாகும் எனவும் திணைக்களம் மேலும் கூறியுள்ளது

Related Posts