Ad Widget

மின்னஞ்சல் வைரஸ் குறித்து எச்சரிக்கை

மின்னஞ்சல் (email) வடிவத்தில் புதிய கணினி வைரஸ் இணையளத்தளங்களில் பரவிவருவதாக, இலங்கை கணினி அவசர நடவடிக்கைச் செயலணி அறிவித்துள்ளது.

ஆகையால், உங்களுடைய மின்னஞ்சலுக்கு வரும், சந்தேகத்துக்கு இடமான மின்னஞ்சலைத் திறக்கவேண்டாம் என்றும் அவ்வாறு இருதாலே, அது பாதுகாப்பானதாகும் என்றும் அந்த செயலணியின் தலைமை தகவல் பொறியியலாளர் ரொஷான் சந்திராகுப்தா தெரிவித்தார்.

இந்த வைரஸ், ரன்சொம்வேர் (Ransomware) என்று இனங்காணப்பட்டுள்ளது. உங்களுடைய கணினிக்கு கிடைக்கும் மின்னஞ்சலை திறக்கும் போது, கணினியானது வைரஸினால் பாதிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

செய்தி, காணொளிகள், பீடீஎப் கோப்புகள் என பலவகையான பெயர்களில் கிடைக்கும் போலியான மின்னஞ்சல்கள் புதிய வைரஸ் இருக்கும் என்றும் அந்த செயலணி தெரிவித்துள்ளது.

கணினிக்குள் இந்த வைரஸ் புகுந்துகொண்டால், கணினியில் இருக்கின்ற சகல ஆவணங்களின் கோப்புகள், படங்கள், மின்னஞ்சல் செய்திகள் ஆகியன, மீளவும் செயற்படுத்த முடியாத அளவுக்கு, மறைந்துகொள்ளும் என்றும் அவர் தெரிவித்தார்.

எனினும், உங்களுடைய கணினியில் இருக்கின்ற, முக்கியமான ஆவணங்கள் அடங்கிய கோப்புகள், படங்கள் உள்ளிட்டவற்றை, பிறிதொரு இடத்தில், பிரதிசெய்து வைத்துகொள்ளுதல் உசித்தமானதும் பாதுகாப்பானதும் ஆகும்.

இதேவேளை, உங்களுடைய கணினியில் இருக்கின்ற வைரஸ் அட்டையை, அடிக்கொருதடவை புதுப்பித்துக் கொள்வது உகந்ததாகும் என்றும் அவர் அறிவுரை வழங்கியுள்ளார்.

இந்த வைரஸ், கணினிகள் சிலவற்றை தாக்கியுள்ளதாக, முறைப்பாடுகள் சில கிடைக்கப்பெற்றுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.

Related Posts