- Monday
- May 18th, 2026
அநுராதபுரம் சிறைச்சாலையில் ஒரு மாதமாகத் தொடர்ச்சியாக உணவு ஒறுப்பிலுள்ள அரசியல் கைதிகள் மூவரின் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி யாழ்ப்பாணம் நகர பஸ் நிலையம் முன்பாக கவனயீர்ப்புப் போராட்டம் தற்போது நடைபெற்று வருகிறது. புதிய மாக்சிச லெனின் கட்சியின் ஏற்பாட்டில் இடம்பெறும் இந்த கவனயீர்ப்புப் போராட்டத்தில் பெருமளவானோர் கலந்துகொண்டுள்ளனர். செங்கன் எனப்படும் இராசதுரை...
மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் கடந்த 2 வாரங்களில் 3 வீடுகளுக்குள் புகுந்து வாள்வெட்டுக் கும்பல் அடாவடித்தனத்தில் ஈடுபட்டுள்ளது. அவை தொடர்பில் பாதிக்கப்பட்டவர்களால் முறைப்பாடு செய்யப்பட்ட போதும் எவரும் நேற்று மாலைவரை கைது செய்யப்படவில்லை. மானிப்பாய் நவாலி சந்தை வீதியிலுள்ள வீடொன்றுக்குள் நேற்று முன்தினம் இரவு 8.30 மணியளவில் புகுந்த வாள்வெட்டுக் கும்பல், அங்கிருந்த பொருள்களை...
யாழ்ப்பாணம் அரியாலை கிழக்குப் பகுதியில் சுட்டுக்கொல்லப்பட்ட இளைஞனின் சடலம் நேற்றயதினம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது. இனந்தெரியாதோரால் நேற்று முன்தினம் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் படுகாயமடைந்த டொன் பொஸ்கோ ரிக்மன், யாழ். போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு உயிரிழந்தார். நேற்று (திங்கட்கிழமை) பிற்பகல் பிரேத பரிசோதனை இடம்பெற்றதைத் தொடர்ந்து, சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது. இதன்போது,...
இலங்கை அரசாங்கம் தொடர்ந்தும் அசமந்தப் போக்கினைக் கடைப்பிடிக்குமானால் கடுமையான சர்வதேச அழுத்தங்களைச் சந்திக்க நேரிடும் என ஐ.நா.வின் விசேட அறிக்கையாளர் பப்லோ டி கிரிப் தெரிவித்துள்ளார். இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டிருந்த ஐ.நா.வின் விசேட அறிக்கையாளர் பப்லோ டி கிரிப் பல்வேறு தரப்பினரையும் சந்தித்துக் கலந்துரையாடியிருந்த நிலையில், நேற்று (திங்கட்கிழமை) நடத்திய செய்தியாளர் மாநாட்டிலேயே இதனைக்...
இலங்கையின் அநுராதபுரம் சிறைச்சாலையில் கடந்த ஒரு மாத காலமாக உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தமிழ் அரசியல் கைதிகளின் பிரச்சினைக்கு இதுவரை எவ்வித தீர்வும் கிடைக்காத நிலையில், கொழும்பு புதிய மகசீன் சிறைச்சாலையிலுள்ள அரசியல் கைதிகளும் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர். உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல்...
வவுனியா உக்குளாங்குளம் பகுதியில் அமைந்துள்ள மாதா சிலை விசமிகளால் உடைத்து எரிக்கப்பட்டுள்ளது. இச் சம்பவம் பிரதேசத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. உக்கிளாங்குளம் பகுதியில் கடந்த 25 வருடங்களுக்கும் மேலாக காணப்படும் வேளாங்கன்னி மாதா சிலை, அப்பகுதி கிறிஸ்தவ மக்களின் வணக்கஸ்தலமாகவும் காணப்படுகிறது. இந்நிலையில், சிலை வைக்கப்பட்டிருந்த கண்ணாடிக் கூட்டை உடைத்து, நேற்றிரவு சில விசாமிகள் அதற்கு எரியூட்டிச்...
யாழ்ப்பாணம் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் ஒன்றிணைப்போடு கடலோர பாதுகாப்புத் துறை மற்றும் லயன்ஸ் கழகத்தினரின் 306B2 பங்களிப்போடு பாரிய அளவிலான முக்கியத்துவம் பெற்ற கடற்கரைப் பாதுகாப்பு திட்டம் நடைபெற்றது. யாழ் மயிலிட்டி மீன்பிடித் துறைமுக வளாகத்தில் கடந்த சனிக்கிழமை இடம் பெற்ற இந்த நிகழ்வில் கடலோரப் பாதுகாப்புத் திணைக்களத்தினால் விடுக்கப்பட்ட வேண்டுகோளிற்கிணங்க யாழ் பாதுகாப்புப் படைத்...
நோர்வே பிரதிநிதியும் இலங்கைக்கான தூதுவரான தோர்போர்ன் காஸ்டாட்சேதர் யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாரச்சியை சந்தித்தார். யாழ் பலாலி தலைமையகத்தில் அண்மையில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் இருவருக்கும் இடையில் பாதுகாப்பு மற்றும் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி தொடர்பாக கலந்துரையாடல் இடம்பெற்றது. இந்த சந்திப்பினை நினைவுகூறும் வகையில் யாழ் பாதுகாப்பு படைத்தளபதியினால் நோர்வே...
2016/17ஆம் கல்வியாண்டுக்காக பல்கலைக்கழகங்களின் ஒவ்வொரு பீடத்திற்கும் மாணவர்களை பதிவு செய்யும் பணி தற்போது இடம்பெறுகிறது. இதுதொடர்பாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் மொஹான் சில்வா தெரிவிக்கையில் .14 பல்கலைக்கழகங்கள், மூன்று பீடங்கள், ஐந்து உயர்கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றின் 109 பாடநெறிகளுக்கு மாணவர்கள் தெரிவு செய்யப்படுகின்றனர். சாதாரண அனுமதிக்காக தெரிவு செய்யப்படும் மாணவர்களின் எண்ணிக்கை 29...
பாடசாலை சுற்றாடலில் விவசாய உணவு உற்பத்தியை மேற்கொள்ளுமாறு சகல அரச பாடசாலைகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. தேசிய உணவு உற்பத்தித் திட்டத்திற்கு இணைவாக இந்தத் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. நாட்டில் உள்ள பத்தாயிரம் பாடசாலைகளில் 5 ஆயிரத்து 774 பாடசாலைகளில் இந்த விவசாய உற்பத்தியை மேற்கொள்ளக் கூடிய மேலதிக காணிகள் உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. வருமானம் தரக்கூடிய பயிர்களை உற்பத்தி செய்வதற்கு...
ரயில் கடவைகளுக்கு குறுக்காக பயணிக்கும் பொழுதும், ரயில் கடவைகளுக்கு அருகில் வாகனங்களை நிறுத்தும் போது கூடுதல் கவனம் செலுத்துவது அவசியம் என்று அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். ரயில் கடவைகள் தொடர்பாக கவனம் செலுத்தாதவர்களுக்கு எதிராக 25 ஆயிரம் ரூபா தண்டம் விதிப்பதற்கான சட்டம் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்று சிவில் மற்றும் விமானசேவைகள்...
படுகொலை செய்யப்பட்ட புங்குடுதீவு மாணவி வித்தியாவின் தாயார் ஜனாதிபதியை சந்தித்தார். நடமாடும் சேவையில் கலந்து கொள்வதற்காக வவுனியாவிற்கு விஜயம் செய்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அரசாங்கத்தால் வவுனியாவில் வழங்கப்பட்ட வீட்டில் தற்போது வசித்து வரும் வித்தியாவின் குடும்பத்தினரை சந்தித்துள்ளார். குடும்பத்தின் சுகதுக்கங்களை கேட்டறிவதற்காக அவரது வீட்டுக்கு வருகை தருவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் மாணவி...
கொழும்பு - காங்கேசன்துறை வரையான ரயில் சேவை நாவற்குழி ரயில் நிலையம் வரை மட்டுப்படுத்தப்படவுள்ளது. நாவற்குழியில் உள்ள ரயில் பாலத்தில் உள்ள திருத்த பணிகள் இடம்பெறுவதாலே குறித்த பகுதிகளுக்கான ரயில் சேவை இடை நிறுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. மேலும் குறித்த பகுதிகளுக்கான ரயில் சேவை இன்று முதல் எதிர்வரும் 27 ஆம் திகதி வரை,...
அநுராதபுரத்தில் உண்ணாவிரதமிருக்கும் அரசியல் கைதிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றி, அவர்களை விடுவிக்க வேண்டுமென வலியுறுத்தி யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் கையெழுத்துப் போராட்டமொன்றை ஆரம்பித்துள்ளனர்.
யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில், யாழ். பல்கலைக்கழகத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ள இக்கையெழுத்துப் போராட்டம் வட மாகாணம் முழுவமும் மாணவர்களால் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, யாழ்ப்பாணத்தின் பல்வேறு இடங்களிலும் மாணவர்களால் கையெழுத்துகள் பெறப்பட்டமை குறிப்பிடத்தக்கது....
யாழ்ப்பாணத்தில் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி இளைஞன் ஒருவர் உயிரிழந்ததை அடுத்து, அங்கு பதற்றமான சூழல் காணப்படுகின்றது. கொலையாளிகளை கைது செய்யும்வரை உடலை பொறுப்பேற்க போவதில்லையென உறவினர்கள் தெரிவித்ததை அடுத்தே பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், இளைஞனது சடலம் வைக்கப்பட்டுள்ள யாழ். போதனா வைத்தியசாலையில் பெருமளவான பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளார்கள். யாழ்ப்பாணம் – அரியாலை கிழக்கு, உதயபுரம் முதலாம்...
யாழ்ப்பாணம் அரியாலை உதயபுரம் பகுதியில் நேற்றைய தினம் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில், இளைஞர் ஒருவர் படுகாயமடைந்திருந்த நிலையில் மரணமடைந்தார். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்ற நிலையிலேயே சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த நிலையில் நேற்றைய தினம் சம்பவம் இடம்பெற்றபோது அவருடன் கூடவே சென்ற மற்றுமொரு இளைஞர் அது...
தமிழ் பிரதேசங்களை சிங்கள பிரதேசமாக்கும் அரசின் சூழ்ச்சிக்கு, கூட்டமைப்பினர் சிலர் துணைபோவதாக, ஈ.பி.ஆர்.எல.எப். கட்சியின் தலைவர் சுரேஸ் பிரமேச்சந்திரன் குற்றம் சுமத்தியுள்ளார். கூட்டமைப்பு என்கின்ற பேரில், தமிழரசு கட்சி தான்தோன்றித்தனமாக செயற்பட்டு, இவ்வாறான விடயங்களைக் கையாள்வதாகவும் அவர் கூறினார். ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் மத்திய குழு கூட்டம் வவுனியாவில் நடைபெற்றது. இந்த கூட்டத்தின் பின்னர்...
யாழ் இந்திய துணை தூதுவா் ஆர்.நடராஜனின் மகள் பயணித்த வாகனம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) காலை சங்குப்பிட்டியில் விபத்திற்குள்ளாகியுள்ளது. யாழில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த, யாழ் இந்திய துணை தூதுவரின் மகள் சென்ற வாகனம், சங்குப்பிட்டிப் பகுதியில் வைத்து, அதே திசையில் பயணித்த கார் ஒன்றுடன் மோதியுள்ளது. இதன்போது, தனியாருக்கு சொந்தமான கார் தடம்புரண்டது. எனினும்,...
இலங்கையில் பௌத்த மதத்துக்கு முதலிடம் என்பதில் மாற்றம் எதுவும் இல்லை. இதனை ஏனைய இனத்தவர்களும் ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். அதேபோன்று, ஏனைய மதங்களுக்கும் அவற்றுக்குரிய இடம் வழங்கப்படும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கண்டி, மடவல பிட்டியேகெதர ரஜமகா விகாரையில் நேற்று முன்தினம் (21) இடம்பெற்ற மதவழிபாடுகளின் பின்னர் உரை நிகழ்த்தும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்....
அடுத்து வரும் சில தினங்களில் பருவப்பெயர்ச்சி காலநிலையில் படிப்படியாக அதிகரிப்பு நிலை காணப்படும் என வளிமண்டவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. நாட்டின் பல பகுதிகளில், பிற்பகல் 2.00 மணியின் பின்னர், இடியுடன் கூடிய மழை பெய்யும். மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களிலும், யாழ்ப்பாணம், மன்னார், புத்தளம் ஆகிய மாவட்டங்களிலும், காலை வேளையில், மழை பெய்யும். ஊவா...
Loading posts...
All posts loaded
No more posts
