Ad Widget

அரசியல் கைதிகளுக்காக யாழ். நகரில் கவனயீர்ப்பு

அநுராதபுரம் சிறைச்சாலையில் ஒரு மாதமாகத் தொடர்ச்சியாக உணவு ஒறுப்பிலுள்ள அரசியல் கைதிகள் மூவரின் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி யாழ்ப்பாணம் நகர பஸ் நிலையம் முன்பாக கவனயீர்ப்புப் போராட்டம் தற்போது நடைபெற்று வருகிறது.

புதிய மாக்சிச லெனின் கட்சியின் ஏற்பாட்டில் இடம்பெறும் இந்த கவனயீர்ப்புப் போராட்டத்தில் பெருமளவானோர் கலந்துகொண்டுள்ளனர்.

செங்கன் எனப்படும் இராசதுரை திருவருள், மதியழகன் சுலக்சன், கணேசன் தர்சனன் மூவரும் அனுராதபுரம் சிறைச்சாலையில் 8 ஆண்டுகளாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

2013ஆம் ஆண்டு வவுனியா மேல் நீதிமன்றில் இவர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. வழக்கை வவுனியா மேல் நீதிமன்றிலிருந்து அநுராதபுரம் மேல் நீதிமன்றுக்கு சட்டமா அதிபர் திணைக்களம் மாற்றியிருந்தது.

இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த தமிழ் அரசியல் கைதிகள் மூவரும், கடந்த 25ஆம் திகதி முதல் தொடர் உணவு ஒறுப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Related Posts