Ad Widget

பௌத்தத்துக்கு முதலிடம் என்பதில் மாற்றமில்லை : பிரதமர் ரணில்

இலங்கையில் பௌத்த மதத்துக்கு முதலிடம் என்பதில் மாற்றம் எதுவும் இல்லை. இதனை ஏனைய இனத்தவர்களும் ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். அதேபோன்று, ஏனைய மதங்களுக்கும் அவற்றுக்குரிய இடம் வழங்கப்படும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

கண்டி, மடவல பிட்டியேகெதர ரஜமகா விகாரையில் நேற்று முன்தினம் (21) இடம்பெற்ற மதவழிபாடுகளின் பின்னர் உரை நிகழ்த்தும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

பிரதமர் அங்கு மேலும் கருத்து வெளியிடுகையில்,

“அரசமைப்பு தொடர்பில் சிலர் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். எனினும் இதுவரை புதிய அரசமைப்பு தயாரிக்கப்படவில்லை. அரசமைப்புக்கான உபகுழு நியமிக்கப்பட்டு எதிர்காலத்தில் எவ்வாறு அதனை உருவாக்குவது என்பது தொடர்பில் ஆராயப்படுகிறது. அதற்கான திட்ட வரைபு பற்றியே பேசி வருகிறோம். இம்மாதம் 30,31 மற்றும் நவம்பர் முதலாம் திகதிகளில் இது தொடர்பில் விரிவாக ஆராயவுள்ளோம். மகாசங்கத்தினர் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரதும் கருத்துகள் இதன்போது உள்வாங்கப்படவுள்ளன” எனத் தெரிவித்தார்.

Related Posts