- Monday
- May 18th, 2026
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதியொருவர், 18 வருடங்களின் பின்னர் இன்று (வியாழக்கிழமை) விடுதலை செய்யப்பட்டுள்ளார். கனகரத்தினம் ஜீவரட்னம் என்ற குறித்த அரசியல் கைதி, கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டுள்ளார். எவ்வித வழக்கு விசாரணைகளும் அற்ற நிலையில், கடந்த 18 வருட காலமாக இவர் தடுத்துவைக்கப்பட்டிருந்ததோடு, ஆரம்பத்தில் திருகோணமலை...
முல்லைத்தீவு மக்களின் காணியை நிரந்தரமாக சுவீகரிப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட நில அளவீட்டு முயற்சி, மக்களின் கடும் எதிர்ப்பைத் தொடர்ந்து கைவிடப்பட்டுள்ளது. வட்டுவாகல் கடற்படை முகாம் அமைந்துள்ள மக்களுக்குச் சொந்தமான காணி, மக்களிடமிருந்து சுவீகரிக்கப்பட்டிருந்த நிலையில், அவற்றை அளவிடுவதற்கு அரச அதிகாரிகள் சென்றுள்ளனர். இதனை அறிந்த மக்கள், முல்லைத்தீவு – பரந்தன் வீதியை மறித்து கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்....
யாழ்ப்பாண மாவட்டத்தில் மீள்குடியமர்ந்த மக்களுக்கான வீட்டுத் திட்டத்தில் முஸ்லிம் மக்கள் புறக்கணிக்கப்படுவதாகத் தெரிவித்தும் முஸ்லிம்களுக்கான வீட்டுத் திட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு வலியுறுத்தியும் கவனவீர்ப்பு போராட்டம் ஒன்று யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்றது. யாழ்ப்பாணம் மாவட்ட முஸ்லிம் சமூகம் ஏற்பாடு செய்திருந்த இந்த கவனவீர்ப்பு போராட்டம் இன்று காலை யாழ்ப்பாண மாவட்ட செயலகத்துக்கு முன்பாக இடம்பெற்றது. “2016ஆம் ஆண்டு...
வடக்கு மாகாணத்தில் தொண்டர் ஆசிரியர்களால் கடமையாற்றியோரில் ஆசிரியர் சேவைக்குள் உள்ளீர்க்க மத்திய கல்வி அமைச்சால் அனுமதிக்கப்பட்ட 182 பேரின் நியமனத்தை இந்த மாத இறுதிக்குள் வழங்க வடக்கு மாகாண சபை நடவடிக்கை எடுக்கவேண்டும்” இவ்வாறு வலியுறுத்தி சம்பந்தப்பட்ட தொண்டராசிரியர்கள் இன்று வடக்கு மாகாண சபைக்கு முன்பாக கவனவீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். வடமாகாண சபையின் 105ஆவது அமர்வு...
கிளிநொச்சியின் வட்டக்கச்சி, இராமநாதபுரம் மாணவர்கள் பேருந்துகளில் பயணிக்கின்ற போது தொடர்ந்தும் பாலியல் ரீதியில் துன்புறுத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த பகுதி மாணவர்கள் தனியார் கல்வி நிலையங்களிற்கு மாலை நேர வகுப்புக்களுக்கு சென்று வருகின்ற நிலையில், இவ்வாறான பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாவதாக பெற்றோர் விசனம் வெளியிட்டுள்ளனர். கிளிநொச்சி மாவட்டத்தின் வட்டக்கச்சி இராமநாதபுரம் கல்மடுநகர் ஆகிய பகதிகளிலும் வன்னேரிக்குளம் ஸ்கந்தபுரம்,...
கிளிநொச்சி இரணைதீவு பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் நில அளவீடு தொடர்பில் மக்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். குறிப்பாக, நில அளவீட்டின் போது, காணிகளை அடையாளப்படுத்துவதற்காக பொதுமக்கள் சிலரையும் அழைத்துச் செல்வதாக அதிகாரிகள் அறிவித்திருந்தனர். எனினும், தமக்குத் தெரியாமல் தற்போது இரணைதீவில் அளவீட்டுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக மக்கள் தெரிவிக்கின்றனர். இச் செயற்பாடானது, தமது பூர்வீக பகுதியில் அடையாளம்...
யாழ். திருநெல்வேலியிலிலுள்ள தனியார் வைத்தியசாலையில் கண் புரை நீக்கி சத்திரசிகிச்சை மேற்கொண்டபோது, கண்ணில் கிருமித் தொற்று ஏற்பட்டமையால் பாதிக்கப்பட்ட ஒன்பது பேரில், ஐந்து பேரை மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு வைத்தியசாலைக்கு மாற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளபடுவதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர். குறித்த தனியார் வைத்தியசாலையில் கடந்த சனிக்கிழமை கண்புரை நீக்கி சத்திரசிகிச்சை மேற்கொண்டவர்கள் ஒன்பது பேர், கிருமித் தொற்று...
யாழ்ப்பாண மணியந்தோட்டம், உதயபுரம் பகுதியில் இளைஞன் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள, கொழும்பில் இருந்து விசேட குற்றத் தடுப்பு விசாரணை அதிகாரிகள், யாழ்ப்பாணத்துக்குச் செல்லவுள்ளனர். இந்த குற்றத்தடுப்பு விசாரணை அதிகாரிகள் குழு, பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜெயசுந்தரவால் நியமிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம், மணியந் தோட்டம், உதயபுரம் பகுதியில், அடையாளம் தெரியாத சிலர்,...
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அவசர விபத்துக்கள் மற்றும் அவசர சிகிச்சை பிரிவின் இரண்டாம் கட்ட நிர்மாண பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சரும் அமைச்சரவை துணைப்பேச்சாளருமான தயசிறி ஜயசேகர தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டிலேயே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில், திடீர் விபத்து மற்றும் அவசர...
யாழ்ப்பாணத்தில் கிணறு ஒன்றில் இருந்து ஒருதொகை வெடிகுண்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக கொடிகாமம் பொலிஸார் நேற்று (25) தெரிவித்துள்ளனர். குறித்த வெடிபொருட்கள் கொடிகாமம் கச்சாய் பகுதியில் உள்ள கிணற்றில் இருந்தே மீட்கப்பட்டுள்ளன. 13 வெடிக்குண்டுகள், 60 கைக்குண்டுகள், 06 மோட்டார் குண்டுகள் இவற்றில் உள்ளடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணத்தில் சிறப்பு அதிரடிபடையினரால் வெடிகுண்டுகள் மீட்கப்பட்டு அரியாலைப்பகுதியில் நேற்று பாதுகாப்பாக...
வவுனியாவில் நேற்று காலை 10.30மணியளவில் கடுகதி ரயிலில் மோதுண்டு மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்த மேலும் தெரியவருகையில், நேற்று காலை வவுனியா ஈரப்பெரியகுளம் பகுதியில் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற கடுகதி ரயிலில் மாணவன் ஒருவர் காதில் கெட் செட் போட்டுக்கொண்டு சென்றபோது கடுகதி ரயிலில் மோதியதில் உயிரிழந்துள்ளார். வவுனியா அவுசுதுபிட்டிய பகுதியைச் சேர்ந்த...
இலங்கை கடற்படையின் புதிய தளபதியாக ரியர் அட்மிரல் எஸ்.எஸ். ரணசிங்க நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி செயலாளரால் அவருக்கான நியமனக் கடிதம் நேற்று கையளிக்கப்பட்டுள்ளது. அவரின் நியமனம் இன்று முதல் அமுலுக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடற்படைத் தளபதியாக பதவி வகித்த வைஸ் அட்மிரல் ட்ரெவிஸ் சின்னையா ஓய்வு பெற்றதையடுத்தே, இந்த புதிய நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
இன்னும் இருபது வருடங்களில் தமிழ் மொழி மறைந்து தமிழிஸ் என்ற புது மொழி வழக்கத்திற்கு வந்துவிடும் நிலை உருவாகியுள்ளதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கவலை வெளியிட்டுள்ளார். கொழும்பு இராமநாதன் மகளிர் கல்லூரியில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் உரையாற்றுகையில், முன்பு வானொலி ஒலிபரப்புக்களில் பேசப்படுகின்ற தமிழ்...
“வடமாகாண சபையின் அமைச்சரவை மாற்றப்பட்ட பின்னரும் மாற்றங்கள் எதனையும் காணவில்லை. குறைந்தபட்சம் மாற்றங்கள் நிகழ்வதற்கான சமிக்ஞைகள் கூடத் தெரியவில்லை” எனத் தெரிவித்த, அச்சபையின் எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா, “அமைச்சரவை மாற்றம் தொடர்பாக சுருக்கமாகக் கூறினால், முன்னர் கொழுக்கட்டை சாப்பிட்டோம், இப்போது மோதகம் சாப்பிடுகிறோம். அதுவே வித்தியாசம்” என்றும் தெரிவித்துள்ளார். சமகால அரசியல் நிலைமைகள் தொடர்பாக யாழ்.ஊடக...
வட மாகாண பொதுச் சேவைகள் ஆணைக்குழுவினால் அமுல்படுத்தப்படும் தீர்மானங்களை நடைமுறைப்படுத்துதில் அதிகாரிகள் அசமந்தப் போக்கு காட்டுவதாக பத்திரிக்கைகளில் வெளியான செய்திகள் தொடர்பில் ஆளுநர் நேற்று (24) கூடிய கவனம் செலுத்தியுள்ளார். கடந்த ஆவணி மாதம் புதிதாக ஆளுநரால் நியமிக்கப்பட்ட ஐந்து உறுப்பினர்களை கொண்ட பொதுச் சேவைகள் ஆணைக்குழு ஏறத்தாழ 150 பிரச்சினைகளுக்கான தீர்வினை கண்டறிந்துள்ளது. இருந்தபோதும்,...
நடுக்கடலில் இராமேஸ்வரம் மீனவர்களின் படகுகளை சுற்றிவளைத்த, இலங்கை கடற்படையினர், வலைகளை அறுத்து வீசி, அவர்களை விரட்டியடித்துள்ளதாக, இந்திய ஊடகச் செய்திகள் குறிப்பிட்டுள்ளன. கடலுக்கு மீன் பிடிக்க செல்லும் தமிழக மீனவர்கள் எல்லை தாண்டிய குற்றச்சாட்டில் அவ்வப்போது, இலங்கை கடற்படையினரால் கைதுசெய்யப்படுகின்றனர். இதுவரை 55 மீனவர்கள் இலங்கை சிறைகளில் உள்ளனர். 130 படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்தநிலையில்,...
யாழில். உள்ள பிரபல தனியார் வைத்திய சாலையில் கண் சத்திரசிகிச்சை மேற்கொண்ட ஒன்பது பேர் கண்ணில் கிருமி தொற்றுக்கு உள்ளாகி உள்ளனர். யாழில்.உள்ள பிரபல தனியார் வைத்திய சாலையில் கடந்த சனிக்கிழமை காலை கண்ணில் ” கற்ராக் ” சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அதன் போது ஏற்பட்ட கிருமி தொற்றினால் அன்றைய தினம் கண்ணில் சத்திர...
தமிழரின் பாரம்பரிய உடையான வேட்டியை அணிந்தே விமானம் ஓட்டுவேன் என வாதிட்டு, ஈழத் தமிழர் ஒருவர் அமெரிக்காவில் வேட்டி கட்டி விமானம் ஓட்டி அனைவரையும் பிரமிக்க வைத்துள்ளார். ‘அகரன்’ என்ற ஏவுகணையை உருவாக்கியவரான, இலங்கையின் முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த ரவிகரன் ரணேந்திரன் என்பவரே இவ்வாறு வேட்டி கட்டி விமானம் ஓட்டியுள்ளார். தான் பேசும்போதுகூட பிறமொழி வார்த்தைகளை...
இலங்கையில் உயர்மட்ட பல்கலைக்கழகங்கள் மிகப் பின்தங்கிய நிலையில் காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. உலக பல்கலைக்கழகங்களில் தரப்படுத்தலின்படி வெளியிடப்பட்டுள்ள 2018ஆம் ஆண்டிற்கான சர்வதேச அங்கீகாரம் பெற்ற ஆசிய பல்கலைக்கழகங்களுக்கான தரவரிசைப் பட்டியலின் மூலமே இது தெரியவந்துள்ளது. குறித்த தரவரிசைப் பட்டியலின்படி கொழும்பு பல்கலைக்கழகம் 156ஆவது இடத்தில் காணப்படுகிறது. தரவரிசையில் 124ஆவது இடத்திலுள்ள டாக்கா பல்கலைக்கழகத்தைவிட பின்தங்கிய நிலையிலேயே கொழும்பு...
வடக்கு மாகாண முதலமைச்சருக்கு அதிகாரத்துக்குட்பட்ட எல்லைகளில் உள்ள ஆலயங்களில் மிருகபலியிட்டு வேள்விநடத்த முற்றாகத் தடைசெய்யப்படுவதாக யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் இன்று கட்டளையிட்டார். குடாநாட்டு ஆலயங்களில் மிருகபலியிட்டு வேள்ளி நடத்துவதற்கு தடை உத்தரவு கோரி யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் நீதிப் பேராணை மனு இந்து மகா சபையால் முன்வைக்கப்பட்டது. அதனை சட்டத்தரணி வி.மணிவண்ணன்...
Loading posts...
All posts loaded
No more posts
