படுகொலை செய்யப்பட்ட புங்குடுதீவு மாணவி வித்தியாவின் தாயார் ஜனாதிபதியை சந்தித்தார்.
நடமாடும் சேவையில் கலந்து கொள்வதற்காக வவுனியாவிற்கு விஜயம் செய்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அரசாங்கத்தால் வவுனியாவில் வழங்கப்பட்ட வீட்டில் தற்போது வசித்து வரும் வித்தியாவின் குடும்பத்தினரை சந்தித்துள்ளார்.

குடும்பத்தின் சுகதுக்கங்களை கேட்டறிவதற்காக அவரது வீட்டுக்கு வருகை தருவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் மாணவி வித்தியாவின் தாயாருக்கு வழங்கிய உறுதிமொழிக்கேற்ப நிகழ்ச்சியின் முடிவில் வவுனியா பிரதேசத்தில் உள்ள அவ்வீட்டுக்கு சென்ற ஜனாதிபதி, குடும்ப உறுப்பினர்களின் சுகதுக்கங்களை கேட்டறிந்தார்.
மாணவி வித்தியாவின் மூத்த சகோதரியின் உயர் கல்வி நடவடிக்கைக்காகவும் அவரது குடும்பத்தின் எதிர்கால நடவடிக்கைகளுக்காகவும் முடிந்த உதவிகளை வழங்குவதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.
மாணவி வித்தியாவின் கொலைக்கு சட்ட ரீதியான நடவடிக்கைகளை துரிதப்படுத்துவதற்காக ஜனாதிபதி அவர்கள் வழங்கிய உதவி குறித்து அவரின் தாயார் ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்தார்.