ஈ-சிற்றி ஆங்கிலக் கல்லூரியின் பட்டமளிப்பு வைபவம்

யாழ்ப்பாணம் ஆனைப்பந்தியில் இயங்கிவரும் ஈ-சிற்றி ஆங்கிலக் கல்லூரியில் ஆங்கில டிப்ளோமாப் பாடநெறிகளைப் பூர்த்தி செய்த மாணவர்களுக்கான பட்டமளிப்பு வைபவம் (more…)

போலி பொதுச்சுகாதார பரிசோதகருக்கு விளக்கமறியல்

தன்னை பொதுச்சுகாதார பரிசோதகர் எனக்கூறி புன்னாலைக்கட்டுவான், ஈவினைப் பகுதிகளிலுள்ள உணவகங்களில் இலவசமாக உணவு உண்டு, கடைகளில் இலஞ்சமும் பெற்று வந்த பண்டத்தரிப்பு பல்லசுட்டியைச் சேர்ந்த சந்தேகநபரை, எதிர்வரும் 22ஆம் திகதி வரையில் (more…)
Ad Widget

யாழ்ப்பாணத்தில் 62,000 விவசாய குடும்பங்கள்

விவசாயத்தை வாழ்வாதாரமாகக் கொண்டு யாழ்ப்பாண மாவட்டத்தில் 62 ஆயிரத்து 269 விவசாயக் குடும்பங்கள் இருப்பதாக யாழ்.மாவட்டச் செயலக புள்ளி விபரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. (more…)

வடமாகாண சித்த ஆயுள்வேத வைத்திய பரம்பரைகளின் விபரம் திரட்டல்

சுதேச மருத்துவத் திணைக்களத்தால் வடமாகாணத்தில் நீண்ட வைத்திய பாரம்பரியத்தைக் கொண்ட சித்த ஆயுள்வேத வைத்தியப் பரம்பரைகளின் விபரங்கள் திரட்டப்பட்டு வருவதாக சுதேச மருத்துவத் திணைக்களத்தின் வடமாகாண ஆணையாளர் திருமதி சி.துரைரட்ணம் தெரிவித்தார். (more…)

யுத்தகால சேதம் குறித்த கணக்கெடுப்பு நிறைவு

இலங்கையில் கடந்த 30 வருடங்களாக நிலவிய யுத்த காலப்பகுதியில் இடம்பெற்ற உயிர் மற்றும் சொத்து சேதம் குறித்த கணக்கெடுப்பு அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக குடிசன வீட்டு தொகை மதிப்பீட்டு திணைக்களம் அறிவித்துள்ளது. (more…)

கணவரைக் கொன்றவரைப் பழிவாங்குவதற்காக கூலிப்படை வைத்து கொலை செய்த வயோதிபப் பெண்! வெளிப்பட்டது கல்லுண்டாய்வெளி கொலை மர்மம்!

தனது கணவரைக் கொன்றவர் எனக் கூறப்படும் நபரைப் பழிவாங்குவதற்காக அந்த நபரின் தம்பியை கூலிப்படையை ஏவிக் கொலைசெய்தார் என்ற சந்தேகத்தில் வயோதிபப் பெண் ஒருவரையும் கூலிப்படையைச் சேர்ந்தவர்கள் எனக் கருதப்படும் இரு இளைஞர்களையும் மானிப்பாய் பொலிஸார் நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை கைது செய்துள்ளனர். (more…)

தேங்காய் வியாபாரி சடலமாக மீட்பு

தேங்காய் கொள்வனவுக்காக யாழ்ப்பாணத்துக்கு வந்த திருகோணமலை வியாபாரி ஒருவர், திடீரென மயக்கமுற்று விழுந்து உயிரிழந்த சம்பவமொன்று நேற்று புதன்கிழமை (13) இடம்பெற்றுள்ளது. (more…)

வறட்சியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் உணவு வழங்க நடவடிக்கை

யாழ். மாவட்டத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட 31 ஆயிரத்து 284 குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்குவதற்கான ஏற்பாடுகளை அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் உதவியுடன் பிரதேச செயலகங்களின் ஊடாக முன்னெடுக்கவுள்ளதாக யாழ். மாவட்டச் செயலாளர் சுந்தரம் அருமைநாயகம் புதன்கிழமை (13) தெரிவித்தார். (more…)

வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினரால் வாழ்வாதார உதவி வழங்கல்

வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தின் சமூக மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் கிளிநொச்சி மாவட்டம் ஊற்றுப்புலம் பகுதியைச் சேர்ந்த போரால் பாதிக்கப்பட்ட குடும்பம் ஒன்றுக்கு 40 ஆயிரம் ரூபா நிதியுதவி நேற்று புதன்கிழமை (13) வழங்கப்பட்டுள்ளது. (more…)

காரைநகர் சிறுமியின் குடும்பத்திற்கு எந்தவிதமான உதவிகளும் இல்லை : சஜீவன்

காரைநகர், ஊரிப் பகுதியில் கடற்படை வீரரால் துஷ்பிரயோகத்துக்குள்ளாக்கப்பட்ட சிறுமிக்கும் அவரது குடும்பத்தாருக்கும் எந்தவிதமாக உதவிகளும் கிடைக்கவில்லையென வலி. வடக்குப் பிரதேச சபையின் உபதலைவர் எஸ்.சஜீவன் தெரிவித்தார். (more…)

தமிழ் ஊடகவியாளர்களை சுதந்திரமாக செயற்பட அனுமதியுங்கள் : மனோ

தமிழ் ஊடகவியலாளர்கள் உண்மையை கூறுவதற்கு முதலில் அவர்களை சுதந்திரமாக செயற்பட அனுமதிக்கப்பட வேண்டும் ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் நேற்று புதன்கிழமை (13) தெரிவித்துள்ளார். (more…)

இவ்வருட இறுதிக்குள் 27,000 வீடுகள் கட்டப்படும்: சிங்ஹா

இந்திய வேலைத்திட்டத்தின் கீழ் இதுவரையிலும் 1000 வீடுகள் நிர்மாணித்து முடிக்கப்பட்டுள்ளன. இவ்வருட இறுதிக்குள் 15 ஆயிரம் தொடக்கம் 27 ஆயிரம் வரையிலான வீடுகள் நிர்மாணித்து முடிக்கப்படும் என்று இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் வை.கே.சிங்ஹா தெரிவித்துள்ளார். (more…)

த.தே.கூ., இ.த.கவை கலைத்துவிடவும்: த.வி.கூ

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தமிழரசு கட்சியும் மிகக்கௌரவமான முறையில் தம் ஸ்தாபனங்களை கலைத்து விட்டு தங்களுடைய உறுப்பினர்களையும் தமிழர் விடுதலை கூட்டணியுடன் இணையுமாறு கூறுவதே சரியானதாகும். (more…)

பயங்கரவாதத்துடன் தொடர்புபட்டிருந்தால் பட்டியலிடப்படும்

பயங்கரவாத நடவடிக்கைகளுடன் தொடர்புடையவர் என ஒருவர் அடையாளம் காணப்பட்டால் உரிய ஆதாரங்களின் பிரதிகளும் அவரின் பெயர் விபரமும் தடைப்பட்டியலில் உள்ளடக்கப்படும் (more…)

பெண்ணுடன் சில்மிஷம் மருதங்கேணியில் மாட்டினார் சிப்பாய்

மருதங்கேணி - கட்டைக்காடுப் பகுதியில் நேற்று அதிகாலை ஒரு மணியளவில் தவறான நோக்கத்திற்காக வீடு புகுந்த கடற்படைச் சிப்பாய் ஒருவரை அப்பகுதி மக்கள் மடக்கிப் பிடித்து பளைப் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர். (more…)

அழிந்து வரும் அபூர்வ சிறுத்தைக் குட்டிகள் முல்லைத்தீவில் மீட்பு

இலங்கைக்கே உரித்தான, அழிந்துவரும் நிலையிலுள்ள சிறுத்தை இனைத்தைச் சேர்ந்த இரண்டு குட்டிகள் முல்லைத்தீவில் மீட்கப்பட்டுள்ளன. (more…)

காங்கேசன் துறை சீமெந்து ஆலை இடிக்கப்பட்டு இரும்புகள் கடத்தல்?

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலைக் கட்டடம் இடிக்கப்பட்டு அதன் கம்பிகள் வெளியாரால் அங்கிருந்து எடுத்துச் செல்லப்படுகின்றன என்று வலி. வடக்குப் பிரதேச சபை உப தலைவர் சஜீவன் தெரிவித்துள்ளார். (more…)

பனை வெல்லத்தில் பொஸ்பேட் உரம்! ஊர்காவற்றுறை பனை வெல்ல நிலையத்துக்கு சீல்

பொஸ்பேட் அடி உரம் பயன்படுத்தி பனைவெல்லம் தயாரித்த ஊர்காவற்றுறை பனை வெல்ல நிலையம் சுகாதாரப் பரிசோதகர்களால் இன்று சீல் வைக்கப்பட்டுள்ளது. (more…)

நெல்லியடியில் விபத்து : மூவர் காயம்

நெல்லியடி நகர்ப்பகுதியில் இடம் பெற்ற மோட்டார் சைக்கிள் மற்றும் பிக்கப் வாகன விபத்தில் தாயும் இரு மகன்களும் காயமடைந்துள்ளனர். (more…)

ஊர்காவற்றுறையில் தேடுதல்

ஊர்காவற்றுறை, மெலிஞ்சிமுனை ஐயனார் ஆலயப் பகுதியில் இராணுவத்தினரும் கடற்படையினரும் இணைந்து தேடுதல் நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டுள்ளனர். (more…)
Loading posts...

All posts loaded

No more posts