இலங்கையில் கடந்த 30 வருடங்களாக நிலவிய யுத்த காலப்பகுதியில் இடம்பெற்ற உயிர் மற்றும் சொத்து சேதம் குறித்த கணக்கெடுப்பு அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக குடிசன வீட்டு தொகை மதிப்பீட்டு திணைக்களம் அறிவித்துள்ளது.
கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கைப்படி 1983-2009 ஆண்டு வரையான காலத்தில் இடம்பெற்ற மோதலின்போது ஏற்பட்ட சேதம் குறித்த கணக்கெடுப்பு கடந்த நவம்பர் மாதத்தில் ஆரம்பிக்கப்பட்டது.
நாட்டின் சகல மாவட்டங்களிலும் இந்த கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டதாகவும் இதன் முதற்கட்ட அறிக்கை விரைவில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் குடிசன வீட்டு தொகை மதிப்பீட்டு திணைக்களம் தெரிவித்துள்ளது.