Ad Widget

அழிந்து வரும் அபூர்வ சிறுத்தைக் குட்டிகள் முல்லைத்தீவில் மீட்பு

இலங்கைக்கே உரித்தான, அழிந்துவரும் நிலையிலுள்ள சிறுத்தை இனைத்தைச் சேர்ந்த இரண்டு குட்டிகள் முல்லைத்தீவில் மீட்கப்பட்டுள்ளன.

சர்வதேச அளவில், அழிந்து வரும் இனங்களை அடையாளப்படுத்தும் சிவப்பு பட்டியலில் இந்தவகை சிறுத்தைகளும் இடம்பெற்றுள்ளன.

sri_lanka_cheetah_mullaiteevu

முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு பகுதியில் காட்டுக்கு வேட்டைக்குச் சென்ற சிலர் எப்படியோ சிறுத்தைக் குட்டிகள் இரண்டைப் பிடித்து வந்து விற்பனை செய்ய முற்பட்டிருக்கின்றார்கள்.

இது பற்றி இரகசியமாகக் கிடைத்த தகவலையடுத்து, அதிகாரிகளுடன் அங்கு விரைந்த வடமாகாண விவசாயத்துறை அமைச்சர் ஐங்கரநேசன் அந்தக் குட்டிகளை மீட்டு, வனவிலங்கு அதிகாரிகளிடம் புதனன்று ஒப்படைத்துள்ளார்.

சட்டவிரோதமான வகையில் இந்தச் சிறுத்தைக் குட்டிகளை விற்பனைச் செய்ய முயன்றவர்கள் அதிகாரிகளைக் கண்டவுடன் தப்பிவிட்டனர்.

அழிந்து வரும் பட்டியலில் இருக்கும் இந்தச் சிறுத்தை வகையை பாதுகாப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியிருப்பதாகக் அமைச்சர் ஐங்கரநேசன் கூறினார்.

உலகின் அரிய வனவிலங்குகளை அழியாமல் பாதுகாப்பதுடன், அவற்றை வணிக நோக்கத்திற்காகக் கடத்துபவர்கள் விற்பனை செய்பவர்கள் தொடர்பில் கூடிய கவனம் செலுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வனவிலங்கு அதிகாரிகளிடம் கோரியிருப்பதாகவும் வடமாகாண விவசாயத்துறை அமைச்சர் ஐங்கரநேசன் கூறினார்.

Related Posts