- Saturday
- September 20th, 2025

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் நாம் நன்கு சிந்தித்து, நம் நாட்டுக்குத் தேவையான பரந்த மனங்கொண்ட தலைவரைத் தெரிவு செய்து, நிலையான அமைதியை எம் மண்ணுக்கு கொண்டுவர முயற்சிப்போம் என யாழ். மறை மாவட்ட ஆயர் தோமஸ் சவுந்தரநாயகம் அடிகளார் தெரிவித்தார். தனது கிறிஸ்மஸ் வாழ்த்துச் செய்தியிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,...

டெங்குத்தொற்றால் சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளான்.யாழ். குடாநாட்டில் டெங்குத்தொற்று தீவிரமடைந்துவரும் நிலையில், நேற்று 14 வயது சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளான். தனியார் மருத்துவமனையொன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், ஈரல், சிறுநீரகம் முழுமையாகப் பாதிக்கப்பட்ட நிலையில் யாழ். போதனாவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தான். எனினும் சிகிச்சை பலனின்றி நேற்று காலை உயிரிழந்துள்ளான். நாவலர் வீதி, யாழ்ப்பாணத்தை...

யாழில் 112 வயதினை கடந்தும் வயோதிபர் ஒருவர் ஆரோக்கியமாக வாழ்ந்து வருகின்றார். நவாலி தெற்கு மானிப்பாயை சேர்ந்த கணபதி காத்தி என்பவர் கடந்த 1902ம் ஆண்டு நவம்பர் மாதம் 13ம் திகதி பிறந்தார். கடந்த மாதம் தனது 112 ஆவது பிறந்த தினத்தினையும் கொண்டாடி இருந்தார். எவருடைய உதவியும் இன்றி தனது தேவைகளை தானே பூர்த்தி...

யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் தொடர்பில், ஈ.பி.டி.பியினர் செய்திருந்த முறைப்பாட்டுக்கு அமைய வழக்கு ஜனவரி மாதம் 16 ஆம் திகதி நீதிமன்றில் தாக்கல் செய்யப்படும் என்று யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஈ.பி.டி.பியினரின் முறைப்பாட்டின் அடிப்படையில் பொலிஸார் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் மூன்று மக்கள் பிரதிநிதிகளுக்கு அழைப்பாணை அனுப்பியிருந்தனர். இது தொடர்பான விசாரணை இன்றைய...

சுன்னாகம் சூராவத்தைப் பகுதியில் கடந்த 22 ஆம் திகதி முதல் காணாமற்போயிருந்தார் என்று கூறப்பட்ட குடும்பஸ்தர் இன்று புதன்கிழமை சடலமாக அயலில் உள்ள வெளிவளவில் இருந்து மீட்கப்பட்டார். சூராவத்தையைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான தர்மராசா சிவநாதன் (வயது - 57) என்பவரே சடலமாக மீட்கப்பட்டார். குறித்த காணியில் சடலத்தை அவதானித்த அயலவர்கள் சுன்னாகம் பொலிஸாருக்கும்,...

பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக்கட்சியின் தலைமையகமான ஸ்ரீகொத்தவுக்கு முன்பாக பதற்றம் நிலவுகின்றது. அரசாங்கத்தின் ஆதரவாளர்கள் என்று கூறப்படும் குழுவுக்கும் ஐக்கிய தேசியக்கட்சி ஆதரவாளர்கள் குழுவுக்கும் இடையில் ஏற்பட்ட மோதலை அடுத்தே அங்கு பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் பெரும் வாகனநெரிசலும் ஏற்பட்டுள்ளது.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் "உலகை வெல்லும் வழி"எனும் மகுடத்துடனான தேர்தல் விஞ்ஞாபனம் எமது மக்களின் கோரிக்கைகளை உள்ளடக்கியுள்ளதனால் அதனை வரவேற்கின்றோம். என ஜனாதிபதியின் தேர்தல் விஞ்ஞாபனம் தொடர்பில் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அவர்களால் வெளியீட்டுள்ள அறிக்கையில்... நடைபெறவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலில் "யாரைஆதரிக்கவேண்டும் " என்ற தலைப்பில் எமது மக்களுக்கு நாம் கூறிய...

நாட்டின் வடக்கு கிழக்கு பாகங்களில் அடுத்த மூன்று நாட்களுக்கு தொடர்ந்து மழை பெய்யலாம் என வானிலை அவதான நிலையம் இன்று (24) தகவல் தெரிவித்துள்ளது. இம் மழை வீழ்ச்சியினைத் தொடர்ந்து எதிர்வரும் 26 ஆம் திகதியிலிருந்து மழைவீழ்ச்சி குறைவடைவதற்கான சாத்தியம் நிலவுவதாகவும், ஆயினும் காற்று பலமாக வீசக்கூடிய சாத்தியம் அனைத்து பிரதேசங்களிலும் பொதுவாக நிலவுவதாக வானிலை...

பிரபல்யமான இருவரின் கையொப்பங்களை சட்ட விரோதமாகவும் தவறான கையொப்பமாகவும் பயன்படுத்துவது தண்டிக்கப்பட வேண்டிய குற்றமாகும். இவ்வாறான குற்றத்தினை செய்தமைக்காக திஸ்ஸ அத்தநாயக்கவிற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கும் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன எனது குரலும் எனது கையொப்பமுமே இன்று ஜனாதிபதியின் வெற்றிக்கு உதவ பயன்படுகின்றது. எனது ஆதரவு மஹிந்த ராஜபக் ஷவிற்கு...

நடந்து முடிந்த க.பொ.த உ/த பரீட்சை பெறுபேறு எதிர்வரும் 27 அல்லது 28ம் திகதி வெளியிடப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. விடைத்தாள் திருத்தும் பணிகள் நிறைவுற்று தற்போது பெறுபேறுகளை வெளியிடுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டபிள்யு.எம்.என்.ஜே.புஸ்பகுமார தெரிவித்தார். இதேவேளை, க.பொ.த சா/த பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகள் எதிர்வரும் 28ம்...

கிறிஸ்மஸ் பண்டிகை மற்றும் புது வருடத்தை முன்னிட்டு இலங்கை மற்றும் இந்தியா நல்லெண்ண அடிப்படையில் மீனவர்களை விடுதலை செய்துள்ளது. இந்திய சிறைகளில் இருந்த 30 இலங்கை மீனவர்களை இந்திய அதிகாரிகள் விடுதலை செய்துள்ளதுடன் இலங்கை சிறையில் இருந்த 66 இந்திய மீனவர்களை இலங்கை அதிகாரிகள் விடுதலை செய்துள்ளனர். விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் சர்வதேவ கடல் எல்லையில்...

வடக்கில் படையைக் குறைத்தல் அல்லது முகாம்களை அகற்றுதல் என்ற பேச்சுக்களுக்கு இடமேயில்லை. ஆனால் வடக்கு, கிழக்கு மக்களுடன் சமாதானத்தை உறுதிப்படுத்த ஹெல உறுமய முன்னிற்கும். - இப்படித் தெரிவித்திருக்கிறார் அக்கட்சியின் பொதுச் செயலாளர் சம்பிக்க ரணவக்க. அத்துடன், வடக்கு மக்கள் வாக்களிப்பதைத் தடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன எனத் தெரிவித்த அவர், வடக்கு மக்கள் மஹிந்த -...

வட மாகாண சபை உறுப்பினர் ச.சுகிர்தனுக்கு இனந்தெரியாத இரு நபர்கள் கொலை மிரட்டல் விடுத்தனர் என நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருக்கிறது. நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு 7 மணியளவில் துன்னாலைப் பகுதியில் அவரை வழி மறித்தவர்களே கொலை மிரட்டல் விடுத்தனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது. இந்தச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது:- பருத்தித்துறையில் இருந்து மோட்டார்...

தமிழ் மக்களின் பிரச்சினைகளை பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன நினைத்துக்கூட பார்க்கவில்லை. ஆனால் அரசியல் தீர்வுத் திட்டம் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சு நடத்த அரசு தயாராகவே இருக்கிறது. இப்படித் தெரிவித்திருக்கிறார் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளரும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சருமான பஸில் ராஜபக்ஷ. மஹிந்த ராஜபக்ஷவுக்கு தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டும் எனக்...

தமிழை வளர்க்கும் இலக்கிய நிகழ்வுகளை ஊக்கப்படுத்த சாவகச்சேரி நகர சபை நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதுடன் நகராட்சி மன்றத்தின் கீழுள்ள பொன் விழா கலாசார மண்டபத்தை இலவசமாக வழங்கவேண்டும் என ஆளுங்கட்சி உறுப்பினர் ஞா.கிஷோர் முன்வைத்த பிரேரணை சாவகச்சேரி நகர சபையில் திங்கட்கிழமை (22) ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. பிரேரணையை முன்வைத்து ஞா.கிஷோர் உரையாற்றுகையில், சாவகச்சேரி நகராட்சி மன்றமானது...

பொது எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன பங்கேற்கவிருந்த கூட்டத்துக்காக அமைக்கப்பட்டிருந்த செய்யப்பட்டிருந்த மேடைக்கு துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. வெல்லம்பிட்டிய, உமகிலிய எனுமிடத்தில் அமைக்கப்பட்டிருந்த மேடைக்கே நேற்றிரவு துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிப்பது எமது எதிர்காலத்தைத் தீர்மானிக்கும். எனவே நாம் எல்லோரும் நன்கு சிந்தித்துச் செயல்படுவோம் என யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. எமது உறவுகள் கொத்துக் கொத்தாக வயது பால் வேறுபாடின்றி உடல் சிதறி இறந்ததையா? இறந்த உடல்கள் அதே இடத்தில் அழுகியதையா? கைது செய்யப்பட்டுக் காணாமற் போனவர்களையா? போர்...

ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவு வழங்குவது தொடர்பில் எதிர்வரும் 27 ஆம் திகதி அறிவிக்கப்படும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். இரு பிரதான ஜனாதிபதி வேட்பாளர்களின் தேர்தல் விஞ்ஞாபனங்களையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு படித்துக் கொண்டிருக்கிறது. இந்த வாரக் கடைசியில் இந்தியாவில் இருந்து நாடு திரும்பும் கூட்டமைப்பின் தலைவர்...

விசுவமடு பகுதியில் படையினரின் தபால்மூல வாக்களிப்பினை கண்காணிக்கச் சென்ற தேர்தல் அதிகாரிகளுக்கு அனுமதி வழங்க படையினர் மறுப்பு தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, நேற்று காலை ஆரம்பமாகிய தபால் மூல வாக்களிப்பை கண்காணிப்பதற்காக விசுவமடு பகுதியிலுள்ள இராணுவ முகாம் ஒன்றுக்கு சென்ற தேர்தல் கண்காணிப்பாளர்களை, இதனை கண்காணிக்க நீங்கள் யார்? உங்களுக்கு யார்...

அனுமதிப் பத்திரம் இன்றி வடபகுதிக்கு வந்த வெளிநாட்டுபயணி ஒமந்தையில் வைத்து திருப்பி அனுப்பப்பட்டார்!!
அனுமதிப் பத்திரம் இன்றி வடபகுதிக்கு யாழ் தேவி ரயிலில் பயணித்தார் என்று கூறி வெளிநாட்டு பயணி ஒருவர் இன்று செவ்வாய்க்கிழமை ஓமந்தைச் சோதனைச் சாவடியில் இராணுவத்தினரால் இறக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் இன்று பிற்பகல் 1.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

All posts loaded
No more posts