Ad Widget

புதிய ஜனாதிபதிக்கும் த.தே. கூட்டமைப்புக்கும் இடையிலான சந்திப்பு இன்று

புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை இன்று முதன்முதலாக சந்திக்கவுள்ளார்.

இதனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் உறுதிப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஜனாதிபதி செயலகத்தில் இன்று நண்பகல் 12 மணிக்கு இடம்பெறவுள்ள இந்தச் சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் அதன் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் என பலர் கலந்துகொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஜனாதிபதித் தேர்தலின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts