Ad Widget

லொத்தர் கடை தீ வைத்து எரிப்பு

வடமராட்சி, நெல்லியடி சந்தியில் அமைந்துள்ள தேசிய லொத்தர் விற்பனை கடை ஞாயிற்றுக்கிழமை (11) மாலை இனம்தெரியாதோரால் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளதாக, நெல்லியடி பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்காரணமாக, கடையிலிருந்த லொத்தர்கள், இதர பொருட்கள் தீயில் எரிந்து நாசமாகியுள்ளது.

இதனையடுத்து சம்பவ இடத்துக்கு சென்று தீயை அணைத்ததுடன், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக நெல்லியடி பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Related Posts