- Saturday
- July 12th, 2025

அரச புலனாய்வு பிரிவுனர் என அடையாளம் காட்டிக்கொண்ட நால்வரால் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் நேற்றிரவு 1௦.௦௦ மணியளவில் அச்சுறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது, தாம் ஊரெழு இராணுவமுகாமை சேர்ந்த அரச புலனாய்வு பிரிவினர் எனக் கூறி யாழ், பேருந்து நிலையத்தில் வைத்து இரண்டாம் வருட மாணவன் ஒருவரை கைது செய்த இவர்கள் பல்கலைக்கழகம் முன்பாக...

ஒட்டுசுட்டான் ஓட்டுத்தொழிற்சாலையை அடுத்த ஆண்டு முற்பகுதியிலிருந்து புதுப் பொலிவுடன் மீள இயக்குவதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுமென அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்ட அமைச்சர் ஒட்டுசுட்டான் ஓட்டுத்தொழிற்சாலையின் முன்னாள் பணியாளர் சங்கப் பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது பற்றி மேலும் அவர் தெரிவிக்கையில் குறித்த ஓட்டுத் தொழிற்சாலையை...

நாட்டின் பெரும்பாலான கடலோரப்பகுதிகளில் இன்று (15) இடி காற்றுடன் மழை பெய்யக்கூடிய சாத்தியம் நிலவுவதாக வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக முல்லைத்தீவு மன்னார் காங்கேசன்துறை வரையான மாத்தறை திருகோணமலை பொத்துவில் மட்டக்களப்பு அம்பாந்தோட்டை வரையான கடலோரங்களில் இடி காற்றுடன் கூடிய மழை பெய்யலாம் எனவம் வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. அத்துடன் பெரும்பாலான கடலோரங்களில்...

இணக்கமும் கூட்டுமுயற்சியும் இருந்தால் தான் எமது இனத்துக்கான எந்தவொரு தீர்வையும் பெற்றுக்கொள்ள முடியும் என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் கே.வி.குகேந்திரன், சனிக்கிழமை (13) தெரிவித்தார். ஊர்காவற்றுறை தொகுதிக்கான இளைஞர் மற்றும் மாதர் அணி அங்குரார்ப்பண நிகழ்வு இடம்பெற்ற போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், கடந்தகால தவறுகளை எண்ணிக்கொண்டிருப்பதாலும்...

ஏ– 9 வீதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (14) இடம்பெற்ற விபத்தில், சாவகச்சேரி பொலிஸ் நிலைய உத்தியோகத்தர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர். டபிள்யு.ஏ.பியந்த (வயது 45) என்ற பொலிஸ் உத்தியோகத்தரே படுகாயமடைந்தவராவார். சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தின், நீதிமன்றத்துக்கான கடமைகளை செய்யும் இந்த பொலிஸ் உத்தியோகத்தர், ஞாயிற்றுக்கிழமை காலை...

யாழ்.நுணாவில் மத்தி பகுதியிலுள்ள வீடொன்றின் கிணற்றிலிருந்து 8 வயது சிறுவனின் சடலம் ஞாயிற்றுக்கிழமை (14) காலை மீட்கப்பட்டுள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர். அதேயிடத்தை சேர்ந்த இராஜகோபால் ஆகாஷ் என்ற சிறுவனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த சிறுவனின் பெற்றோர் சனிக்கிழமை (13) காலை சிறுவனை வீட்டில் தனியாக விட்டுவிட்டு கூலி வேலைக்கு சென்றிருந்த நிலையில், மாலை...

வவுனியா, செட்டிகுளம் பிரதேச செயலகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணையின்போது அழைக்கப்பட்டவர்களில் 33 பேர் சாட்சியமளித்தனர். நேற்றய தினம் சாட்சியமளிப்பதற்காக 52 பேருக்கு கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்ட போதும் 33 பேரே சாட்சியமளித்தனர். நேற்றய சாட்சியங்களில் அதிகளவானவை இராணுவத்திற்கு எதிராகவே பதிவாகின. செட்டிகுளம், நேரியகுளம் பகுதியில் இருந்து 10 முஸ்லிம்கள் விடுதலைப் புலிகளுக்கு...

ஜனாதிபதி தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு டிசம்பர் 23 ஆம், 24 ஆம் திகதிகளில் நடைபெறுமென தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய அறிவித்துள்ளார். நேற்று கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாடு ஒன்றில் அவர் இதனைத் தெரிவித்தார். இதேபோல ஏனைய வாக்காளர் பட்டியல்கள் அந்தந்த கிராம சேவகர் அலுவலகங்கள், பிரதேச செயலகங்கள், மாவட்டச் செயலகங்கள் என்பனவற்றில் வைக்கப்பட்டுள்ளதாகத்...

ஜனாதிபதி வேட்பாளர்கள் இருவருமே தமிழ் மக்கள் நலன் தொடர்பில் எதுவித கருத்தையும் முன்வைக்காத நிலையில், வேட்பாளர்களின் தேர்தல் விஞ்ஞாபனம் வந்த பின் எமது முடிவை மக்களுக்கு தெரிவிப்போம் என தமிழரசுக் கட்சியின் தலைவரும் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு ஆதரவு அளிப்பது என்பது குறித்து, தமிழரசுக் கட்சியின்...

தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கத்தின் 8ஆம் ஆண்டு நினைவு நாள் நேற்று ஞாயிற்றுக்கிழமை யாழ்.பல்கலைக்கழகத்தில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டுள்ளது. யாழ்.பல்கலைக்கழக புதிய கட்டடத் தொகுதியில் தேசத்தின் குரல் மதியுரைஞர் கலாநிதி அன்ரன் பாலசிங்கத்தின் திருவுருவப்படம் வைக்கப்பட்டு மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. இந்த அஞ்சலி நிகழ்வில் பல்கலை மாணவர்களும் விரிவுரையாளர்களும் கலந்துகொண்டுள்ளனர்.

பாடசாலை விடுமுறையை முன்னிட்டு, கண்டி- யாழ் நகரங்களுக்கிடையில் விசேட ரயில் சேவை நேற்று ஆரம்பமானது. முதலாவது ரயில் அதிகாலை 3.55 க்கு கண்டியிலிருந்து புறப்பட்டு முற்பகல் 11.35 யாழ்ப்பாணத்தை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தெல்லிப்பழை கிழக்கு சிற்றியம்புளியடி கிராமத்திலுள்ள 15 கிணறுகளில் எண்ணெய் கசிவு ஏற்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெல்லிப்பழை சுகாதார வைத்தியதிகாரி ப.நந்தகுமார், சனிக்கிழமை (13) தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், குறித்த பகுதியில் உள்ள கிணறுகளில் எண்ணெய்ப் படலம் காணப்படுவதாக அப் பகுதி கிராமசேவகர் மற்றும் பொதுமக்கள் தகவல் வழங்கியிருந்தனர். அதனை அடுத்து சனிக்கிழமை (13)...

ஆலயங்கள் வியாபார நிலையங்களாக மாறிவருவது சமூகத்தில் ஒரு வேதனைக்குரிய விடயம் என கோப்பாய் ஆசிரிய கலாசாலை பிரதி அதிபர் ச.லலீசன் தெரிவித்தார். அகில இலங்கை இந்து மாமன்ற ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் சபையின் அனுசரணையுடன் நாவலர் விழா இடம்பெற்றது. இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் அவர் உரையாற்றுகையில், ஆறுமுகநாவலர்...

மகிந்த ராஜபக்ச தலைமையிலான தற்போதைய அரசு மோசடிகளில் உலக சாதனை படைத்திருப்பதாக எதிர்கட்சிகளின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன குற்றம் சுமத்தியுள்ளார். சிலாபத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் இதனைக் தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், வடக்கில் புகையிரத பாதையை நிர்மாணிப்பதற்கு ஒரு கிலோமீற்றருக்கான செலவு 44 மில்லியன் என்று நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால் இறுதியில் ஒரு...

வாடிக்கையாளர் ஒருவரிடமிருந்து அடைவுக்காக நகைகளைப் பெற்றுக்கொண்டு பற்றுச்சீட்டு வழங்கப்பட்ட பின்னர் நகைகள் மீளவும் கையளிக்கப்பட்ட சம்பவம், யாழ். வங்கியொன்றில் நடைபெற்றுள்ளது. யாழ். மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள வங்கியில் பார்வையிழந்த பெண் ஒருவர் தன் வசமிருந்த நகைகளை நேற்று முன்தினம் காலை அடைவு வைத்துள்ளார். அங்கிருந்த அலுவலரால் நகைகள் சரிபார்க்கப்பட்ட பின்னர் ஏற்றுக்கொள்ளப்பட்டு நகைக்குரிய பணமும் வழங்கப்பட்டுள்ளது....

ஐ படம் என்றாலே எல்லோருக்கும் ஒரு பெரிய எதிர்ப்பார்ப்பு தான், ஏனென்றால் அப்படத்தில் நிறைய பிரம்மாண்டங்கள் இருக்கிறது. இப்படம் பொங்கல் அன்று வெளியாக உள்ளதாக நாம் அறிந்திருப்போம். அதற்கேற்றார் போல் ஐ படம் பாதி தியேட்டர்கள் புக் செய்துவிட்டதாகவும் நாம் சமீபத்தில் போஸ்டர்களை பார்த்திருப்போம். ஆனால் தற்போது ஐ படம் மூன்று காரணங்களுக்காக பொங்கல் ரேஸில்...

சரியான அரசியல் பலத்தின் ஊடாகவே மக்களுக்கான சேவைகளை முழுமைபெறச் செய்ய முடியுமென ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா நேற்று(12) தெரிவித்தார். தென்மராட்சி கலைமன்ற கலாசார மண்டபத்தில் தொகுதி மாதர் அமைப்பை அங்குரார்ப்பணம் செய்து வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழ்மக்கள் மத்தியில்...

யாழ்ப்பாண பல்கலைக்கழத்தின் வளாகங்களில் மேற்கொள்ளவுள்ள நகரமயமாக்கல் தொடர்பான திட்டமிடல் செயற்பாடுகளுக்காக 8 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர் வசந்தி அரசரட்ணம் வெள்ளிக்கிழமை (12) தெரிவித்தார். யாழ்ப்பாண பல்கலைக்கழக சமுதாய, பிராந்திய திட்டமிடல் கற்கை நெறியின் இளம் திட்டமிடலாளர் சங்கத்தினரால் உலக நகரத்திட்டமிடல் தினத்தை முன்னிட்டு, நடத்தப்பட்ட கண்காட்சி நிகழ்வில் கலந்துகொண்டு துணைவேந்தர்...

உரிய வேலை வாய்ப்பு கிடைக்காமையால் திருட்டில் ஈடுபட்டார் என்ற சந்தேகத்தில் 25 வயதுடைய விஞ்ஞானமானி பட்டம் பெற்ற ஒருவரை கைது செய்துள்ளதாக, யாழ்ப்பாணம் குற்றத்தடுப்பு பொலிஸார் சனிக்கிழமை (13) தெரிவித்தனர். யாழ்ப்பாணம் நாவற்குழி பகுதியை சேர்ந்த நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் கொக்குவில் பகுதியில் உள்ள வீடொன்றை உடைத்து 2½ பவுண்...

கடந்த 2012ஆம் ஆண்டு நடத்தப்பட்ட குடிசன கணக்கெடுப்பின் போது இலங்கையின் சனத்தொகை 20.4 மில்லியன் என கண்டறியப்பட்டுள்ளது என தொகை மதிப்பீட்டு புள்ளிவிபர திணைக்கள பணிப்பாளர் நாயகம் டி.பீ. குணவர்தன தெரிவித்தார். நேற்று கொழும்பு சினமன்ட் கிராண்ட் ஹோட்டலில் நடத்தப்பட்ட குடிசன வீட்டுவசதிகள் 2012 பிரதான தேடல்களுக்கான கருத்தரங்கின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இலங்கையில்...

All posts loaded
No more posts