Ad Widget

மஹிந்தவும் சந்திரிகாவும் எம்.பி.களாகும் சாத்தியம்?

முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷவும் (வயது 70) சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவும் (வயது 70) தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்களாக தெரிவாவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக நம்பகரமான வட்டாரங்களிலிருந்து தெரியவருகின்றது.

Mahinda-and-Chandrika

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் மாநாட்டில் இன்று திங்கட்கிழமை உரையாற்றவிருக்கின்றார். அவர், தலைமையில் சுதந்திரக் கட்சியின் மத்தியக்குழுக் கூட்டம் கொழும்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது.

ஸ்ரீ.ல.சு.க.வின் மாநாட்டில் அவரை தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக, நாடாளுமன்றத்துக்கு கொண்டுவருவதற்கான யோசனையும் முன்வைக்கப்படவிருக்கின்றது.

இவ்வாறானதொரு நிலையில், தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பிரான மஹிந்த ராஜபக்ஷவை, நாடாளுமன்றுக்கு கொண்டுவருவதற்கு ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு எடுக்கும் முயற்சிக்கு கூட்டமைப்புக்குள்ளேயே எதிர்ப்புகள் கிளம்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த யோசனைக்கு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் அமைச்சர்கள் சிலர் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளதாக அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. அதனால், சுதந்திர கட்சியின் முன்னாள் அமைச்சர்கள் சிலர், புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்துகொள்ளவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதில் அதிருப்தி கொண்டோர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவளிக்கபோவதாக நேற்று ஞாயிற்றுக்கிழமை அறிவித்திருப்பதாகவும் அத்தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவளிப்பதற்கு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தொகுதி அமைப்பாளர்கள் பலரும் விருப்பம் தெரிவித்துள்ளதாக தெரியவருகின்றது.

Related Posts