பேரவை செயலகத்துக்கு வசதிகள் ஏற்படுத்தப்பட வேண்டும்

வடமாகாண பேரவை செயலகத்துக்கு அதிகப்படியான வசதிகள் செய்யவேண்டியிருப்பதால் அதற்கு அதிகளவான நிதி ஒதுக்கீடு செய்யப்படவேண்டும் என வடமாகாண சபை ஆளுங்கட்சி எதிர்க்கட்சி உறுப்பினர் வேண்டுகோள் விடுத்தனர். வடமாகாண சபையின் 2015 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்ட சமர்ப்பிப்பு மற்றும் விவாதம் தொடர்பான அமர்வின் முதல் நாள் கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபையில் புதன்கிழமை (17)...

தொழிலாளர் உரிமைகளை மேம்படுத்துவதில் இலங்கை முதலிடம்

தொழிலாளர் உரிமைகளை மேம்படுத்துவது தொடர்பான சட்ட அமுல்படுத்தலில் ஐரோப்பிய, ஆசிய நாடுகளில் இலங்கை முதலிடத்தில் உள்ளதாக வடமாகாண பிரதி தொழில் ஆணையாளர் க.கனகேஸ்வரன் வியாழக்கிழமை (18) தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், 'ஐரோப்பிய ஆசிய தொழில் கூட்டுறவு மாநாடு நவம்பர் மாதம் 13 ஆம் திகதி தொடக்கம் டிசெம்பர் மாதம் 3 திகதி...
Ad Widget

சிறுமியை காணவில்லையென முறைப்பாடு

யாழ்.கெருடாவில் மாயவனூர் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமியை புதன்கிழமை (17) முதல் காணவில்லையென சிறுமியின் பாட்டி பொலிஸ் நிலையத்தில் இன்று வியாழக்கிழமை (18) முறைப்பாடு செய்துள்ளதாக வல்வெட்டித்துறை பொலிஸார் தெரிவித்தனர். உடுப்பிட்டியிலுள்ள சமுர்த்தி வங்கிக்கு சென்றுவிட்டு வருவதாக கூறிச்சென்ற சிறுமி இதுவரை வீடு திரும்பவில்லையென சிறுமியின் பாட்டி முறைப்பாடு செய்துள்ளார். முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை...

ஜனாதிபதி மஹிந்த வென்றாலும் பதவியேற்கார்!!

2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8ஆம் திகதி நடைபெறும் ஜனாதிபதி தேர்தலில், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வெற்றியீட்டினாலும் உடனடியாக அவர் சத்தியப்பிரமாணம் செய்துகொள்ளமாட்டார் என்று தெரிவிக்கப்படுகின்றது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வென்றால், மூன்றாவது பதவிக் காலத்துக்கான பதவியேற்பு சத்தியப்பிரமாணத்தை 2015ஆம் ஆண்டு நவம்பர் 19ஆம் திகதி செய்துகொள்வார். சில குழுவினர் கூறுவது போல இரண்டாவது பதவிக்காலத்துக்கான...

ஜனாதிபதித் தேர்தலில் கூட்டமைப்பு தலையிடாது தமிழ்மக்களை அவர்களது விருப்பப்படி வாக்களிக்க விடவேண்டும்!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இத்தேர்தலில் தலையிடாது ஒதுங்கி இருந்து கொண்டு தமிழ் மக்களை அவர்களின் இஷ்டப்படி செயற்பட்டு யாருக்கு வாக்களிப்பது என்ற முடிவை எடுக்க அவர்களை விட்டுவிடவேண்டும். இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை வலியுறுத்திக் கேட்டுள்ளது தமிழர் விடுதலைக் கூட்டணி. தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி விடுத்துள்ள அறிக்கையிலே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த...

பாக். பிரஜைகள் இருவருக்கு மரண தண்டனை

2012ஆம் ஆண்டு நவம்பர் 11ஆம் திகதி கொழும்பு பம்பலபிட்டி பகுதியில், 1560 கிராம் ஹெரோய்னுடன் கைது செய்யப்பட்ட இரு பாகிஸ்தானியர்களை குற்றவாளிகளாக இனங்கண்ட கொழும்பு மேல் நீதிமன்றம் நேற்று(17) அவர்களுக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. 1984ஆம் ஆண்டு 13ஆம் இலக்க நஞ்சுகள், அபின் மற்றும் ஆபத்தான ஒளடதங்களை கடத்தும் தடுப்புச் சட்டத்தின்படி மேல் நீதிமன்ற...

இப்போதும் நானே பிரதம நீதியரசர்! எதிர்காலத்தில் நியாயம் கிடைக்கும்!! – ஷிராணி

"தற்போதும் இலங்கையின் பிரதம நீதியரசர் நானே. எனக்கு எதிர்காலத்தில் நியாயம் கிடைக்கும். அரசியலுக்கு வரும் எவ்வித நோக்கமும் எனக்கில்லை." இவ்வாறு மஹிந்த அரச தரப்பினரால் குற்றப் பிரேரணை மூலம் பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் பிரதம நீதியரசர் கலாநிதி ஷிராணி பண்டாரநாயக்க நேற்றுத் தெரிவித்தார். 2013 ஜனவரி முதல் தான் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார் என்றும்,...

பகிரங்க விவாதத்துக்கு மஹிந்தவை அழைக்கிறார் மைத்திரிபால!

அடுத்த மாத முற்பகுதியில், முடிந்தால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ என்னுடன் பகிரங்க விவாதத்துக்கு வரட்டும். இவ்வாறு நேற்று புதன்கிழமை சவால் விடுத்துள்ளார் பொது எதிரணிகளின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன. கொழும்பு பம்பலப்பிட்டியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இந்தச் சவாலை விடுத்தார். நாட்டின் ஜனநாயகம், நல்லாட்சி குறித்து தான்...

கிளி.யில் பிக்கப் வாகனத்தை மோதித் தள்ளியது புகையிரதம்: இருவர் படுகாயம்

கிளிநொச்சி, கரடிப்போக்குச் சந்தி உருத்திரபுரம் வீதியில் புகையிரத கடவையைக் கடந்து செல்ல முற்பட்ட பிக்கப் வாகனத்தை புகையிரதம் மோதியதில் வாகனத்தில் பயணித்த இருவரும் படுகாயமடைந்து கிளிநொச்சி பொது மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த விபத்து நேற்று இரவு 7 மணியளவில் இடம்பெற்றுள்ளது. மேலும் விபத்து தொடர்பில் தெரிய வருவது, கிளிநொச்சியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி...

அரசியல் ரீதியாக அடிபணிந்து எமது உரிமைகளைப் பெறமாட்டோம் – முதலமைச்சர்

தெற்கில் இருந்து எமது தமிழ்ப் பேசும் மக்கள் எவ்வாறு வன்முறைகளினால் அப்பிரதேசங்களைவிட்டு வெளியேற்றப்பட்டார்களோ அதே போல் வடகிழக்கில் வாழ்ந்து வரும் தமிழ்ப் பேசும் மக்கள் வாழ்விடங்களை விட்டு வெளியேறவும் வெளியார்கள் வந்து குடியமர வழி அமைக்கவும் கட்டாயப்படுத்தப்பட்டு வருகின்றார்கள் என முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். மாகாண பேரவைச் மண்டபத்தில் முதலமைச்சரால் சமர்ப்பிக்கப்பட்ட 2015 ஆம் ஆண்டுக்கான...

ஆளுநருக்கு எதிரான நடவடிக்கைக்கு ஆதரவு – தவராசா

வடமாகாண சபையின் செயற்பாடுகளுக்கு வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி தடையாக இருக்கின்றார் என்பதற்கு ஆதாரங்களுடன் உரிய விடயங்களை படிமுறையாக தந்தால், வடமாகாண ஆளுநருக்கு எதிராக வடமாகாண சபை எடுக்கும் நடவடிக்கைகளுக்கு ஆதரவு வழங்க தயாராகவிருப்பதாக வடமாகாண எதிர்க்கட்சி தலைவர் சின்னத்துரை தவராசா சபையில் தெரிவித்தார். வடமாகாண சபையின் 2015ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்டம் தொடர்பான விவாதத்துக்கான...

கணவர் இராணுவத்தினரால் சுற்றிவளைக்கப்பட்டு பிடிக்கப்பட்டார்! – மனைவி

தனது கணவரான வேலுப்பிள்ளை பிரபாகரன் (வயது 26) முகமாலைப் பகுதியில் கடந்த 2006 ஆம் ஆண்டு இராணுவத்தினரால் சுற்றிவளைக்கப்பட்டு பிடிக்கப்பட்டார். இதுவரை அவர் குறித்த எந்தத் தகவலும் எனக்குக் கிடைக்கவில்லை. இவ்வாறு சாட்சியமளித்தார் பிரபாகரன் பாலேஸ்வரி. ஆணைக்குழுவின் இறுதி நாள் அமர்வு இன்று புதன்கிழமை வவுனியா பிரதேச செயலகத்தில் நடைபெறுகிறது. இதில் சாட்சியமளித்த குறித்த பெண்...

முல்லைத்தீவில் ஜனாதிபதியின் தேர்தல் பிரசாரக் கூட்டம்!

நாளை வியாழக்கிழமை முல்லைத்தீவுக்கு விஜயம் மேற்கொள்ளும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ முள்ளியவளை ஐயனார் கோவில் வளாகத்தில் நடைபெறும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் ஜனாதிபதித் தேர்தலுக்காக பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுவார். பிரசாரக் கூட்டத்தில் மக்களை கலந்துகொள்ளுவதற்கு வசதியாக இலவச போக்குவரத்து சேவைகளும் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது. இதனையிட்டு நேற்று முதல் முல்லைத்தீவு மாவட்டம் முழுவதும் விசேட பாதுகாப்பு...

வடபகுதி மக்களுக்கு ஜனாதிபதி மஹிந்த ஒருபோதும் தீர்வு பெற்றுக் கொடுக்கமாட்டார்!

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ ஆட்சியிலிருக்கும் வரை வடபகுதி மக்கள் அதிகாரப் பகிர்வை எதிர்பார்க்க முடியாது என முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்தின இந்து நாளிதழுக்குத் தெரிவித்துள்ளார். இந்தியா ஒரு ஜனநாயக நாடு, ஆனால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ சர்வாதிகார மனோநிலையில் இருக்கிறார். எனவே இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையே பெரும் இடைவெளியுள்ளது. இதன் காரணமாக இரு நாடுகளுக்கும்...

நிதி ஒதுக்கீடு தொடர்பான விவாதம் ஆரம்பம்

வடமாகாண சபையின் 2015 ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பான விசேட விவாதம் கைதடியிலுள்ள வடமாகாண சபையில் காலை 9 மணிக்கு ஆரம்பமானது. இன்று ஆளுநர் அலுவலகம், முதலமைச்சர் அலுவலகம் மற்றும் பிரதம செயலாளர் அலுவலகத்திற்கான நிதி ஒதுக்கீட்டு முன்மொழிவு பிரேரணை சமர்ப்பிக்கப்படவுள்ளது. தற்போது முதலமைச்சர் அலுவலகத்திற்கான நிதி ஒதுக்கீட்டுப் பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டு விவாதங்கள் இடம்பெறுகிறது....

ஊழலை ஒழிப்பதே எனது இலக்கு – ஜனாதிபதி

இலங்கையிலிருந்து வறுமை மற்றும் நாட்டின் முன்னேற்றத்துக்கு தடையாக உள்ள ஊழல் என்பவற்றை முற்றாக ஒழிப்பதே தனது இலக்கு என ஜனாதிபதி மஹிந்த ராஷபக்ஷ தெரிவித்தார். கொழும்பு சினமன் கிரேன்ட் ஹோட்டலில் இடம்பெற்ற momentum வர்த்தக கலந்துரையாடலில் புதன்கிழமை(17) கலந்து கொண்டு உரையாற்றுகையில் அவர் இதனை கூறினார்.

ஊடகவியலாளர் வீட்டில் ஆவணங்கள் திருட்டு

கிளிநொச்சி, திருமுறிகண்டி பகுதியில் வசித்து வரும் பிராந்திய ஊடகவியலாளர் ஒருவரின் வீட்டிலிருந்த முக்கிய ஆவணங்கள் செவ்வாய்க்கிழமை (16) பகல் திருடப்பட்டுள்ளதாக ஊடகவியலாளர் முறைப்பாடு பதிவு செய்ததாக மாங்குளம் பொலிஸார் தெரிவித்தனர். ஊடகவியலாளரும், அவரது மனைவியும் வீட்டை பூட்டிவிட்டு வெளியில் சென்றிருந்த நேரம், வீட்டின் கதவை உடைத்து உள்நுழைந்துள்ள இனந்தெரியாத நபர்கள், அங்கிருந்த ஆவணங்களை திருடிச் சென்றுள்ளதாக...

எண்ணெய் கசிவு வழக்கு; ஜனவரி 14இல் கட்டளை பிறப்பிக்கப்படும்

சுன்னாகம் பகுதியிலுள்ள கிணறுகளில் எண்ணெய் கசிவு ஏற்பட்டமை தொடர்பில் எதிர்வரும் ஜனவரி 14ஆம் திகதி கட்டளை பிறப்பிக்கப்படும் என மல்லாகம் நீதவான் சி.சதீஸ்தரன் செவ்வாய்க்கிழமை (16) தெரிவித்தார். இலங்கை மின்சார சபையின், சுன்னாகம் நோர்தன் பவர் நிறுவன மின்பிறப்பாக்கியிலிருந்து வெளியேற்றப்பட்ட கழிவொயில், வெறுமனவே நிலத்தில் கொட்டப்பட்டமையால், சுற்றுவட்டாரத்திலுள்ள கிணறுகளில் எண்ணெய் கசிவு ஏற்பட்டதாக கூறி, தெல்லிப்பளை...

ஐந்து சந்தி குழு மோதல் ; மூவர் கைது

ஐந்து சந்தி பகுதியில் கடந்த 14 ஆம் திகதி இரவு இடம்பெற்ற குழு மோதலுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில், மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த குழு மோதலின் போது, ஐந்து சந்தியில் அமைந்துள்ள பீடா கடை, மோட்டார் சைக்கிள் மற்றும் சைக்கிள்களும் தீக்கிரையாக்கப்பட்டன. அத்துடன், வாள்வெட்டுக்கு இலக்கான மூவர் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை...

இராணுவ ஆக்கிரமிப்பு எமது ஆட்சியில் இருக்காது – ரணில்

அபி­வி­ருத்தி என்ற பெயரில் அனைத்து துறை­க­ளிலும் இரா­ணுவ ஆக்­கி­ர­மிப்­பினை மேற்­கொள்ளும் இரா­ணுவ ஆட்சி எமது அரசாங்கத்தில் இருக்­காது. எமது ஆட்சியில் அதன் கட­மை­யினை மட்­டுமே இரா­ணுவம் செய்யும் என தெரி­வித்த எதிர்க்­கட்சி தலைவர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க சர்­வ­தே­சத்தின் மத்­தியில் இலங்கை மறைக்­கப்­பட்டு விட்­டது. அதனை மீட்­டெ­டுக்கவேண்டும் எனவும் குறிப்­பிட்டார். சுற்­று­லாத்­துறை சார் வர்த்­த­கர்­க­ளு­ட­னான சந்­திப்­பொன்றை நேற்று...
Loading posts...

All posts loaded

No more posts