Ad Widget

வடக்கு மக்கள் யாழ்தேவி ரயிலைக் கோரவில்லை, அரசியல் அதிகாரத்தையே கோரினர் – டிலான் பெரேரா

வடக்கு வாழ் மக்கள் யாழ்தேவி ரயிலையும் ரயில் பாதையையும் அமைத்துத் தருமாறு கோரவில்லை எனவும், அவர்கள் அரசியல் அதிகாரத்தை கோரி நின்றதாகவும் முன்னாள் அமைச்சர் டிலான் பெரேரா தெரவித்துள்ளார்.

dilan_perara

கடந்த 8ம் திகதி நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தோல்வியைத் தழுவியமை குறித்து அவர் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார்.

வடக்கு கிழக்கு மக்களுக்கு அதிகாரத்தை பகிர்ந்தளிக்குமாறு பல தடவைகள் தாம் கோரியதாகத் தெரிவித்துள்ளார்.

ஏதாவது ஓர் அடிப்படையில் அதிகாரம் பகிர்ந்தளிக்கப்பட்டிருக்க வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் தமது கோரிக்கைக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

கிழக்கின் உதயம், வடக்கின் வசந்தம் உள்ளிட்ட பல்வேறு முக்கியமான அபிவிருத்தித் திட்டங்களை அரசாங்கம் வெற்றிகரமாக முன்னெடுத்தது எனவும், அதனை அவதானிக்க முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மக்கள் அபிவிருத்தி திட்டங்களை விடவும் அரசியல் அதிகாரங்களை விரும்பி நின்றதாகத் தெரிவித்துள்ளார்.

வடக்கு கிழக்கு மாகாணங்களில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கு வாக்குகள் கிடைக்கவில்லை எனவும் இதுவே தேர்தல் தோல்விக்கு வழியமைத்தது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Posts