Ad Widget

புதிய அரசின் நூறு நாள் திட்டத்தை வெளியில் இருந்து ஆதரிப்போம் – ஈபிடீபி

புதிதாக ஆட்சிப்பொறுப்பை ஏற்றிருக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் நூறு நாட்கள் வேலைத்திட்டத்தை வெளியில் இருந்தே ஆதரிப்பதென ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி முடிவு செய்திருக்கின்றது.

இது தொடர்பில் அக்கட்சி விடுத்திருக்கும் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

‘நடந்திருக்கும் ஆட்சி மாற்றத்திலும் எமது மக்களுக்கு மகிழ்ச்சி தரும் ஆக்கபூர்வமான திட்டங்கள்
தொடர வேண்டும் என்பதையே நாம் விரும்புகின்றோம். தமிழ் பேசும் மக்களின் அரசியல் உரிமைப் பிரச்சினைக்கான தீர்வு குறித்து புதிய அரசு எந்த வழிமுறையை கொண்டிருக்கிறது என்பதை இதுவரை வெளிப்படையாக தெரிவிக்கவில்லை.

தமிழ் பேசும் மக்களின் அரசியல் உரிமைப் பிரச்சனைக்கு எவ்வாறான தீர்வு காணப்படப்போகின்றது. என்பதை நாம் புதிய அரசுடன் கூடிப்பேசிய பின்னரே எமது கட்சியின் எதிர்கால அரசியல் நிலைப்பாடு எது என்பதை தீர்மானிப்போம்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் தேர்தல் வாக்குறுதியில் சொல்லப்பட்ட நூறு நாட்கள் திட்டத்தில் சகல மக்களுக்கும் பயன்தரும் நல்ல பல அம்சங்கள் உண்டு. புதிய அரசு அவைகளை நிறைவேற்ற வேண்டும் என விரும்பும் நாம் அதற்கான எமது ஆதரவை வெளியில் இருந்து கொண்டே
வழங்குவோம்.

எமது மக்களின் நம்பிக்கையான எதிர்காலத்திற்காகவும், நியாயமான அரசியல் தீர்வுக்காகவும், நாம் நடைமுறை யதார்த்த வழி நின்று உரிமைக்கு குரல் கொடுப்போம். உறவுக்கு கரம் கொடுப்போம். என்றும் நாம் மக்களுக்காக…’ என்று அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts