மஹிந்தவுக்கு ஆதரவாக இராணுவத்தினர் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவதே இல்லையாம்!

"ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு ஆதரவாக இராணுவத்தினர் தேர்தல் பிரசாரங்களில் ஈடுகின்றனர் என்றும், அவர்கள் கடமைகளைச் சரிவரச் செய்வதில்லை என்றும், யுத்தத்தை வெற்றி கொண்ட சிப்பாய்கள் கீழ் மட்ட வேலைகளில் அமர்த்தப்படுகிறார்கள் என்றும் தெரிவிக்கப்படும் கருத்துகள் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானவை." - இவ்வாறு பாதுகாப்பு அமைச்சு மற்றும் இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய...

தபால் மூல வாக்காளர்களுக்கு த.தே.கூ. என்ன கருத்தை கூறியுள்ளது: சங்கரி கேள்வி

ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்கும் தபால் மூல வாக்காளர்களுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ன கருத்தை கூறியிருக்கிறார்கள். தபால் மூலமான வாக்களிப்பு முடிந்த பின்னர் கருத்து தெரிவித்து என்ன பயன். எனவே கூட்டமைப்பின் முடிவுக்கு காத்திருக்கவேண்டாம் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி, திங்கட்கிழமை (22) தெரிவித்தார். யாழ். ஊடக அமையத்தில் திங்கட்கிழமை (22)...
Ad Widget

அமைச்சர் ரிஷாத், மைத்திரிக்கு ஆதரவு

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரிஷாத் பதியுதீன், பொது எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை ஆதரிக்க முடிவுசெய்துள்ளார். இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் அண்மையில் சத்தியப்பிமான செய்துகொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் அமீர் அலியும் கலந்துகொண்டுள்ளார். இதேவேளை, தற்போது அவர்கள் இருவரும் ஊடகவியலாளர் மாநாட்டை நடத்தி கொண்டிருக்கின்றனர். அதில் பொது எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர்...

தமிழ் மக்களுக்கு அபிவிருத்தி வேண்டுமென்றால் ஜனாதிபதி வெற்றிபெறவேண்டும் – ஈ.பி.டி.பி

அபிவிருத்தியில் தமிழ்மக்கள் தொடர்ந்தும் பயணிக்க வேண்டுமானால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வெற்றி உறுதிப்படவேண்டும் என ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ்.மாவட்ட அமைப்பாளர் கே.வி.குகேந்திரன் தெரிவித்தார். காங்கேச்துறை தொகுதிக்கான ஜனாதிபதி தேர்தல் பரப்புரைக்கூட்டம் தெல்லிப்பளை பகுதியிலுள்ள ஈ.பி.டி.பியின் கட்சி அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை (21) நடைபெற்றபோதே, அதில் கலந்துகொண்டு குகேந்திரன் மேற்கண்டவாறு கூறினார். அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில்,...

ஹக்கீம் மைத்திரிக்கு ஆதரவு

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு வழங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எந்த வேட்பாளருக்கு ஆதரளிப்பது என்பது தொடர்பில் முஸ்லிம் காங்கிரஸில் இரு வேறு நிலைப்பாடுகள் முன்வைக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் இறுதி முடிவு எடுக்கும் பொறுப்பை கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீமிடம் ஒப்படைக்கப்பட்டது. இதனடிப்படையில், முஸ்லிம்...

நாட்டின் அனைத்து பாகங்களிலும் மழை பெய்வதற்கான சாத்தியம்?

காலநிலை மாற்றத்தினால் இன்று (22) நாட்டின் அனைத்து பாகங்களிலும் மழைவீழ்ச்சியினளவு அதிகரிப்பதற்கான சந்தர்ப்பங்கள் காணப்படுகின்றது எனவும் வடக்கு மத்திய வடமத்திய கிழக்கு ஊவா மாகாணங்களில் மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் இடியுடன் கூடிய மழைக்கு சாத்தியம் நிலவுவதாகவும் வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. அத்துடன் மற்றும் பல பிரதேசங்களில் மாலை அல்லது இரவு நேரங்களில் இடியுடன் கூடிய...

தபால் மூல வாக்களிப்பு நாளை ஆரம்பம்

ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு அரச ஊழியர்களுக்கான உத்தியோகபூர்வ தபால் மூல வாக்களிப்பு நாளையும்,நாளை மறுதினமும் நடாத்தப்படவுள்ளன. அஞ்சல்மூல வாக்காளர்கள் தமது வாக்குகளை சுதந்திரமாகவும் இரகசியமாகவும் அடையாளமிடுவதற்கான ஏற்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப் பிரிய தெரிவித்துள்ளார். வாக்காளர்களை அடையாள மிட்டுள்ள சின்னம் பிறர் அறியாதவகையில் பாதுகாக்கப்படும். அஞ்சல் வாக்கு அடையாளமிடும் இடமொன்றில் வாக்களிப்பதற்கான தடை...

இரணைமடுகுளத்தின் 11 வான் கதவுகள் திறப்பு

பெய்துவரும் கடும்மழை காரணமாக இரணைமடுக்குளத்தின் நீர்மட்டம் நாளுக்குநாள் உயர்ந்துவந்த நிலையில் இன்று திங்கட்கிழமை (22.12.2014) காலை 31அடி 4 அங்குலத்தை எட்டியது. இதையடுத்து அணைக்கட்டுகளின் பாதுகாப்புக்கருதி, குளத்தின் 11 வான்கதவுகளும் காலை 8.30 மணியளவில் பகுதியளவில் திறக்கப்பட்டுள்ளன. நீர்ப்பாசனத் திணைக்கள அதிகாரிகளினால் இரணைமடு கனகாம்பிகை ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்ட பின்னர், வடமாகாண விவசாய...

தமிழர் விடுதலைக் கூட்டணி மைத்திரிக்கு ஆதரவு என அறிவிப்பு!

ஜனாதிபதித் தேர்தலில் சகல மக்களும் பொது வேட்பாளராகிய மைத்திரிபால சிறிசேனவுக்கு பூரண ஆதரவு வழங்க வேண்டுமென தமிழர் விடுதலைக் கூட்டணியின் யாழ். மாவட்டக்கிளை ஏகமனதாகத் தீர்மானித்துள்ளது என்று அறிவித்துள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் செயலாளர் நாயகம் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:- பல்வேறு சந்தர்ப்பங்களில் அரசாங்கம் மாறியபோதும் எந்த அரசும் தமிழ் மக்களது பிரச்சினைகளைத் தீர்த்து வைக்காத...

மைத்திரி 30 இல், மஹிந்த 2 இல் வடக்கில் தீவிர தேர்தல் பிரசாரம்!

ஜனாதிபதித் தேர்தல் பிரசாரம் சூடுபிடித்திருக்கும் இத்தருணத்தில் பொது எதிரணியின் வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன, அரச தரப்பின் வேட்பாளர் மஹிந்த ராஜபக்‌ஷ ஆகியோர் வடக்கில் தீவிர பிரசாரத்தில் ஈடுபடவுள்ளனர். ஏற்கனவே கடந்த 18ஆம் திகதி வியாழக்கிழமை முல்லைத்தீவில் வடக்குக்கான தனது முதலாவது பிரசாரத்தை ஆரம்பித்துவைத்த மஹிந்த அன்று மாலை கிளிநொச்சியிலும் பிரசாரத்தை நடத்திவிட்டு கிழக்கு மாகாணம் சென்றிருந்தார்...

திருநெல்வேலியில் இளைஞர் குழு அட்டகாசம்

திருநெல்வேலி, ஆடியபாதம் வீதியில் பிரதம செயலாளர் அலுவலகத்துக்கு அருகிலுள்ள வீடுகளின் மீது சனிக்கிழமை (20) இரவு கற்களை எறிந்தும் கதவுகளை காலால் உதைத்தும் இளைஞர் குழுவொன்று அட்டகாசம் செய்ததாக அப்பகுதி மக்கள் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். அயலவர்கள் ஒன்றுகூடிய போது, அட்டகாசம் செய்த இளைஞர்கள் அவ்விடத்தில் இருந்த ஓடிவிட்டனர். 119 இலக்கத்துக்கும் கோப்பாய்...

ஜனாதிபதிக்கு எதிராக மக்கள் வாக்களிக்க வேண்டும் – ஜே.வி.பி

நாட்டில் தற்போது உள்ள நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி முறைமையை முடிவு செய்யும் வகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை தோற்கடிப்பதற்காக மக்கள் அனைவரும் ஜனாதிபதிக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என்று மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினரும் கட்சியின் பிரசார செயலாளருமான விஜித ஹேரத் தெரிவித்தார். எதிர்வரும் ஜனவரி 8 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில்...

எதிர்ப்பு அரசியலால் சாதிக்க முடியாது; பாரதிராஜாவிடம் டக்ளஸ் விளக்கம்

எதிர்ப்பரசியலால் எதையும் செய்ய முடியாது. இணக்க அரசியலினூடாகவே எதையும் சாதிக்க முடியுமென ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும், அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா, தென்னிந்திய திரைப்பட இயக்குநர் பாரதிராஜாவிடம் சுட்டிக்காட்டினார். யாழ்ப்பாணத்துக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள இயக்குநர் பாராதிராஜாவை, யாழ்ப்பாணம், டில்கோ விடுதியில் சந்தித்து உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்ட விளக்களத்தை வழங்கினார். அங்கு தொடர்ந்தும்...

அணை உடைப்பெடுப்பு: மூதூர் மூழ்கும் அபாயம்

வெள்ளப் பாதுகாப்பு அணை உடைப் பெடுத்துள்ளதால் மூதூர் பிரதேசம் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சேருவில பிரதேசத்திலுள்ள 'வெள்ளம் தாங்கி' என்னும் பகுதியிலேயே பாதுகாப்பு அணை நேற்றிரவு அல்லது இன்று அதிகாலைவேளையில் உடைப்பெடுத்துள்ளதாக தெரிய வருகிறது. 1958ஆம் ஆண்டு ஏற்பட்ட பெரும் வெள்ளத்திற்குப் பின்பு மூதூர் மற்றும் சேருவில பிரதேசத்தின் சில பகுதிகளை வெள்ளத்திலிருந்து பாதுகாக்கும்...

யாழ்.போதனா வைத்தியசாலை சிற்றூழியர் மீது வாள் வெட்டு

யாழ்.போதனா வைத்தியசாலையின் தாதியர் பயிற்சிக் கல்லூரி( என்.ரி.எஸ்)யில் பணிபுரியும் சிற்றூழியர் ஒருவர் வாள் வெட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்த நிலையில் அதிதீவிர சிகிச்சைப்பரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். புங்குடுதீவு முதலாம் வட்டாரத்தைச் சேர்ந்த நிஷாந்தினி( வயது 24) யாழ். போதனா வைத்தியசாலையின் தாதியர் பயிற்சிக் கல்லூரியில் சிற்றூழியராக கடமையாற்றி வருகின்றார். இன்று காலை வீட்டில் இருந்து புறப்பட்டவரை யாழ். நகர்ப்பகுதியில்...

வடமாகாண கால்நடை அபிவிருத்தி அமைச்சால் மாங்குளத்தில் கோழிக்குஞ்சுகள் விநியோகம்

வடமாகாண கால்நடை அபிவிருத்தி அமைச்சின் ஏற்பாட்டில் நேற்று சனிக்கிழமை (20.12.2014) மாங்குளத்தில் கோழிக்குஞ்சுகள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன. வடமாகாண கால்நடை அபிவிருத்தி அமைச்சுக்கு ஒதுக்கப்பட்ட அபிவிருத்தி நன்கொடை நிதியில் இருந்து வடக்கின் ஐந்து மாவட்டங்களுக்கும் கோழிக்குஞ்சுகள் வழங்கப்பட்டு வருகின்றன. பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் மற்றும் வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழும் குடும்பங்களில் இருந்து தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு...

இயக்குநர் பாரதிராஜா வடக்கு முதல்வர் சந்திப்பு

தமிழ் நாட்டில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்திருந்திருக்கும் இயக்குநர் பாரதிராஜா இன்று ஞாயிற்றுக்கிழமை (21.12.2014) மரியாதை நிமித்தமாக வடக்கு முதல்வர் க.வி. விக்னேஸ்வரன் அவர்களை அவரது வாசஸ்தலத்துக்குச் சென்று சந்தித்திருந்தார். இந்தச் சந்திப்பில் வடக்கு முதல்வருடன் வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசனும் கலந்து கொண்டிருந்தார்.

வடக்கு வரும் வெளிநாட்டு தேர்தல் கண்காணிப்பாளர்களும் பாதுகாப்பு அமைச்சின் அனுமதியை பெறவேண்டும்!

வட பகுதியில் தேர்தல் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்வதற்காக வருகின்ற வெளிநாட்டு கண்காணிப்பாளர்களும் பாதுகாப்பு அமைச்சின் அனுமதியை பெறவேண்டும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய இந்த அறிவிப்பை வெளியிட்டார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்த விடயங்கள் வருமாறு: வட பகுதிக்கு வெளிநாட்டவர்கள் வருவதற்காக விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை நாங்கள் நீக்கவில்லை. பாதுகாப்பு அமைச்சின் அனுமதியின்றி...

வ.மா. முதலமைச்சரின் வங்கிக் கணக்கைத் திறக்க ஆளுநர் அனுமதி மறுப்பு

வடமாகாண முதலமைச்சரின் பேரில் ஒரு உத்தியோகபூர்வ வங்கிக் கணக்கைத் திறக்கக் கூட ஆளுநர் அனுமதிக்கின்றார் இல்லை. ஆனால் தம் பெயரில் ஆளுநர் நம்பிக்கை பொறுப்பு வங்கிக் கணக்கு என்று ஒன்றை வைத்திருந்து அதைச் செயல்படுத்தி வருகின்றார் என வடமாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். முழங்காவிலில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு...

சண்டிலிப்பாயில் சடலம் மீட்பு

மானிப்பாய், கட்டுடை காட்டுப் பகுதியில் எரிந்த நிலையில் இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மூன்று தினங்களுக்கு முன்னர் மானிப்பாயைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் காணாமற்போயிருந்தார் என்றும், அந்த இளைஞரின் சடலமே மீட்கப்பட்டிருக்கலாம் என்றும் பிரதேச மக்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக மானிப்பாய் பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.
Loading posts...

All posts loaded

No more posts