Ad Widget

சிலை உடைக்கப்பட்டமை தொடர்பில் விசாரணை வேண்டும் – சிவராசா

வேலணை மத்திய கல்லூரியின் நுழைவாயிலில் அமைக்கப்பட்டிருந்த சரஸ்வதி சிலையை உடைத்த விசமிகள் தொடர்பில் விரிவான விசாரணை வேண்டும் என வேலணை பிரதேச சபை தவிசாளர் சின்னையா சிவராசா தெரிவித்தார்.

00(120)

வேலணை மத்திய கல்லூரியின் நுழைவாயிலில் அமைக்கப்பட்ட சரஸ்வதி சிலை கடந்த புதன்கிழமை (14) இரவு உடைக்கப்பட்டது தொடர்பில் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் வேலணை அமைப்பாளரும், வேலணை பிரதேச சபையின் தவிசாளருமாகிய சின்னையா சிவராசா விடுத்துள்ள கண்டன அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

கல்வித் தெய்வமான சரஸ்வதி தேவியின் சிலை சமூக விரோதிகளால் உடைத்து சேதமாக்கப்பட்டிருப்பதை கடுமையாக கண்டிக்கின்றேன்.

சரஸ்வதியின் சிலையை உடைத்தவர்கள் யார், யாருடைய தூண்டுதலில் உடைக்கப்பட்டது, அரசியல் காரணங்கள் உள்ளனவா என்பன தொடர்பில் பொலிஸார் விரிவாக விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும்.

எமது கட்சியின் மீது அநாகரீகமான குற்றச்சாட்டை சிலர் சுமத்த நினைப்பது ஆரோக்கியமான செயல் இல்லை.

வேலணை மத்திய கல்லூரியின் இரண்டு மாடிக்கட்டடத்துக்கு 100 மில்லியன் ரூபாய் நிதியை ஒதுக்கி, கல்லூரியின் கல்வியை வளர்ச்சியடைச் செய்தது எங்கள் கட்சியென்பது மக்கள் அறிந்த உண்மை.

அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக எமது கட்சி மீது சேறு பூசும் நடவடிக்கையில் சிலர் ஈடுபடுகின்றனர். இவ்வாறான செயல்களுக்கு மக்கள் இடமளிக்காத வகையில் விழிப்பாக இருக்கவேண்டும் என அவர் தனது கண்டன அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

Related Posts