Ad Widget

மகேஸ்வரி நிதியம் மணல் அகழ்வதற்கு தற்காலிகத் தடை!

மகேஸ்வரி நிதியம் மேற்கொண்டு வரும் மணல் அகழ்வுக்கு பொலிஸாரால் தற்காலிகத் தடை விதிக்கப்பட்டது.

makeswarey-manal

மணல் அகழ்வைத் தடுக்கக் கோரி இன்று வெள்ளிக்கிழமை வடமராட்சி கிழக்கு மக்களால் நாகர்கோயில் பகுதியில் ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டது.

அந்தநேரம் ஆர்ப்பாட்டம் நடைபெற்ற பகுதிக்கு வந்த மகேஸ்வரி நிதியத்தைச் சேர்ந்த சிலர் ‘இது தமக்குச் சொந்தமான இடம். அனுமதிப்பத்திரத்துடனேயே மணல் அகழ்கின்றோம். அதனால் இங்கு ஆர்ப்பாட்டம் செய்யவேண்டாம்’ என்று கூறினர்.

இதையடுத்து ஆர்ப்பாட்டக்காரார்களால் பொலிஸாருக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. அங்கு வந்த பொலிஸார் அவர்களின் அனுமதிப்பத்திரத்தை பரிசோதித்தபோது அது கடந்த டிசெம்பர் மாத்துடன் கலாவதியாகியிருந்தது.

கலாவதியாகிய அனுமதிப்பத்திரத்துடன் மணல் அகழ்வில் ஈடுபடமுடியாது என பொலிஸார் கூறினர்.

இதையடுத்து மேலிடத்துடன் கதைக்கும்படி தொலைபேசி இலக்கம் ஒன்றை அவர்கள் கொடுத்துள்ளனர்.

மேலிடத்துடன் பேசவேண்டிய தேவை எமக்கு இல்லை. அனுமதிப்பத்திரம் இன்றி மணல் அகழ்வில் ஈடுபடமுடியாது என்று பொலிஸ் அத்தியட்சகர் கூறியதுடன் அமைதிக்குப் பங்கம் விளைவித்த காரணத்தினால் மகேஸ்வரி நிதியம் மணல் அகழ்தற்குக் தற்காலிக தடை விதித்தார்.

உதவி அரசாங்க அதிபர், அதிகாரிகள் பொதுமக்கள் பிரதிநிகள், ஆகியோருடன் கலந்துரையாடிய பின்னரே மணல் அகழ்வதற்கு மகேஸ்வரி நிதியத்துக்கு அனுமதியளிக்கப்படும் என்று கூறினார். இதையடுத்து மணல்கள் ஏற்றிக் கொண்டிருந்த டிராக்டர்கள் ஏற்றிய மணலை கொட்டிவிட்டு அந்த இடத்தை விட்டு அகன்றன.

Related Posts