- Thursday
- July 10th, 2025

இரணைமடுக்குளத்தின் நீர் மட்டம் 30 அடியை எட்டியுள்ளது. 31 அடியை எட்டுமாக இருந்தால் வான் கதவுகள் திறக்க நேரிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நிலைமையைக் கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் திருமதி ரூபாவதி கேதீஸ்வரன் நேற்று மாலை நேரில் சென்று ஆராய்ந்துள்ளார். கிளிநொச்சி மாவட்டத்தில் தொடர்ச்சியாகப் பெய்து வரும் மழை காரணமாக நீர் வரத்து...

பொது எதிரணியின் தேர்தல் விஞ்ஞாபனம் தொடர்பில் தமிழ் மக்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். அவர்களின் அன்றாடப் பிரச்சினைக்கான தீர்வு தொடர்பிலும் விஞ்ஞாபனத் தில் குறிப்பிடாதமை ஏமாற்ற மளிப்பதாகவே அமைந்துள்ளது. இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், பேச்சாளருமான க.சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். ஜனவரி மாதம் 8 ஆம் திகதி இடம் பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும்...

கடந்த சில வாரங்களாக பல கோடி ரூபா விசா மோசடி தொடர்பில் இணையத்தளங்களில் செய்திகள் வெளியாகி சர்சைக்குள்ளாகியிருந்த விசா வழிகாட்டி நிறுவனமான திசைகாட்டி நிறுவனத்தில் பாதிக்கப்பட்டவர்களால் குறித்த நிறுவனம் நேற்று முன்னிரவு தீயிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. குறித்த நிறுவனத்தில் பல லட்சங்களை செலுத்தி பாதிக்கப்பட்டவர்களால் காவல்துறையில் பல முறைப்பாடுகள் பதிவுசெய்யப்பட்டுள்ளதாகவும் இருப்பினும் வழக்குகள் எதுவும்...

குடும்ப ஆட்சியை இல்லாதொழிக்க பொது வேட்பாளரை வெற்றி பெறச்செய்வதில் பங்குதாரர் ஆகுங்கள் என வடமகாணசபையின் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் ஐயூப் அஸ்மின் தெரிவித்தார். வவுனியா மாங்குளத்தில் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை ஆதரித்து நேற்று இடம்பெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து அங்கு அவர் கருத்து தெரிவிக்கையில் -...

யாழ் மாவட்டத்திலுள்ள விவசாயிகளின் பிரச்சனைகள் தொடர்பாக ஆராயும் விசேட கலந்துரையாடல் ஒன்று நேற்று முந்தினம் (18) யாழ் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமை நாயகம் தலைமையில் நடைபெற்ற இந்த கலந்துரையாடலில் யாழ் மவாட்ட விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் வங்கிகளின் முகாமையாளர்கள்கலந்துகொண்டனர். இதன்போது கடந்த முறை நடைபெற்ற விவசாய...

வானிலையில் ஏற்பட்ட காலநிலை மாற்றத்தினால் அடுத்த சில நாட்களுக்கு நாட்டின் சில பாகங்களில் மழைவீழ்ச்சியினளவு அதிகரிக்கலாம் எனவும் குறிப்பாக மத்திய வடமத்திய கிழக்கு ஊவா மாகாணங்களில் இம் மழைவீழ்ச்சியினளவு அதிகரிக்கும் சாத்தியம் நிலவுவதாகவும் இன்று (20) வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. அத்துடன் மற்றும் பல பிரதேசங்களில் மாலை அல்லது இரவு நேரங்களில் இடியுடன் கூடிய...

யாழ்ப்பாணம் பாதுகாப்பு படைத்தலைமையகத்தின் ஏற்பாட்டில் கிறிஸ்மஸ், புத்தாண்டு தின நிகழ்வுகள் யாழ். கோட்டைக்கு அருகாமையில் விசேடமாக அமைக்கப்பட்ட இடத்தில் வெள்ளிக்கிழமை (19) இரவு இடம்பெற்றது. இந் நிகழ்வில் பிரதம அதிதிகளாக யாழ். மாவட்ட கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் ஜெகத் அல்விஸ், மற்றும் யாழ். மறைமாவட்ட ஆயர் வணக்கத்திற்குரிய தோமஸ் சௌந்தரநாயகம் ஆண்டகை ஆகியோர் கலந்து கொண்டு...

எதிர்வரும் ஜனவரி மாதம் 8ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பதற்கு யாழ். மாவட்டத்தில் தகுதி பெற்ற 4 இலட்சத்து 50 ஆயிரத்து 132 பேரில் 2 இலட்சத்து 34 ஆயிரத்து 186 பேர் பெண் வாக்காளர்கள் என யாழ். மாவட்ட செயலாளரும் மாவட்ட தெரிவு அத்தாட்சி அதிகாரியுமான சுந்தரம் அருமைநாயகம், வெள்ளிக்கிழமை (19) தெரிவித்தார்....

இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள் மீது பாகிஸ்தானில் வைத்து நடத்தப்பட்ட தாக்குதலின் சூத்திரதாரி என சந்தேகிக்கப்படும் ஒருவருக்கு பாகிஸ்தானில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் பாடசாலை ஒன்றினுள் புகுந்து தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 139 மாணவர்கள் உள்ளிட்ட 149 பேர் கொல்லப்பட்டனர். இதனையடுத்து அந்த நாட்டில் மீண்டும் மரண தண்டனையை அமுலுக்கு கொண்டுவந்தனர். இதன்படி தண்டனை...

யாழ். மாவட்டத்திலுள்ள வீதிகளில் டிப்பர் ரக வாகனம், ஏனைய வாகனங்கள் அதிக வேகத்துடன் சென்றால் எதிர்காலத்தில் சாரதிகளுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என யாழ். மாவட்ட போக்குவரத்து பொலிஸ் பொறுப்பதிகாரி சமிந்தசில்வா தெரிவித்தார். போக்குவரத்து பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டு வரும் மாதாந்த அமர்வு அண்மையில் இடம்பெற்றது. அதன்போதே போக்குவரத்துப் பொலிஸ் பொறுப்பதிகாரி இதனை தெரிவித்தார் . அவர்...

வடக்கு ரயில் பாதையில் தலாவ மற்றும் தம்புத்தேகமவுக்கிடையில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. ரயில் பாதையில் வௌ்ளநீர் தேங்கியுள்ளமையே இதற்குக் காரணம் என ரயில்வே கட்டுப்பாட்டு மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது. இதனால் வவுனியாவில் இருந்து கொழும்பு நோக்கி பயணத்தை மேற்கொள்ளும் ரயில் சாவஸ்திரிபுர வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் கொழும்பு - கோட்டையில் இருந்து வடக்கு நோக்கிச் செல்லும்...

நாடு முழுக்க வாழும் தமிழ் பேசும் மக்கள், ஜனவரி எட்டாம் திகதி காலை ஏழு மணிக்கும் பத்து மணிக்கும் இடையில் தமது வாக்குகளை அளித்து விட வேண்டும். அன்று மாலை நேர வாக்களிப்பு வேண்டாம். தாமதம் வேண்டாம். மாலை நான்கு மணிவரை வாக்களிப்புக்கான வாய்ப்பு இருந்தாலும் நாம் நேர காலத்துடன் வாக்களிப்பது நமது வீட்டுக்கும், நமது...

மீன்பிடித்துக் கொண்டிருந்தவரின் படகை கடற்படையின் டோறா மோதித் தள்ளியதில் மீனவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். எழுவைதீவுக் கடலில் நேற்று வெள்ளிக்கிழமை அதிகாலை இந்தச் சம்வம் இடம்பெற்றது. இதில் எழுவைதீவு நான்காம் வட்டாரத்தைச் சேர்ந்த 6 பிள்ளைகளின் தந்தையான அன்ரனி யேசுதாசன் (வயது 60) என்பவரே உயிரிழந்தவராவார். இந்த சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது- குறித்த மீனவர் கரையிலிருந்து...

ஜனாதிபதி தேர்தலுக்கான பிரசார நடவடிக்கைகளில் ஈடுபடும் பொருட்டு தனக்கு இரண்டு பொலிஸாருடைய பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக வடமாகாண எதிர்க்கட்சி தலைவர் சின்னத்துரை தவராசா தெரிவித்தார். வடமாகாண சபையில் 2015ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் சமர்பிப்பு மற்றும் விவாதம் தொடர்பான அமர்வு கடந்த புதன்கிழமை (17) தொடக்கம் வெள்ளிக்கிழமை (19) வரையில் கைதடியில் அமைந்துள்ள வடமாகாண...

யாழ்ப்பாண தரைக்கீழ் நீர் மாசடைதலை தடுக்கும் விதத்தில் மனிதக்கழிவகற்றல் திட்டம் ஒன்று 2015 ஆம் ஆண்டு பங்குனி மாதமளவில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக சமூக அணிதிரட்டல் அலுவலர் பாலசுப்பிரமணியம் தெரிவித்தார். யாழ்ப்பாண தரைக்கீழ் நீர் மாசடைதல் பிரச்சனைக்குத் தீர்வு தொடர்பாக மக்களுக்கு விழிப்புணர்வூட்டும் கருத்தரங்கு நேற்று காலை 10 மணியளவில் நல்லூர் பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது. அதில் கலந்து...

கடந்த ஐந்து வருடங்களாக வடக்கு ஆளுநர், பிரதம செயலர் சட்டவிரோதமாகவே பதவியில் இருந்துள்ளனர் முன்னால் நீதியரசரும் வடக்கு முதலமைச்சருமான விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். மாகாண சபை அமைக்க முன்னரே வடக்கில் ஆளுநர் மற்றும் பிரதம செயலாளர் ஆகியோர் இருந்துள்ளனர். எனவே மாகாண சபை உருவாகிய பின்னர் அவர்களை மாற்றுமாறு கோருவதை ஏற்றுக் கொள்ள முடியாது என வடக்கு...

விவசாய, கமநல சேவைகள், கால்நடை அபிவிருத்தி, கூட்டுறவு அபிவிருத்தி, உணவு வழங்கல், நீர்வழங்கல், நீர்ப்பாசனம் மற்றும் சுற்றாடல் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் 19.12.2014 அன்று தனது அமைச்சின் நிதி ஒதுக்கீட்டைச் சமர்ப்பித்து ஆற்றிய உரை கௌரவ அவைத் தலைவர் அவர்களே, கௌரவ முதல்வர் அவர்களே, கௌரவ அமைச்சர்களே, கௌரவ உறுப்பினர்களே, மதிப்புக்குரிய செயலாளர்களே, திணைக்கள அதிகாரிகளே, உங்கள்...

நிதி இல்லை, ஆளணிப் பற்றாக்குறை என்று காரணம் கூறாமல் அர்ப்பணிப்புடன் நியதிச் சட்டங்களை துரிதமாக உருவாக்க வேண்டுமென வடமாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா தெரிவித்தார். நேற்று கைதடியிலுள்ள வடமாகாண சபையின் கட்டடத் தொகுதியில் இடம்பெற்ற வடமாகாண சபைக்கான 2015 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட குழுநிலை விவாதத்தின் 2 ஆம் நாள் அமர்வின்போது...

அகில இலங்கை ரீதியில் பாடசாலைகளுக்கு இடையிலான மேசைப் பந்தாட்ட சுற்றுப் போட்டியை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார். யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் இன்றைய தினம் (19) மேற்படி போட்டி ஆரம்பித்து வைக்கப்பட்டது. முன்பதாக யாழ்.மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 13 பாடசாலைகளுக்கு முதற்கட்டமாக மேசைப்பந்தாட்டத்துக்கான மேசைகளை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அந்தந்த...

எமது விடிவுக்காக போராடிய முன்னாள் போராளிகளுக்கும், உயிர் நீத்தவர்களின் குடும்பங்களுக்கும் 2015ஆம் ஆண்டில் தனது அமைச்சுக்கு ஒதுக்கப்பட்ட நிதியின் மூலம் உதவிகள் செய்யப்படும் என வடமாகாண மீன்பிடி அமைச்சர் பா.டெனீஸ்வரன் தெரிவித்தார். வடமாகாண சபையில் 2015ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் சமர்பிப்பு மற்றும் விவாதம் தொடர்பான அமர்வு கடந்த புதன்கிழமை (17) தொடக்கம்...

All posts loaded
No more posts