Ad Widget

தலைவர் பதவியை ஒப்படைக்கத் தயார் – மஹிந்த

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவர் பதவியை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் ஒப்படைக்க தயாராக இருப்பதாக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

maithripala_and_mahinda

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் கட்சித்தலைவர்களுக்கிடையில் நேற்று புதன்கிழமை (14) இரவு நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவர் பதவியிலிருந்து முன்னாள் ஜனாதிபதி விலகிவிடக்கூடாது என்று, தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச மற்றும் மாகாண சபை உறுப்பினரான உதய கம்மன்பில ஆகியோர் தெரிவித்திருந்த நிலையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான தீர்மானத்தை மேல்மாகாண முதலைமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவிப்பார் என்று கூறப்படுகின்றது.

இதேவேளை, ஜனாதிபதி மைத்திரபால சிறிசேனாவுக்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்குமிடையிலான உத்தியோபூர்வ சந்திப்பு இன்று வியாழக்கிழமை (15) இடம்பெறவுள்ளது.

கொழும்பு, விஜேராமவிலுள்ள ஜனாதிபதியின் இல்லத்திலேயே இச்சந்திப்பு இடம்பெறும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

Related Posts