Ad Widget

பாடசாலைகளில் அனர்த்த முகாமைத்துவ செயற்றிட்டங்கள்

யாழ். மாவட்டத்திலுள்ள பாடசாலைகளில் அனர்த்த முகாமைத்துவ செயற்றிட்டங்களை முன்னெடுக்க 525 தொண்டர்கள் இதுவரை உருவாக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்டச் செயலாளர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்தார்.

dak-suntharam-arumainayagam-GA

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

மாவட்ட ரீதியில் 21 பாடசாலைகளில் 525 தொண்டர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு 03 கட்டங்களாக பயிற்சிகள் கொடுக்கப்பட்டு, தேவையான உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது.

பாடசாலைகளில் அனர்த்த முகாமைத்துவத்துக்கு பொறுப்பாகவுள்ள ஆசிரியர்களுக்கு முதலுதவி, தீயணைப்பு, வீதி விபத்து, பாடசாலை பாதுகாப்புத்திட்டம் தயாரித்தல், வாழ்க்கைப் பாதுகாப்பு அடிப்படை, நீர் மூழ்குதல், தற்பாதுகாப்பு, அனர்த்த முகாமைத்துவத்துக்கான அடிப்படை பயிற்சிகள் என்பன வழங்கப்பட்டுள்ளன.

இவ்வாறு, அனர்த்த முகாமைத்துவ பாதுகாப்பு வளவாளர்களாக செயற்படுவதற்கு 40 ஆசிரியர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன.

அனர்த்த பாதுகாப்பை மேலும் ஒழுங்குபடுத்தும் வகையில் தொடர்ந்துவரும் காலங்களில் பிரதேச செயலக உத்தியோகஸ்தர்கள், முன்பள்ளி ஆசிரியர்கள் ஆகியோருக்கும் இந்த பயிற்சிகள் வழங்கப்பட உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Related Posts