- Wednesday
- July 30th, 2025

யாழ். ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் இடம்பெற்ற கைகலப்பு தொடர்பில் இன்று செவ்வாய்க்கிழமை (20) பிற்பகல் 3 மணிக்கு விசாரணைக்கு வருமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 8 உறுப்பினர்களை யாழ்ப்பாண பொலிஸார் அழைத்துள்ளனர். நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், வட மாகாண விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன், வடமாகாண சபை உறுப்பினர்களான பாலச்சந்திரன் கஜதீபன், எம்.கே.சிவாஜிலிங்கம், கந்தையா சர்வேஸ்வரன்,...

மரணப்படையொன்றின் தலைவராக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச செயற்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, சண்டேலீடர் பத்திரிகையின் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவை கொலைசெய்யுமாறு முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச இயக்கி வந்த மரணப்படைக்கு அவரே உத்தரவிட்டார் எனவும் எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் குறித்து...

வடமாகாண முன்னாள் ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறியின் கீழ் இருந்த விடயதானங்களில், வடமாகாண சபையின் கீழ் மாற்றம் செய்வதற்கு வடமாகாண உறுப்பினர்களின் சம்மதம் பெறப்பட்டுள்ளது. வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு, கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபையின் கட்டடத்தில் திங்கட்கிழமை (19) நடைபெற்றது. வடமாகாண ஆளுநருக்கு கடந்த 2014ஆம் ஆண்டு 89 ஆயிரத்து 169 மில்லியன் ரூபாய் ஆக இருந்த...

உள்ளுராட்சி மன்ற நியமனங்களில் இடம்பெறும் முறைகேடுகளை தடுத்து நிறுத்த வேண்டும் என வடமாகாண சபை ஆளுங்கட்சி உறுப்பினர் சந்திரலிங்கம் சுகிர்தன் வடமாகாண சபையில் தெரிவித்தார். வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபையில் திங்கட்கிழமை (19) நடைபெற்றபோதே, சுகிர்தன் இதனை தெரிவித்தார். அவர் தொடர்ந்து கூறுகையில், அண்மையில் வழங்கப்பட்ட பருத்தித்துறை பிரதேச சபையின்...

வடமாகாண சபை ஆளுங்கட்சி உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்தின் பிரேரணை பெப்ரவரி 10 ஆம் திகதி சபை அமர்வில் எடுத்துக்கொள்ளப்படும் என அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார். வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபையில் திங்கட்கிழமை (19) நடைபெற்றது. இதன்போது, 'வடக்கு கிழக்கு தமிழர் தாயகத்தில் நடைபெற்றதும், நடைபெற்றுக் கொண்டிருப்பதுமான இன அழிப்பலிருந்து தமிழ் மக்களை...

பிறப்பு அத்தாட்சிப்பத்திரம் இல்லாதவர்களும் விசேட அனுமதி மூலம் தேசிய அடையாள அட்டையை பெறுவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என உள்நாட்டு அலுவல்கள் அமைச்சை கோரும் பிரேரணை வடமாகாண சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபையில் திங்கட்கிழமை (19) இடம்பெற்றது. இதன்போது, ஆளுங்கட்சி உறுப்பினர் துரைராசா ரவிகரன் இந்தப் பிரேரணையை...

வலிகாமம் தென்மேற்கு பிரதேசத்தில் மேற்கொள்ளப்படும் வேலைத்திட்டங்களில் சில வேலைத்திட்டங்களுக்கான வரிப்பணத்தை 2015ஆம் ஆண்டிலிருந்து அதிகரிப்பதற்கு முடிவு செய்துள்ளதாக பிரதேச சபை பதில் தவிசாளர் எஸ்.மகேந்திரன் திங்கட்கிழமை (19) தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், பிரதேச சபையில் மேற்கொள்ளவேண்டிய அபிவிருத்திப் பணிகளுக்கு அதிகளவு நிதி தேவையென்பதால் இந்த அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. வருமானம் குறைந்த பிரதேச...

கிணற்றுக்குள் வீழ்ந்த பேரனை காப்பாற்றச் சென்ற மூதாட்டியொருவர் உயிரிழந்த சம்பவம் குடத்தனை கிழக்கு பகுதியில் திங்கட்கிழமை (19) மதியம் இடம்பெற்றுள்ளதாக பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்தனர். சிதம்பரநாதன் தங்கம்மா (வயது 65) என்ற மூதாட்டி உயிரிழந்ததுடன், கலைச்செல்வன் கலைமயூரன் (வயது 6) என்ற சிறுவன் ஆபத்தான நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கிணற்றடியில் நின்றிருந்த பேரன் கிணற்றுக்குள்...

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இம்முறை காலநிலையின் நிச்சயமற்ற தன்மை காரணமாக காலபோக நெற்செய்கை விளைச்சலில் பாதிப்பு ஏற்படும் என வடமாகாண பிரதி விவசாய பணிப்பாளர் கி.ஸ்ரீபாலசுந்தரம், திங்கட்கிழமை (19) தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், இம்முறை 11 ஆயிரத்து 800 ஹெக்டேயரில் நெல் பயிரிடுவதற்கு திட்டமிடப்பட்டு, 10 ஆயிரத்து 900 ஹெக்டேயர் நிலப்பரப்பில் நெல்...

யாழ்ப்பாணம் தாவடி பகுதியில் வாளுடன் நின்றிருந்த ஒருவரை ஞாயிற்றுக்கிழமை (18) இரவு கைது செய்ததாக கோப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஸ்ரீநிக சஞ்சீவ ஜெயக்கொடி, திங்கட்கிழமை (19) தெரிவித்தார். தாவடிப் பகுதியில் இரண்டு நபர்கள், வாள் மற்றும் முள்ளுக்கம்பி சுற்றிய கட்டையுடன் நிற்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், அங்கு சென்ற பொலிஸார் இருவரையும் கைது செய்ய...

மகேஸ்வரி நிதியத்தில் சேவையில் ஈடுபட்ட யாழ். மாவட்ட பாரவூர்தி சங்க அங்கத்தவர்களின் அங்கத்துவ பணம் மீளளிக்கப்படவில்லை என்பதால் மகேஸ்வரி நிதியத்துக்கு எதிராக முன்னெடுக்கப்படவிருந்த போராட்டம், பணம் மீளத்தரப்படும் என நிதியத்தினர் உறுதியளித்ததையடுத்து கைவிடப்பட்டுள்ளதாக பாரவூர்தி சங்கத்தின் தலைவர் செ.ஜெயக்குமார் தெரிவித்தார். அங்கத்துவ நிதியை மீள வழங்காத காரணத்தால் யாழ். மாவட்ட பாரவூர்தி சங்க அங்கத்தவர்கள், திங்கட்கிழமை...

நாட்டில் ஜனநாயகம் மலர ஆட்சிமாற்றம் கட்டாயமானது என்பதை தமிழ் மக்களும், சிங்கள மக்களுக்கும் விரும்பியமையால், நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெற்றிபெற்றதையடுத்து குடும்ப ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் மரியாபரணம் சுமந்திரன் தெரிவித்தார். ஜனவரி 08ஆம் திகதி நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலின் பின்னரான, தற்போதைய...

கிழக்கு மாகாண சபையின் ஆட்சிமாற்றம் சம்மந்தமாக புதிதாக தோன்றியிருக்கின்ற நெருக்கடியைக் கவனத்திற் கொண்டு, அக்கிழக்கு மாகாண சபையில் ஆட்சியமைப்பது சம்மந்தமாக பொதுஜன ஐக்கிய முன்னணிக்கும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கும் இடையில் ஏற்கெனவே செய்யப்பட்டிருக்கின்ற உடன்படிக்கையைத் தொடர்ந்தும் செயற்படுத்துவதற்கு ஏதுவான வகையில் தலையீட்டை மேற்கொள்ளுமாறு கிழக்கு மாகாண சபை முதலமைச்சர் எம்.நஜீப் அப்துல் மஜீத், ஜனாதிபதி...

வடக்கு மாகாணசபையில் முன்னாள் ஆளுனரான சந்திரசிறியிற்கு ஆதரவாக செயற்பட்டு முதலமைச்சருக்கு தலையிடியை கொடுத்து வந்த பிரதம செயலாளர் திருமதி ஆர் விஜயலட்சுமி மாற்றப்பட்டுள்ளார்.அவர் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இன்று வழங்கப்பட்ட அமைச்சர்களின் செயலாளர்களுக்கான நியமனத்தின் மூலம் இந்த மாற்றம் நடைபெற்றுள்ளது. புதிய வடக்குமாகாண அமைச்சின் செயலாளர் யார் நியமிக்கப்பட்டுள்ளார் என்பது அறியவரவில்லை. ஆளுனருக்கு...

வடமாகாணத்தைச் சேர்ந்த பட்டப்படிப்பினை முடித்த வேலையற்ற பட்டதாரிகள் நாளை மறுதினம் காலை 10 மணியளவில் யாழ்.மாவட்ட செயலகத்திற்கு அருகிலுள்ள பழைய பூங்கா முன்றலில் அமைதியான வழிமுறையில் ஒன்று கூடவுள்ளனர். குறித்த ஒன்றுகூடல் எந்தவொரு அரசியல் பின்னணிகளும் இன்றி வேலையற்ற பட்டதாரிகளின் கோரிக்கைகள் மட்டும் அடங்கிய மகஜர்களை வடமாகாண முதலமைச்சர்,வடமாகாண ஆளுநர் மற்றும் மாவட்ட அரசாங்க அதிபர்...

வட மாகாணத்தின் கலைஞர்களுக்கு ஓய்வூதியம் வழங்கும் நிகழ்வு இன்று வட மாகாண சபையின் பொங்கல் விழாவில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. வடக்கு மாகாண சபையின் 2015 ஆம் ஆண்டுக்கான முதலாவது அமர்வு ஆரம்பமாகி இடம்பெற்று வருகின்றது. அமர்வு ஆரம்பிக்கும் முன்னர் வட மாகாண சபையின் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதன்போது வட மாகாணக் கலைஞர்களுக்கான ஓய்வூதியக் கொடுப்பனவு...

சுன்னாகம் பகுதியிலுள்ள கிணறுகளில் ஏற்பட்ட கழிவு எண்ணெய் கசிவை ஆராயும் பொருட்டு 9 பேர் கொண்ட குழுவொன்று வடமாகாண சபையால் அமைக்கப்பட்டுள்ளதாக, வடமாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார். வடமாகாணசபையின் மாதாந்த அமர்வு கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபையில் இன்று திங்கட்கிழமை (19) நடைபெற்றபோதே, அவைத்தலைவர் இவ்வாறு குறிப்பிட்டார். முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் நெறிப்படுத்தலில் அமைக்கப்பட்டுள்ள இந்தக்குழு, எண்ணெய்...

வடமாகாண முன்னாள் ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி தனக்கு ஒதுக்கப்பட்ட நிதியை வைத்து அதிகளவான வட்டியைப் பெற்றதாக தனக்கு தகவல்கள் கிடைத்ததாக வடமாகாண எதிர்க்கட்சித் தலைவர் சின்னத்துரை தவராசா குற்றஞ்சாட்டினார். வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபையில் திங்கட்கிழமை (19) இடம்பெற்றது. வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறிக்கு தனிப்பட்ட ரீதியில் ஒதுக்கப்பட்ட 6 மில்லியன் ரூபாய்...

வடமாகாண புதிய ஆளுநராக தெரிவு செய்யப்பட்ட எச்.எம்.ஜி.எஸ்.பள்ளிகக்கார எமது பிரச்சினைகள் தொடர்பில் நன்கறிந்தவர் என வட மாகாண எதிர்க்கட்சித் தலைவர் சின்னத்துரை தவராசா தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், 'புதிய ஆளுநர் நியமனம் வரவேற்கத்தக்கது. முறைப்படி ஆளுநரை நீக்கவேண்டும் அவ்வாறு நீக்கினால் அதற்கு நாம் ஒத்துழைப்பு வழங்குவோம் என்று நான் பல தடவைகள்...

ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் மக்கள் சபை உறுப்பினர் சரவணபவானந்தன் சிவகுமார் என்பவரது மோட்டார் சைக்கிள் விசமிகளால் ஞாயிற்றுக்கிழமை (18) இரவு தீவைக்கப்பட்டதாக மருதங்கேணி உப-பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக பளைப் பொலிஸார் தெரிவித்தனர். வீட்டின் முன்பக்கத்தில் விடப்பட்டிருந்த 2 இலட்சம் ரூபாய் பெறுமதியான மோட்டார் சைக்கிளே இவ்வாறு எரிக்கப்பட்டது. இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகளை...

All posts loaded
No more posts