Ad Widget

சுகாதார அமைச்சராக திஸ்ஸ பதவியேற்றார்

ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க அண்மையில் அரசாங்கத்துடன் இணைந்துகொண்ட நிலையில், சுகாதார அமைச்சராக இன்று வியாழக்கிழமை பதவியேற்றுக்கொண்டார். கண்டியிலுள்ள ஜனாதிபதி இல்லத்தில் இந்த பதவியேற்பு நிகழ்வு இடம்பெற்றது.

மரணதண்டனை விதிக்கப்பட்ட எமது மீனவர்களுக்கும் பொதுமன்னிப்பு வழங்குங்கள் – வடக்கு அவையில் பிரேரணை

போதைப்பொருள் கடத்தலில் கைது செய்யப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட 8 பேரில் ஐவர் விடுதலை செய்யப்பட்டு அவர்களில் மூவர் தொடர்ந்தும் தண்டனை அனுபவித்து வருகின்றனர் எனவே பொதுமன்னிப்பில் விடுதலை செய்ய வேண்டும் என ஜனாதிபதியை இச்சபை கோருகின்றது என்ற பிரேரணை சபையில் எடுக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. வடக்கு மாகாண அவையின் 21 ஆவது அமர்வு இன்று நடைபெற்று...
Ad Widget

3/2 பெரும்பான்மையை இழந்தது மகிந்த அரசு

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசு நீண்ட காலமாக நாடாளுமன்றத்தில் தக்கவைத்துவந்த 3/2 எனும் பெரும்பான்மை பலத்தை தற்போது இழந்துள்ளது. நாடாளுமன்றத்தில் கடந்த மாதம் வரை 160 எனும் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி புரிந்த ஜனாதிபது மகிந்த ராஜபக்ச அரசு தற்போது எதிரணியில் இருந்து அரச பக்கம் சென்ற திஸ்ஸ அதநாயக்க மற்றும் ஜெயந்த கோட்டகொட...

மலையக மக்களின் நலன்களுக்காகவே கட்சித் தாவல் என்கிறார் ராதாகிருஷ்ணன்

மலையக மக்களின் நலன்கள், குறிப்பாக அவர்களின் வீடமைப்புத் திட்டத்துக்கு முன்னுரிமை, அங்குள்ள மக்களுக்கு கல்வி மற்றும் வேலையில் கூடுதல் வாய்ப்புக்கள் போன்றவற்றில் உரிய கவனம் செலுத்தப்படும் எனும் உறுதிமொழி வங்கப்பட்டதாலேயே எதிரணி பக்கம் தாங்கள் சென்றதாகக் கூறினார் மலையக மக்கள் முன்னணியைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன். முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆட்சிக் காலத்தில் தோட்டஉட்கட்டமைப்பு...

மஹிந்தவோ, மைத்திரியோ மக்களின் பிரச்சினைகளை முன்வைத்துப் போட்டியிடவில்லை!

"ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் பொது வேட்பாளரான மைத்திரபாலவோ அல்லது தற்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவோ யாராக இருந்தாலும் மக்களின் பிரச்சினைகளை முன்வைத்துப் போட்டியிடவில்லை. தங்களின் வசதிகளை முன்வைத்தே போட்டியிடுகின்றனர்." - இவ்வாறு கடுமையாக சாடினார் இடதுசாரிகள் கூட்டமைப்பின் பொது வேட்பாளரான துமிந்த நாகடுவ. நேற்றுப் புதன்கிழமை யாழ். ஊடக மையத்தில் ஊடகவியலாளர்களை அவர் சந்தித்த சமயமே...

அமைச்சர் ஹெகலியவுக்கு யாழ். நீதிமன்றம் மீண்டும் அழைப்பாணை!

அமைச்சர் ஹெகலிய, நாடாளுமன்ற உறுப்பினரான ஹெந்துன்நெத்தி ஆகியோருக்கு யாழ். நீதிவான் நீதிமன்றம் மீண்டும் அழைப்பாணை விடுத்தது. வெள்ளை வானில் கடத்தப்பட்டு காணாமல் போனவர்கள் எனக் கூறப்படும் முன்னிலை சோசலிசக் கட்சியின் லலித், குகன் ஆகியோரின் வழக்கிலேயே இவர்களுக்கு இரண்டாவது தடவையாகவும் அழைப்பாணை அனுப்பப்பட்டது. அத்துடன் வழக்கும் அடுத்த வருடம் மார்ச் 25 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது....

துரையப்பா மைதான புனரமைப்பு பணிகளை பார்வையிட்டார் மூர்த்தி

இந்திய அரசாங்கத்தின் 145 மில்லியன் ரூபாய் நிதியுதவியில் புனரமைப்பு செய்யப்படும் யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கின் புனர்நிர்மாணப் பணிகளை யாழ் - இந்திய துணைத்தூதரக தற்காலிக கொன்சலேட் ஜெனரல் எஸ்.டி.மூர்த்தி, புதன்கிழமை (10) நேரில் சென்று பார்வையிட்டார். மைதானத்துக்கான சுற்றுமதில் அமைத்தல், 400 மீற்றர் ஓட்டப்பாதை அமைத்தல், நுழைவாயில்கள் புனரமைப்பு, மலசலகூட கட்டிடத்தொகுதி அமைத்தல், குடிநீர் வசதிகள்...

யுத்தத்தை நிறுத்தாவிடின் தமிழ் இளைஞர், யுவதிகள் இல்லாமல் போயிருப்பர்

யுத்தத்தை அப்போது தான் நிறுத்தாமல்விட்டிருந்தால், இப்போதுள்ள தமிழ் இளைஞர், யுவதிகள் இல்லாமல் போயிருப்பார்கள் என்று மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார். 'திவிநெகும' திணைக்களத்தின் 'செழிப்பான இல்லம்' எனும் செயற்றிட்டத்தின் கீழ், போரதீவுப்பற்று பிரதேச செயலளர் பிரிவிலுள்ள பயனாளிகள் வீடுகளை திருத்துவதற்கான 2,500 ரூபாய் முதற்கட்ட கொடுப்பனவு வழங்கும் நிகழ்வு, திக்கோடை கணேச வித்தியாலயத்தில் புதன்கிழமை...

சீனி லொறியுடன் கடத்தப்பட்ட தமிழர் கொலை

கொழும்பில் இருந்து 300 சீனி மூடைகளுடன் யாழ்ப்பாணத்திற்கு வந்து கொண்டிருந்த லொறியை இடைநடுவே கடத்துவதற்காக சாரதியும்,நடத்துநரும்,சீனி மூடைகளுக்கு பாதுகாப்புக்காக வந்த தமிழ் இளைஞரைக் காட்டுப் பகுதியில் கொடூரமாக வெட்டிக் கொலை செய்து புதைத்துள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதன்பின்னர் லொறியில் கொண்டு வந்த பொருள்களை அரைவிலைக்கு விற்றுக்காசாக்கியுள்ளனர். 19வயதுடைய மல்லாவி,வவுனிக்குளத்தைச் சேர்ந்த தி.துசாந்தன் என்ற இளைஞனே...

வடக்கு முதலமைச்சரின் பொறுப்புக்கள் சில ஏனைய அமைச்சர்களுக்கு இரகசியமாக ஆளுநர் முன்னிலையில் பகிரப்பட்டன!

வடக்கு மாகாண முதலமைச்சரின் வசம் இருந்த சில அமைச்சின் கடமைகள், மேலதிக பொறுப்பக்கள் ஏனைய அமைச்சர்கள் மூவரிடம் மிக இரகசியமான முறையில் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன. நேற்று புதன்கிழமை வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் அமைச்சுக்களின் பொறுப்புக்களை குறித்த மூன்று அமைச்சர்களும் பொறுப்போற்றுக்கொண்டுள்ளனர். இந்த நிகழ்வுக்கு ஊடகவியலாளர்களும் அனுமதிக்கப்படவில்லை. முதலமைச்சரின் வசம் இருந்து, கூட்டுறவுதுறை, நீர் வழங்கல் -...

யாழ்ப்பாணத்தில் 5 உப ரயில் நிலையங்கள் இன்று முதல் இயக்கம்

தென்மராட்சிப் பிரதேசத்தில் உள்ள 5 ரயில் நிலையங்கள் இன்று புதன்கிழமை தொடக்கம் இயங்க ஆரம்பித்துள்ளன. இதன்படி உப ரயில் நிலைய அதிபர்களாக நியமனம் செய்யப்பட்ட 5 உப நிலைய அதிபர்களிடம் நேற்று பதில் ரயில் நிலைய அதிபர் (பயணப் பிரிவு) மொகமட் இஸ்மாயில் ஹாரூம் பொறுப்புக்களைக் கையளித்தார். கடந்த எட்டாம் திகதி தொடக்கம் அமுலுக்கு வரும்...

நச்சுநீர் தாக்கியதில் மீனவர்கள் பாதிப்பு

வடமராட்சி கிழக்கு, கற்கோவளம் கடற்பகுதியில் நச்சுநீர் (ஜெல்லி மீன் போன்ற நச்சு உயிரினம்) தாக்கியதில் மீனவர்கள் மூவர் பாதிக்கப்பட்ட நிலையில், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் செவ்வாய்க்கிழமை (10) அனுமதிக்கப்பட்டனர். கற்கோவளம் பகுதியைச் சேர்ந்த 3 மீனவர்களே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர். கடலில் மீன்பிடியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது, இந்த நச்சுநீர் தாக்கியதில் ஒவ்வாமை, சோர்வு மற்றும் சுவாச பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன....

மல்லாகத்தில் 15 கிணறுகளில் எண்ணெய் கசிவு

யாழ். மல்லாகம் காட்டுத்தரை (ஜே - 213) கிராமத்திலுள்ள 15 கிணறுகளில் எண்ணெய் கசிவு ஏற்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெல்லிப்பளை சுகாதார வைத்தியதிகாரி எஸ்.நந்தகுமார் இன்று புதன்கிழமை (10) தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பில் எஸ்.நந்தகுமார் மேலும் தெரிவிக்கையில், இதுபற்றி பாதிக்கப்பட்ட மக்கள் செய்த முறைப்பாட்டின் பிரகாரம், அப்பகுதி பொது சுகாதார பரிசோதகருடன் சென்று கிணறுகளை பார்வையிட்டு நீர்...

கடும் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் இளைஞர் மாநாடு

அன்புக்கும் நட்புக்குமான வலையமைப்பின் ஏற்பாட்டில் வடக்கு மாகாண இளைஞர் மாநாடு இன்று புதன்கிழமை யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்றது. வடபகுதி இளைஞர், யுவதிகளது பிரச்சினைகளை வெளி உலகுக்கு தெரியப்படுத்தும் நோக்காக் கொண்ட இந்த மாநாட்டிற்கு வடக்கு மாகாணத்தின் 5 மாவட்டங்களிலும் இருந்து 15௦௦க்கு மேற்பட்ட இளைஞர், யுவதிகள் கலந்துகொண்டனர். இந்த நிகழ்வில் சுதந்திர பயணம் -2014...

யாழில் 450,132 பேர் வாக்களிக்கத் தகுதி – அரச அதிபர்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் யாழ்.மாவட்டத்தில் 450,132 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளதாக அரசஅதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்தார். நாடுபூராகவும் தேர்தல் பரப்புரை சூடுபிடித்துள்ள நிலையில் அரச அதிபர் வழங்கிய நேர்காணலின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில், யாழ்.மாவட்டத்தை பொறுத்த வரையில் 450,132 வாக்காளர்கள் தேர்தலிலே வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளதோடு இதற்காக...

வட பகுதி ரயில் சேவை ஸ்தம்பிதம்: இரண்டு யானைகள் மோதி பலி

ரயில் தண்டம்புரண்டதன் காரணமாக வட பகுதிக்கான ரயில் சேவை ஸ்தம்பிதம் அடைந்துள்ளதாக மத்திய ரயில் கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது. கொழும்பு கோட்டையில் இருந்து நேற்று (09) இரவு 11.20 மணியளவில் யாழ், நோக்கிச் சென்ற ரயிலில் அம்பன்பொல மற்றும் கல்கமுவ இடையே யானைகள் இரண்டு மோதியதில் ரயில் தடம்புரண்டுள்ளது. இதன்போது இரண்டு யானைகளும் உயிரிழந்துள்ள நிலையில்...

எமது மக்களின் அழிவுகளுக்கும் அவலங்களுக்கும் த.தே.கூட்டமைப்பே காரணம் – டக்ளஸ்

எமது மக்கள் எதிர்கொண்ட அவலங்களுக்கும் அழிவுகளுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் காரணமென அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளார். கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இணைத்தலைவர்களான அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் தலைமையில் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நேற்றய தினம் (09) நடைபெற்ற போதே அவர் இவ்வாறு...

நகைகளைப் பெற்ற வடக்கு மக்களால் தமக்கு 10 கோடி ரூபா நட்டமாம்! – ரயில்வே ஊழியர் சங்கம்!!

யுத்த காலத்தில் வடபகுதி மக்களால் விடுதலைப்புலிகளின் தமிழீழ வைப்பகத்தில் அடகு வைக்கப்பட்ட தங்க ஆபரணங்களை அவற்றின் உரிமையாளர்களுக்கு மீள ஒப்படைப்பதற்காக வட பகுதியிலிருந்து கொழும்புக்கு அழைத்து வரப்பட்ட மக்களுக்கு இலவச ரயில் சேவையை வழங்கியதன் மூலம் இலங்கை ரயில்வே திணைக்களத் துக்கு சுமார் பத்து கோடி ரூபா வரை நட்டம் ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய இலங்கை ரயில்வே...

முற்போக்கு தமிழ் தேசிய கட்சி ஜனாதிபதிக்கு ஆதரவு

எதிர்வரும், ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு முற்போக்கு தமிழ் தேசிய கட்சி ஆதரவு வழங்குவதாக முற்போக்கு தமிழ் தேசிய கட்சியின் செயலாளர் நாயகம் சுதர்சிங் விஐயகாந் செவ்வாய்க்கிழமை (09) தெரிவித்தார். ஜனாதிபதி தேர்தலில் முற்போக்கு தமிழ் தேசிய கட்சி யாருக்கு ஆதரவு வழங்குவது தொடர்பில் கட்சியின் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை (09) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்...

மன்னாரில் பறவைகள் சரணாலயம் என்ற பெயரில் 5,000 ஹெக்டேயர் அபகரிப்பு

பறவைகள் சரணாலயம் என்ற போர்வையில் மன்னாரில் 5 ஆயிரம் ஹெக்டேயர் காணி அபகரிக்கப்பட்டுள்ளதாக செய்யப்படுவதாகவும் அந்நடவடிக்கை உடனடியாக தடுத்து நிறுத்தப்பட வேண்டும் எனவும்; யாழ் பல்கலைக்கழக புவியியல்துறை பேராசிரியர் ஏ.சூசையானந்தன், திங்கட்கிழமை (08) தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்ததாவது, யுத்த காலங்களிலும் அதற்கு பிற்பட்ட காலப் பகுதிகளிலும் மன்னார் மாவட்டத்தில் இலங்கை அரசினால்...
Loading posts...

All posts loaded

No more posts