- Friday
- December 26th, 2025
எம்மிடமிருந்து பறித்தவற்றையும், எமக்குச் சட்டப்படி வழங்க வேண்டியவற்றையுமே புதிய அரசு தருகின்றது. புதிதாக எதையும் தரவில்லை. இவ்வாறு கொழும்பு அரசின் அமைச்சர்கள் முன்பாக, கருத்துத் தெரிவிக்கையில் வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி. விக்னேஸ்வரன் தெரிவித்தார். யாழ்.பொது நூலகத்தில் நேற்றுக் காலை இடம்பெற்ற கலந்துரையாடலில் உரை யாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், கொழும்பு...
பேராசிரியர் சு.வித்தியானந்தனின் நினைவாக யாழ். போதனா வைத்தியசாலைக்கு சுமார் 8 மில்லியன் ரூபாய் பெறுமதியான என்புமுறிவு உபகரணங்கள் இன்று வழங்கப்பட்டுள்ளது. பேராசிரியர் சு.வித்தியானந்தனின் குடும்பத்தினரால் (அமெரிக்கா) இந்த உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது. இதன்போது, என்புமுறிவு சத்திரசிகிச்சை உபகரணம், வீடியோ மூலம் சிகிச்சை அளிக்கும் உபகரணம், மார்பு சிகிச்சை உபகரணம் போன்ற வகையிலான உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது. உபகரணங்கள் அனைத்துலக...
கடந்த ஆண்டு இடம்பெற்ற மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டங்களில் அசம்பாவிதங்கள் இடம்பெற்றதைக் கண்டித்தும் இவ்வாண்டு நடைபெறவுள்ள மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டங்களில் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுங்கு முறைகளை குறிப்பிட்டும் யாழ்.மாவட்ட செயலாளர் சுந்தரம் அருமைநாயகத்துக்கு வடமாகாண சபை அவைத்தலைவர் சி.வி.கே சிவஞானம் வெள்ளிக்கிழமை (27) கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, 'கடந்த ஆண்டு இடம்பெற்ற...
கச்சதீவு செல்வதற்கான பதிவு செய்யப்பட்ட படகுகள் குறைவாக இருப்பதால் 200க்கு மேற்பட்ட மக்கள் குறிகட்டுவானில் படகுகளுக்காக காத்திருக்கின்றனர். இதுவரையில் 700க்கு அதிகமான மக்கள் பதிவு செய்யப்பட்ட 5 படகுகள் மூலம் சென்று விட்டனர் எனினும் மீதமுள்ள 200க்கு அதிகமான மக்கள் குறிகட்டுவானிலேயே காத்திருக்கின்றனர். இதேவேளை படகு மூலம் கச்சதீவு செல்வதற்கு மாத்திரம் 5 மணித்தியாலங்கள் தேவை...
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, ஐக்கிய தேசியக் கட்சி ஒன்றிணைந்த தேசிய அரசாங்கம் உருவாக்கப்படுமாயின் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியாக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு உருவெடுக்கும். அமர்தலிங்கத்தினால் ஏற்பட்ட அச்சுறுத்தல் இனி ஒரு போதும் இடம்பெற அனுமதிக்கக்கூடாது என தெரிவிக்கும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பங்காளிக்கட்சியான தூய்மையான ஹெல உறுமய யாருக்கும் திறக்காத சர்வதேச கதவுகள் எதிர்க்கட்சிக்காக திறக்கும்...
இராஜாங்க கல்வி அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன், வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், வட மாகாண கல்வி அமைச்சர் குருகுலராஜா, மகளிர் விவகார அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் ஆகியோர் வெள்ளிக்கிழமை (27) இளவாலை ஹென்ரியரசர் கல்லூரியிலும் வேம்படி மகளிர் பெண்கள் உயர்தர பாடசாலையிலும் அமைக்கப்பட்டுள்ள தொழில்நுட்பக் கூடத்தை திறந்து வைத்ததோடு, யாழ். மத்திய கல்லூரிக்கு கணணிகளையும் வழங்கி...
128 அபிவிருத்தி திட்டங்களை நிறைவேற்றுவதற்கு வடமாகாண சபை தவறியுள்ளதென தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கென 690 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டிருந்தது. ஆயினும், வடமாகாண சபையினால் 16 மில்லியன் ரூபாய் மட்டுமே பயன்படுத்தப்படவில்லை என்று வடமாகாண சபைக்குரிய இணையத்தில் வெளியிட்ட கணக்கறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. வடமாகாண சபை எதிர்க்கட்சி தலைவர் எஸ்.தவராசா இந்த பிரச்சினையை இம்மாதம் 24ஆம் திகதி அவையில் பிரஸ்தாபித்தார்....
யாழ்ப்பாணம் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் விமலசேன கொலை குற்றச்சாட்டு ஒன்றில் கைது செய்யப்பட்டுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தொம்பே பகுதியில் உள்ள விடுதி ஒன்றின் உரிமையாளரைக் கொலை செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டே விமலசேன கைது செய்யப்பட்டுள்ளார். எஸ்.எஸ்.பியுடன் தொம்பே பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியும் கைது செய்யப்பட்டுள்ளார் எனவும் பொலிஸ் திணைக்கள வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. யாழ்ப்பாணத்திற்கு பதவியேற்று வருவதற்கு...
யாழ்.போதனா வைத்தியசாலையில் 14 நாள்களாகக் கழிவகற்றப் படாததால் அங்கு குப்பைகள் நிரம்பி வழிகின்றன. அது தொடர்பில் வடமாகாண முதலமைச்சரின் செயலாளருடனான சந்திப்பை அடுத்து 2 நாள்களில் அவற்றை அகற்றுமாறு முதலமைச்சர் யாழ்.மாநகர சபைக்குப் பணித்துள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலைப் பதில் பணிப்பாளர் மருத்துவர் எஸ்.ஸ்ரீப வானந்தராஜா தெரிவித்தார். யாழ்.மாநகர எல்லையில் குப்பை அகற்றுவது தொடர்பான சிக்கல்...
சிந்தனைக்கூடம் யாழ்ப்பாணம் எனும் ஆய்வு, அபிவிருத்தி நிறுவனத்தின் குழுநிலை ஆய்வுக் கலந்தரையாடல் ஒன்று 2015-22-02 ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணம் இரண்டாம் குறுக்குத் தெருவில் அமைந்துள்ள சிந்தனைக் கூடத்தின் கேட்போர் கூடத்தில் மாலை 4மணிக்கு, “வடக்கின் இன்றைய நிலை” எனும் தலைப்பில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது தலைமையுரையாற்றிய சிந்தனைக் கூடத்தின் பணிப்பாளர் பேராசிரியர் இரா.சிவச்சந்திரன் பின்வரும் கருத்துகளை முன்வைத்தார்....
இந்திய வீட்டுத்திட்டத்தில் தாம் தொடர்ந்து புறக்கணிக்கப்படுகின்றனர் என்று தெரிவித்து யாழ். மாவட்ட முஸ்லிம் மக்கள் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இன்று மதியம் 1.30 மணிக்கு தொழுகை முடிந்ததும் ஐந்து சந்திப் பகுதியில் கூடிய மக்கள் வீதியை மறித்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்திய வீட்டுத்திட்டம் வழங்குவதில் தாம் தொடர்ந்து புறக்கணிக்கப்படுகின்றனர் என்றும், எனவே அரச அதிகாரிகள் உடனடியாக...
மகேஸ்வரி நிதியம் தமது தொழிலை அழித்துவிட்டது என்று கூறி யாழ்.மாவட்ட பாரவூர்தி உரிமையாளர் கூட்டுறவுச் சங்க உறுப்பினர்கள் இன்று வெள்ளிக்கிழமை முற்பகல் மகேஸ்வரி நிதிய அலுவலகத்தின் முன் போராட்டம் நடத்தினர். ஏழைகளின் வயிற்றில் அடிக்காதே!, எங்கள் வைப்புப் பணத்தை வட்டியுடன் திருப்பித் தா!, சேமிப்பு பணத்தை எமது சங்கத்திடம் மீள ஒப்படை! போன்ற கோரிக்கைகள் முன்வைத்தே...
வலி.வடக்குப் பகுதியில் படையினர் வசமுள்ள காணிகளில் ஆயிரம் ஏக்கரை நிலச்சொந்தக்காரர்களிடமே கையளிக்க 3 கிழமைகளில் நடவடிக்கை எடுக்கப்படும். இதனை ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க விசேட குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு தெரிவித்தார் மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன். வலி.வடக்குப் பகுதியில் படையினர் வசமுள்ள காணிகளை விடுவிப்பது குறித்த முக்கிய கலந்துரையாடல் இன்று ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது. இந்தக்...
வடமாகாண சபையில் கடந்த 10ஆம் திகதி நிறைவேற்றப்பட்ட இனப்படுகொலை தொடர்பான தீர்மானத்தின் பிரதிகள், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர், பொதுச் செயலாளர் ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக வடமாகாண அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது, 'தமிழ் மக்களின் உண்மையான அழிவுகளையும் இழப்புக்களையும் விளங்கிக்கொண்டு நீதியான நியாயமான முறையில் செயற்பட...
பொதுமக்களின் காணிகள் விடுவிக்கப்பட வேண்டும் என்பது 20 வருடங்களுக்கு மேலாக இருக்கின்ற பிரச்சினையாகும். இதனை குறுகிய நாட்களுக்குள் தீர்க்க முடியாது. எனது கடமையை நான் உணர்ந்து செல்லும் இடங்களிலுள்ள பிரச்சினைகளை படிப்படியாக தீர்ப்பேன் என மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத விவகார அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்தார். மீள்குடியேற்ற அமைச்சர் முல்லைத்தீவின் ஒட்டுசுட்டான் மற்றும் புதுக்குடியிருப்புப் ஆகிய பகுதிகளுக்கு...
யாழ்ப்பாணம், மாலுசந்தி பகுதியை சேர்ந்த ஸ்ரீரங்கநாதன் மயூரன் (வயது 21) என்ற இளைஞனை கடந்த 25ஆம் திகதி முதல் காணவில்லையென அவரது தாயாரால் நெல்லியடி பொலிஸில் முறைப்பாடொன்று செய்யப்பட்டுள்ளது. 25ஆம் திகதி காலை வீட்டுக்கு வந்திருந்த இரண்டு இளைஞர்கள் குளிர்பான நிலையமொன்றின் வேலைக்காக தனது மகனை அழைத்துச் சென்றதாகவும் அப்போது சென்றவர், இதுவரையில் வீடு திரும்பவில்லையெனவும்...
நாளை சனிக்கிழமை நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள புதுக்குடியிருப்பு மற்றும் கரைத்துறைப்பற்று ஆகிய இரண்டு பிரதேச சபைகளுக்குமான தேர்தலுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தினால் இன்று வெள்ளிக்கிழமை இடைக்காலை தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச கடல் எல்லையை மீறி இலங்கை கடற்பரப்புக்குள் சட்டவிரோதமான முறையில் மீன்பிடித்த இந்திய மீனவர்கள் 86 பேரை கைது செய்துள்ளதாக இலங்கை கடற்படையினர் அறிவித்துள்ளனர். இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்களை பருத்தித்துறை கடற்பரப்பில் வைத்து வியாழக்கிழமை (26) மாலை கைது செய்ததாக யாழ். கடற்றொழில் நீரியல்வளத்துறைத் திணைக்கள உதவிப் பணிப்பாளர்...
கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையில் கணித பாடத்தில் தேர்ச்சி பெறாத மாணவர்களும் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்ற முடியும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்படி உயர்தரத்திற்கு விண்ணப்பிக்க கணித பாடத்தில் சித்திபெற்றிருக்க வேண்டியது அவசியமில்லை என அந்த அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. எதுஎவ்வாறு இருப்பினும் சில தொழில்கள், பாடநெறிகள் போன்றவற்றிற்கு கணித பாடத்தில் தேர்ச்சி பெற்றிருக்க...
"இலங்கையின் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு கிடைக்கவேண்டும் என்பதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுதியாகவுள்ளது. உண்மைகள் கண்டறியப்படுவதன் ஊடாகவே இந்தத் தீர்வை எட்ட முடியும் என்பதே எமது நிலைப்பாடாகும். எனவே, தற்போதுள்ள அரசு உண்மையைக் கண்டறிந்து, சர்வதேசத்துடன் ஒத்துழைத்துச் செயற்பட்டு நிரந்தர அரசியல் தீர்வை மக்களுக்குப் பெற்றுக் கொடுக்க வேண்டும்." - இவ்வாறு தென்னாபிரிக்க வெளிவிவகார பிரதி...
Loading posts...
All posts loaded
No more posts
