- Thursday
- July 3rd, 2025

புதிய அரசாங்கத்தின் நூறு நாள் வேலைத்திட்டத்தில் தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகள் உள்ளடக்கப்பட வேண்டும் என பருத்தித்துறை பிரதேச சபை எதிர்க்கட்சித் தலைவரும் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் வடமராட்சி இணைப்பாளருமான ஐயாத்துரை ஸ்ரீரங்கேஸ்வரன் தெரிவித்தார். வடமராட்சி கிழக்கு, செம்பியன்பற்று அரசினர் தமிழ் கலவன் பாடசாலையின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் விளையாட்டு போட்டி, பாடசாலை அதிபர் க.கண்ணன்...

மகா சிவராத்திரி தினத்தை வர்த்தக விடுமுறை தினமாகவும் பிரகடனப்படுத்துமாறு கோரிக்கை முன்வைத்து மீள்குடியேற்ற மற்றும் இந்து விவகார அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் ஊடாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அகில இலங்கை இந்துமா மன்றம் கோரிக்கை கடிதம் புதன்கிழமை (11) அனுப்பி வைத்துள்ளது அந்த கடிதத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, சிவராத்திரியானது இந்துக்களின் மிகமுக்கிய மத தினமாக உள்ளது. இலங்கையிலுள்ள...

2015 ஆம் ஆண்டு இடைக்கால வரவு செலவு திட்டத்தில் குறிப்பிடப்பட்டதைப் போன்று பெப்ரவரி மாதம் முதல் அரச ஊழியர்களின் மாதாந்த கொடுப்பனவுகளில் அதிகரிப்பு இடம்பெற உள்ளதாக உள்நாட்டு அலுவல்கள், மாகாண சபை, உள்ளுராட்சி நிர்வாகம் மற்றும் ஜனாநாயக நிர்வாகம் தொடர்பான அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்படுகிறது. இதன்படி அரச சேவையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு இதுவரை வழங்கப்பட்டு...

புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வாழ்ந்து வரும் எமது மக்களுக்கு இரட்டைக் குடியுரிமை அவசியம் வழங்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் நாம் தொடர்ந்து இருந்து வருகின்றோம். கடந்த அரசிடமும் இதனை நாம் வலியுறுத்தி அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. தற்போது இந்த அரசு இரட்டைக் குடியுரிமை வழங்குவது தொடர்பான நடைமுறைகளை இலகுபடுத்த நடவடிக்கை எடுத்திருப்பது வரவேற்கத்தக்கது. எனினும், மேலும் இலகுபடுத்த...

யாழ். கைதடி - கோப்பாய் பாலத்தில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளார். நேற்று இரவு இடம்பெற்ற இவ் விபத்தில் கோப்பாய் ஆசிரிய கலாசாலை உடற்கல்வித்துறை ஆசிரிய பயிலுநரான கிளிநொச்சியை சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான கிருஷ்ணன் றீகன் என்பவரே உயிரிழந்துள்ளமை தெரியவந்துள்ளது. படுகாயமடைந்தவர் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்....

யாழ். மாநகரசபை வட, கிழக்கு மாகாண தொழிலாளர் சங்கத்தின் 40 ஆவது வருடாந்த பொதுக்கூட்டமும் புதிய நிர்வாகசபை தெரிவும் நாவலர் கலாசார மண்டபத்தில், புதன்கிழமை (11) நடைபெற்ற போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், மாநகரசபை நீதியாக செயற்பட வேண்டும் என்று பல தடவைகள் குரல் கொடுத்து பல அச்சுறுத்தல்களை எதிர்நோக்கினோம்....

யாழ்ப்பாணத்தில் இருந்து தினமும் காலை 8.00 மணிக்கு துணுக்காய் வரை செல்லும் அரச மற்றும் தனியார் பேருந்துகளில் போட்டித்தன்மையால் பயணிகள், அரச உத்தியோகத்தர்கள் தினமும் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. முல்லைத்தீவு மாந்தை கிழக்கு மற்றும் துணுக்காய் ஆகிய பகுதிகளில் வெளி மாவட்டங்களில் இருந்து அதாவது யாழ்ப்பாணம் கிளிநொச்சி, ஆகிய பகுதிகளில் இருந்து செல்லும் அரச மற்றும் அரச...

பெரும்போகத்தில் செய்கை பண்ணப்பட்ட நெல்லை கொள்வனவு செய்பவர்கள் விலை, நிறை என்பனவற்றில் மாறுபாடுகள் செய்வதால் விவசாயிகள் பெரும் நட்டத்தை எதிர்நோக்கி வருவதாகவும், இந்தப் பிரச்சினைக்கு உடன் நடவடிக்கை எடுக்குமாறு முல்லைத்தீவு மாவட்ட விவசாயிகள் வடமாகாண விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசனிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். ஒரு மூடை நெல்லின் நிறை 69 கிலோகிராம் ஆகும். ஆனால் உடன்...

யாழ்.எழுவைதீவு கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவரின் படகை மோதி, அந்த மீனவர் உயிரிழக்க காரணமாகவிருந்தார்கள் என்ற சந்தேகத்தில் 8 கடற்படையினரை புதன்கிழமை (11) கைது செய்துள்ளதாக ஊர்காவற்றுறை பொலிஸ் நிலைய தலைமைப் பொலிஸ் பொறுப்பதிகாரி கியூ.ஆர்.பெரேரா தெரிவித்தார். கடந்த டிசெம்பர் மாதம் 18ஆம் திகதி இரவு, எழுவைதீவு கடற்பரப்பில் மீன்பிடித்துக்கொண்டிருந்த மீனவர் ஒருவரின் படகு மீது,...

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது புதல்வரும் கடற்படையில் லெப்டினன் பதவிநிலை வகிப்பவருமான யோஷித ராஜபக்ஷ, டுபாய்க்கு பயணமாகியுள்ளார். கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் சாதாரண பயணிகள் பயன்படுத்தும் வழியூடாக செவ்வாயக்கிழமை (10) இரவு எமிரேட்ஸ் விமான சேவைக்கு சொந்தமான ரி.கே 653 என்ற விமானத்திலேயே அவர் டுபாய் பயணமாகியதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில்...

2015 ஆம் ஆண்டு வரவு-செலவுத்திட்ட முன்மொழிவுகளின் அடிப்படையில் ஓய்வூதியர்களுக்கான கொடுப்பனவு ஏப்ரல் மாதம் முதல் அதிகரிக்கப்படும் என்று அரச நிர்வாக, மாகாண சபைகள், உள்ளுராட்சி அமைச்சு அறிவித்துள்ளது. இதுதொடர்பில் அனுப்பி வைத்துள்ள சுற்றறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ஓய்வூதியர்களுக்கு தற்போது வழங்கப்படுகின்ற 2,500 ரூபா மாதாந்த இடைக்கால கொடுப்பனவுக்கு மேலதிகமாக 2015ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திலிருந்து அமுல்படுத்தும்...

இலங்கையின் வடக்கே யாழ் தீவகப்பகுதியாகிய சுருவில் மண்டைதீவு போன்ற மிள்குடியேற்றப் பகுதிகளில் பல கிணறுகள் மூடிக்கிடப்பது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது என உள்ளூர் மக்கள் தம்மிடம் தெரிவித்ததாக மகளிர் விவகாரத் துணை அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்தார். அந்தக் கிணறுகளில் அப்பிரதேசங்களில் இருந்து காணாமல் போனதாகக் கூறப்படுபவர்கள் கொலை செய்து புதைக்கப்பட்டிருக்கலாம் எனும் ஐயப்பாடுகள் உள்ளன என்று...

கிளிநொச்சி, கண்டாவளை பிரதேச செயலாளர் ரி.முகுந்தனை மாற்றும்படி நாதன்திட்டம் மற்றும் புன்னைநீராவி மக்கள் கிளிநொச்சி மாவட்டச் செயலாளர் திருமதி ரூபவதி கேதீஸ்வரனிடம் புதன்கிழமை (11) கோரிக்கை முன்வைத்தனர். தங்களுக்கான காணி உறுதிப்பத்திரங்கள் மற்றும் வீட்டுத்திட்டங்களை வழங்குமாறு இன்று நடத்திய ஆர்ப்பாட்டத்தின் முடிவிலே பொதுமக்கள் இந்தக்கோரிக்கையை முன்வைத்தனர். எல்லா விதத்திலும் தங்களை அவர் புறக்கணிப்பதாகவும், அரசியல்வாதிகளுக்கு பின்னால்...

சாவகச்சேரி சந்தையில் வாழைக்குலை வியாபாரம் செய்யும் வியாபாரியொருவர், புதன்கிழமை (11) சாவகச்சேரி பொலிஸ் நிலையத்துக்கு முன்பாக திடீரென விழுந்து மரணமாகினார். கைதடி மத்தி குமரன் நகரைச் சேர்ந்த சி.சின்னத்தம்பி (வயது 57) என்பவரே இவ்வாறு மரணமடைந்தார். வீட்டிலிருந்து வாழைக்குலைகளை மோட்டார் சைக்கிளில் கட்டிக்கொண்டு சந்தைக்குச் சென்ற இவர், சாவகச்சேரி பொலிஸ் நிலையத்துக்கு முன்பாக கீழே வீழ்ந்து...

லஞ்ச ஊழல்கள் ஒழிப்பு ஆணைக்குழவின் பணிப்பாளராக டில்ருக்ஷி டயஸ் விக்கிரமசிங்க நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கான நியமனக் கடிதத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஜனாதிபதி செயலகத்தில் வைத்து இன்று புதன்கிழமை காலை வழங்கினார்.

மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாக ஹேமா குமுதினி விக்கிரமசிங்க இன்று புதன்கிழமை காலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் ரணில் விக்கிரமசிங்க, நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ ஜனாதிபதி செயலாளர் பி.பீ.அபயக்கோன் ஆகியோர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

வலி. வடக்கு, தெல்லிப்பழை பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள கருகம்பனை பிரதேச மக்களின் நன்மை கருதி வட மாகாண சுகாதார அமைச்சினால் ஆயுள் வேத வைத்தியசாலை இன்று புதன்கிழமை பகல் திறந்துவைக்கப்பட்டுள்ளது. இந்தப் பகுதி பொது அமைப்புக்கள் மற்றும் சனசமூக நிலையங்கள் விடுத்த கோரிக்கையின் அடிப்படையில் தனியார் கட்டடத்தில் ஆரம்பிக்கப்பட்ட இந்த ஆயுள் வேத வைத்தியசாலையை...

5 திருமணங்கள் செய்து ஆறாவதாக 20 வயதுடைய பெண்ணொருவரை புதன்கிழமை (11) வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தில் திருமணம் செய்ய முயன்ற 56 வயதுடைய சுவிஸ் நாட்டு பிரஜை ஒருவரை செவ்வாய்க்கிழமை (10) மாலை கைது செய்துள்ளதாக நெல்லியடி பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பாக பொலிஸார் மேலும் கூறியதாவது, '56 வயதுடைய நபர் ஒருவர் 20 வயதுடைய...

யாழ்ப்பாணத்தின் மூன்று பொலிஸ் நிலையங்களைச் சேர்ந்த 80 பொலிஸார் தென் பகுதிகளிலுள்ள பொலிஸ் நிலையங்களுக்கு இடமாற்றம் பெற்றுள்ளனர். பொலிஸ் திணைக்களத்தால் மேற்கொள்ளப்படும் இடமாற்றத்தின் அடிப்படையில் செவ்வாய்க்கிழமை (10) அமுலுக்கு வரும் வகையில் இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தை சேர்ந்த 34பேரும், நெல்லியடி பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த 27பேரும், வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த...

70 ஆண்டுகளுக்கு மேலாக காணப்படுகின்ற இலங்கை இனப்பிரச்சனைக்கு, சர்வதேச மத்தியஸ்தத்துடன் ஒரு தீர்வு காணப்பட்டு தமிழர்கள் வடக்கு - கிழக்கில் நிம்மதியாக வாழ்கின்ற நிலை உருவாகுவதற்கு பிரித்தானிய உள்ளிட்ட நாடுகள் முன்வரவேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்தார். இலங்கைக்கான பிரித்தானிய பிரதி உயர்ஸ்தானிகர் லாரா டேவிஸ் மற்றும் சிறிதரன்...

All posts loaded
No more posts