மீசாலையில் தீ விபத்து! மின்சாரம், தொலைபேசி இணைப்புகள் துண்டிப்பு!!

மீசாலை சந்தியில் உள்ள வர்த்தக நிலையம் திடீரென தீப்பற்றி எரிந்நதால் கடையிலிருந்த அனைத்துப் பொருட்களும் எரிந்து நாசமாகின. இந்தச் சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை ஒரு மணியளவில் இடம்பெற்றது. வர்த்தக நிலையம் தீப்பற்றி எரிந்ததில் அங்கிருந்த சுமார் 7 இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் எரிந்து நாசமாகின. அத்துடன் வர்த்தக நிலையத்தின் மேலாகச் சென்ற மின்...

காணாமற்போனவர் திருட்டுக் குற்றச்சாட்டில் கைது

கடந்த 25ஆம் திகதி முதல் காணாமற்போனதாக முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்த யாழ்.மாலுசந்தி பகுதியை சேர்ந்த ஸ்ரீரங்கநாதன் மயூரன் (வயது 21) என்ற இளைஞனை திருட்டுக் குற்றச்சாட்டில் கைது செய்துள்ளதாக கொடிகாமம் பொலிஸார் தெரிவித்தனர். இந்த இளைஞனைக் காணவில்லையென அவரது தாயார் கடந்த 26ஆம் திகதி நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்திருந்தார். குளிர்பான நிலையமொன்றுக்கு...
Ad Widget

இணைந்து ஆட்சி அமைக்க வருமாறு த.தே.கூட்டமைப்புக்கு அழைப்பு

கிழக்கு மாகாணசபையில் இணைந்து ஆட்சி அமைப்பதற்கு முன்வருமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிலுள்ள 10 உறுப்பினர்கள் இணைந்து அழைப்பு விடுத்துள்ளனர். கிழக்கு மாகாணசபையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆட்சி அமைப்புக்கு ஆதரவு வழங்கிய ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் இருந்த 10 உறுப்பினர்களே இந்த அழைப்பை விடுத்துள்ளனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்...

மீனவர்கள் மீதான தாக்குதலைக் கண்டிக்கின்றது புதிய ஜனநாயக மார்ச்சிச லெனினிசக் கட்சி

இலங்கைக் கடற்பரப்பினுள் அத்துமீறிப் புகுந்த இந்திய மீனவர்கள், இலங்கைத் தமிழ் மீனவர்களை ஆயுதங்களால் தாக்கிப் படுகாயப்படுத்தியிருக்கிறார்கள். இதனைக் கண்டித்து புதிய ஜனநாயக மார்ச்சிச லெனினிசக் கட்சி (NDMLP) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை: நேற்று முன்தினம் (27-02-2015) வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்டு வந்த நூற்றுக் கணக்கான இழுவைப் படகுகளில் இந்திய மீனவர்கள் அத்துமீறிப்...

மின்சாரம் தாக்கியதில் ஒருவர் உயிரிழப்பு

பாரம் தூக்கி மூலம் சீமெந்துத் தூணை தூக்கி நட முயன்ற வேளையில் மின்சாரம் தாக்கியதில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் தெல்லிப்பழை, கொல்லங்கலட்டிப் பகுதியில் நேற்று திங்கட்கிழமை இரவு 7 மணியளவில் இடம்பெற்றது. மூன்று பிள்ளைகளின் தந்தையான சங்கானை, சிலம்பு புளியடியைச் சேர்ந்த தங்கமுத்து சோதிநாதன்(வயது-34) என்பவரே உயிரிழந்தார். கொல்லங்கலட்டிப் பகுதியில் வீதிக்கு...

இன்று யாழ்ப்பாணம் வரும் ஜனாதிபதி மூன்று மணி நேரமே தங்கியிருப்பார்!

வடக்கு மாகாண அபிவிருத்திக் குழுக் கூட்டத்திற்காக இன்று செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணத்துக்கு வருகிறார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன. காலை 9.30 மணிக்கு வரும் அவர் மூன்று மணி நேரமே இங்கு நடக்கு நிகழ்வுகளில் பங்கேற்பார் எனத் தெரிவிக்கப்படுகின்றது. ஜனாதிபதியாக முதன்முறையாக யாழ்ப்பாணம் வரும் மைத்திரிபால சிறிசேன, நல்லூர் ஆலயத்துக்கு சென்று வழிபாடுகளில் ஈடுபடுவார். இதன் பின் மாவட்ட...

பனை உற்பத்தி விற்பனையை அதிகரிக்க பல்வேறு திட்டங்கள்

பனை உற்பத்தி பொருட்களின் விற்பனையை அதிகரித்து பனை உற்பத்தியில் தங்கியுள்ள குடும்பங்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கு பல்வேறு திட்டங்கள் நடைமுறைப்படுத்தவுள்ளதாக பனை அபிவிருத்திச் சபை தலைவர் கே.விஜிந்தன், திங்கட்கிழமை (02) தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், கடந்த காலத்தில் நிவர்த்தி செய்யப்படாமல் இருந்த வேலைத்திட்டங்களை குறுகிய நாட்களுக்குள் நிவர்த்தி செய்து, உற்பத்திகளை அதிகரிப்பதற்கு திட்டமிட்டுள்ளோம்....

“ஐநா அறிக்கையை இலங்கை உள்ளக விசாரணை பயன்படுத்தும்”

இலங்கை போரின்போது நடந்த பாரிய மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான ஐநா மன்றத்தின் மனித உரிமைகள் ஆணையரின் விசாரணை அறிக்கையின் கருத்துக்களை இலங்கை அரசு உருவாக்கவிருக்கும் உள்ளக புலனாய்வு மற்றும் நீதிக்கட்டமைப்பு பயன்படுத்தும் என்று இலங்கையின் வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீர ஐநாவின் மனித உரிமைகள் ஆணையக் கூட்டத்தில் தெரிவித்திருக்கிறார். நேற்று திங்கட்கிழமையன்று ஜெனீவாவில் துவங்கிய...

ஜோதிடத்தை நம்பமாட்டேன்: மஹிந்த

நான் இனிமேலும் ஜோதிடத்தில் நம்பிக்கை வைக்கப்போவதில்லை என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பாகிஸ்தானின் ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார். பாகிஸ்தானின் டவுன் நிறுவனத்தில் கடமையாற்றும் ஊடகவியலாளரால் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே, அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

முகத்தை முழுமையாக மறைக்கும் தலைக்கவசத்துக்கு தடை

மோட்டார் சைக்கிள்களில் முகத்தை முழுமையாக மறைக்கும் தலைக்கவசங்களை அணிந்து கொண்டு பயணிப்பது, மார்ச் மாதம் 21ஆம் திகதி முதல் தடை செய்யப்படும் என்று பொலிஸார் தெரிவித்தனர். முகத்தை முழுமையாக மறைக்கும் தலைக்கவசங்களை அணிந்து கொண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்து பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபடும் சம்பவங்கள் அதிகரித்து வருவதன் காரணத்தினாலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.

செப்ரெம்பரில் அறிக்கை திட்டமிட்டபடி வெளியிடப்படும் : வடக்கு முதல்வரிடம் ஐ.நா குழு

ஐ.நா மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்தினால் இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் இனப்படுகொலை தொடர்பிலான விசாரணை அறிக்கை எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் திட்டமிட்டபடி வெளியிடப்படும் என யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ள அரசியல் விவகாரங்களுக்கான உதவிச் செயலாளர் நாயகம் ஜெப்ரி பெல்ட்மன் தன்னிடம் உறுதியளித்துள்ளதாக வடக்கு முதலமைச்சர் தெரிவித்தார். நான்கு நாள்கள் உத்தியோக பூர்வ...

ஜனாதிபதி நாளை வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு விஜயம்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாளை (03) வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு விஜயம் செய்யவுள்ளார்.அவர் ஜனாதிபதியாக தெரிவாகிய பின்னர் வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு மேற்கொள்ளும் முதலாவது விஜயம் இதுவாகும். இவ்விஜயத்தின் போது ஜனாதிபதி வடக்கு கிழக்கு அரசியல் பிரதிநிதிகளையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளார். யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்திலும் திருகோணமலை மாவட்ட குழுக்கூட்டத்திலும் ஜனாதிபதி நாளை கலந்துகொள்ளவுள்ளார்....

தெல்லிப்பழை தமிழ்ச் சங்கத்தின் தமிழ் விழா!

தெல்லிப்பழை தமிழ் சங்கத்தின் ஏற்பாட்டில் நேற்று ஞாயிற்றுக்கிழமை அரிமா கழக மண்டபத்தில் தமிழ்ச் சங்கத் தலைவர் ச.சிவானந்தராசா தலைமையில் தமிழ் விழா இடம் பெற்றது. தெல்லிப்பழை காசிப்பிள்ளையார் ஆலய முன்றலில் இருந்து விருந்தினர்கள் இடப மாடுகள் இரண்டு முன்னே வர அதனைத் தொடர்ந்து சங்கு, தப்பட்டை, பேரிகை, மேள வாத்தியங்ள் முழங்க கொடி, ஆலவட்டம் தாங்கி...

அதிகாரங்களை பகிர்ந்து கொள்ள கூட்டமைப்பு முன்வர வேண்டும் – ஆனந்தசங்கரி

அதிகார பரவலாக்கலையும் ஜனநாயகத்தையும் இலங்கை அரசிடம் கோரி நிற்கும் நாம், நமக்கு கிடைக்கும் அதிகாரங்களை பகிர்ந்து கொள்ளவும் ஜனநாயக வழிமுறைகளை மேற்கோள்ளவும் பழகிக்கொள்ள வேண்டும் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்தார். ஆனந்தசங்கரி திங்கட்கிழமை (02) அனுப்பி வைத்துள்ள செய்திக்குறிப்பிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, 'கிழக்கு மாகாண சபையில்...

மைத்திரி-மஹிந்த விரைவில் சந்திப்பு

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவுக்கும் இடையில் சந்திப்பு ஒன்று விரைவில் இடம்பெறவுள்ளது. என்று அமைச்சரவையின் பேச்சாளர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார். உத்தேச தேர்தல் முறைமையில் மேற்கொள்ளவேண்டிய மாற்றம் தொடர்பிலான பரிந்துரைகளை அமுலாக்கம் செய்வது குறித்து இந்த சந்திப்பின்போது விரிவாக கலந்துரையாடப்படும் என்றும் அவர் தெரிவித்தார். ஜனாதிபதி தேர்தலின் போது அளிக்கப்பட்ட 100...

‘உருவப் பொம்மை எரிப்பில் எனக்கு சம்பந்தமில்லை’ – சுரேஷ்

தமிழரசுக் கட்சியின் மத்திய குழு நேற்று கூடி வெளியிட்ட தன்மீதான குற்றச்சாட்டுக்களை மறுத்துள்ள நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசியக்கூட்டமைபின் பேச்சாளரும் தமிழ் தேசியக்கூட்டமைபின் அங்கத்துவ கட்சியான ஈபி ஆர் எல் எப் கட்சியின் தலைவருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் அவர்கள், உருவப் பொம்மை எரிப்புக்கும் தனக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை என்று கூறியுள்ளார். விமர்சனம் என்பது கூட, அரசியல்...

வடக்கிற்கு இன்று வரும் ஐ.நா. குழு! – ஆளுநர், முதல்வருடன் சந்திப்பு

இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தால் மேற்கொள்ளப்பட்ட விசாரணை அறிக்கை வெளியிடப்படுவது செப்டெம்பர் மாதம் வரை பிற்போடப்பட்டுள்ள நிலையில், நான்கு நாட்கள் விஜயம் மேற்கொண்டு நேற்றுமுன்தினம் கொழும்பு வந்த ஐ.நா. பேரவையின் அரசியல் விவகாரங்களுக்கான உதவிச் செயலாளர் நாயகம் ஜெப்ரி பெல்ட்மன் தலைமையிலான...

கச்சதீவுக்குச் சென்ற பொலிஸ் உத்தியோகஸ்தர் உயிரிழப்பு

கச்சதீவு புனித அந்தோனியார் தேவாலயத்துக்கு கடமைக்குச் சென்று திரும்பிய பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த பொலிஸ் உத்தியோகஸ்தர் ஞாயிற்றுக்கிழமை (01) மாலை கடலில் வீழ்ந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் கூறினர். குருநாகல், கிரில்ல என்னும் இடத்தைச் சேர்ந்த 2 பிள்ளைகளின் தந்தையாக எல்.ஆர்.செனதீர (வயது 48) என்பவரே இவ்வாறு உயிரிழந்தார். படகில் திரும்பிக்கொண்டிருந்த இவர் தவறி கடலுக்குள்...

10 வருடத்தில் செய்ய முடியாதவற்றை 30 நாட்களில் செய்தோம் – ரணில்

கடந்த 10 வருடங்களான முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்தால் செய்யமுடியாதவற்றை 30 நாட்களில் நாம் செய்துள்ளோம். எதிர்வரும் பொதுத்தேர்தலில் முழு நாடாளுமன்றத்தையுமே ஒரு ஆட்சியின் கீழ் கொண்டுவந்து, மக்களுக்கு மேலும் நன்மைகளை பெற்றுக்கொடுப்பது மாத்திரமல்லாது, இளைஞர் யுவதிகளின் மனதில் கொழுந்துவிட்டெரியும் பிரச்சினைகளையும் தீர்த்துவைப்போம்' என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். 'மனுசத் மினுசுன் பலயய்-...

தலைமன்னார் – இராமேஸ்வரத்துக்கான படகு சேவை மீண்டும் ஆரம்பம்

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயத்தை கௌரவிக்கும் வகையில் தலைமன்னாருக்கும் இராமேஸ்வரத்துக்கும் இடையிலான படகுச் சேவையை மீண்டம் ஆரம்பிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் 13 மற்றும் 14ஆம் திகதிகளில் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். இந்நிலையில், இந்தியாவின் ஆதரவில் புனரமைக்கப்பட்ட மன்னார் - மதவாச்சிக்கு இடையிலான புகையிரத சேவையினையும்...
Loading posts...

All posts loaded

No more posts