- Saturday
- July 5th, 2025

எந்தவொரு அரசியல் கட்சியுடனும் ஒப்பந்தம் செய்து கொள்ளவில்லை ஆனால் நாட்டு மக்களுடன் மட்டுமே நான் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கிழக்கு மாகாண ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் நேற்று திருகோணமலை மாவட்ட செயலகத்தில் ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்றது. அதில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில்,...

யாழ். நகரப் பகுதியிலுள்ள பல்பொருள் அங்காடி ஒன்றில் விலைவிபரம் இல்லாமல் பொருள் விற்பனை செய்த குற்றத்துக்காக 1 இலட்சம் ரூபாய் அபராதம் விதித்து யாழ். நீதவான் பொ.சிவகுமார் செவ்வாய்க்கிழஇமை (03) உத்தரவிட்டார். விலை விபரம் இல்லாத கண்ணாடி சுத்திகரிப்பு ஸ்பிரேயை வைத்திருந்த குற்றத்துக்காக, யாழ். பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையால் அங்காடி உரிமையாளருக்கு எதிராக நீதிமன்றத்தில்...

காணாமல் போனவர்களை மீட்டுத்தரக் கோரி ஜனாதிபதிக்கான மகஜர் அரச அதிபரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. காணாமல் போனவர்களை மீட்டுத்தரக் கோரி வட பகுதியில் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டு காணாமல் போன பொதுமக்கள் பெற்றோர் பாதுகாவலர் சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ். மாவட்ட செயலகத்திற்கு முன்னால் இன்று கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. அதில் கலந்து கொண்ட உறவுகள் காணாமல் போன...

தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனிற்கு மரணதண்டனை விதித்து குடாநாடெங்கும் கொடும்பாவிகள் தொங்கவிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரி யாழ்.வந்து திரும்பியுள்ள நிலையில் வடமராட்சி, தென்மராட்சி மற்றும் யாழ்.நகரென இக்கொடும்பாவிகள் இன்று இரவோடிரவாக தொங்கவிடப்பட்டுள்ளதாக கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. தமிழ் தேசியக்கூட்டமைப்பு இளைஞரணியினை சேர்ந்தவர்களென தம்மை அடையாளப்படுத்திக்கொண்ட இளைஞர் குழுக்களே மரணதண்டனை எச்சரிக்கையுடன் இக்கொடும்பாவிகளை கட்டித்தொங்கவிட்டிருந்தததாக செய்திகள்...

வன்னிப் பகுதியில் தமது சேவைக்காலத்தை நிறைவு செய்த தகுதியுடைய ஆசிரியர்களுக்கு எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதல் இடமாற்றம் வழங்கப்படவுள்ளதாக வடமாகாணசபை உறுப்பினர் பாலச்சந்திரன் கஜதீபன் புதன்கிழமை (04) தெரிவித்தார். வன்னிப் பிரதேசத்தில் கடமையாற்றி இடமாற்றத்துக்கு விண்ணப்பித்த, தகுதியுடைய ஆசிரியர்கள் அனைவருக்கும் ஏப்ரல் 1ஆம் திகதி அமுலுக்கு வரும் வகையிலான இடமாற்ற கடிதங்கள் மாகாண கல்வி அமைச்சின்...

யாழ்ப்பாணம் தாதிய பயிற்சிக் கல்லூரி மாணவர்கள், தாம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணக்கோரி மனு ஒன்றை நேற்று செவ்வாய்க்கிழமை ஜனாதிபதி மைத்திரிபாலவிடம் நேரடியாகச் சமர்ப்பித்தனர். யாழ். அரச செயலகத்துக்கு சென்று இந்த மனுவை அவர்கள் ஜனாதிபதியிடம் ஒப்படைத்தனர். தாதிய பயிற்சி நெறியை பூர்த்தி செய்து இறுதிப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள நேரத்தில் தங்களிடம் ஆங்கில பாடத்தில் திறமைச்சித்தி கோரப்பட்டு,...

தென்னிலங்கை அரசியல்வாதிகளுக்கு கறுப்புக்கொடி காட்டி எதிர்த்த காலம் மாற்றமடைந்து, நேசக்கரம் நீட்டி தமிழ் மக்கள் வரவேற்கும் காலம் தற்போது நடைபெறுகின்றது. அந்த மாற்றத்துக்கு முக்கிய பங்காளிகளாக நாங்கள் இருந்துள்ளோம் என ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் கே.என்.டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். வடமாகாண விசேட அபிவிருத்திக்குழுக்கூட்டம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் யாழ்.மாவட்டச் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை...

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, காங்கேசன்துறையில் கட்டிய ஜனாதிபதி விடுதியை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, செவ்வாய்க்கிழமை (03) பார்வையிட்டார். ஜனாதிபதியாக பதிவியேற்ற பின்னர் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன், நாடாளுமன்ற உறுப்பினர் மரியாபரணம் சுமந்திரன் ஆகியோருடன் சென்று பார்வையிட்டார். விடுதி தொடர்பில் கடற்படையினரிடம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன...

வவுனியா, மகாறம்பைக்குளம் பகுதியிலுள்ள பிஸ்சி ஒழுங்கையில் துப்பாக்கிச் சூட்டு காயங்களுடன் ஆணொருவரின் சடலத்தை இன்று (4) மீட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர். மேற்படி ஒழுங்கையில் ஆணொருவரின் சடலம் காணப்படுவதாக தங்களுக்கு தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து சடலத்தை மீட்டதாகவும் பொலிஸார் கூறினர். வவுனியா, வைரவபுளியங்குளம் பிரதேசத்தில் உணவகமொன்றை நடத்திவருபவரான வடிவேலழகன் (வயது 45) என இவர்...

விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து 15 ஆண்டுகளுக்கு முன்னர் விலகியிருந்த முருகேசு பகீரதி என்ற தாய் கொழும்பு பயங்கரவாத புலனாய்வு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டு விசாரிக்கப்பட்டுவருகின்றார். 2005-ம் ஆண்டில் பிரான்ஸ் சென்றிருந்த பகீரதி, தனது 8 வயது மகளுடன் இலங்கை வந்து கிளிநொச்சியிலுள்ள அவரது பெற்றோருடன் ஒருமாத விடுமுறையை கழித்துவிட்டு, பிரான்ஸ் திரும்பும் வழியிலேயே நேற்று முன்தினம் திங்கட்கிழமை...

முதலாம் ஆண்டு தொடக்கம் ஐந்தாம் ஆண்டு வரையான பாடசாலை மாணவர்களுக்கு ஒரு நேர உணவு பெற்றுக் கொடுத்தல் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்று வருவதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார். ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் புத்திக்க பத்திரன இன்று (03) பாராளுமன்றத்தில் கேட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை...

கிழக்கு மாகாண சபையில் புதிய அமைச்சுப் பொறுப்புக்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏற்றுக் கொண்டுள்ளது. கிழக்கு மாகாண ஆளுனர் அலுவலகத்தில் இடம்பெற்ற பதவிப் பிரமாண நிகழ்வில் புதிய அமைச்சர்களாக நால்வர் பதவியேற்றுக் கொண்டனர். கிழக்கு மாகாண கல்வியமைச்சராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எதிர்க்கட்சித் தலைவர் தண்டாயுதபானியும், சுகாதார அமைச்சராக ஸ்ரீ ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்...

இங்குள்ள பிரச்சினைகள் அனைத்தையும் நான் அறிவேன். அதனைத் தீர்க்கும் அவசியம் எனக்கு உள்ளது. அதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். வடக்கு மாகாண ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும்...

எமது தமிழ் சமூகத்தில் முன்னைய வரலாறுகளை தற்போதுள்ள புதிய தலைமுறையினர் மறந்து வருகின்றனர். அவ்வாறு இல்லாமல் புதிய தலைமுறையினர் எமது பழைய வரலாற்றை மறந்துவிடாமல் இருக்கவேண்டும் என வடமாகாண கல்வி அமைச்சர் தம்பிராசா குருகுலராஜா தெரிவித்தார். உலக வங்கியின் 13 மில்லியன் ரூபாய் நிதியுதவியில் துணுக்காய் வலயக்கல்வி பணிமனையில் அமைக்கப்பட்ட கட்டடத்தை திங்கட்கிழமை (02) திறந்து...

அல்வாய் முத்துமாரியம்மன் பகுதியிலுள்ள வீடொன்றில் இருந்து எரிந்த நிலையில் கர்ப்பிணிப் பெண்ணொருவர் திங்கட்கிழமை (02) காலை மீட்கப்பட்டு பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாக நெல்லியடி பொலிஸார் தெரிவித்தனர். வதிரியைச் சேர்ந்த பிரதீபன் சரண்யா (வயது 24) என்பவரே இவ்வாறு மீட்கப்பட்டார். இவரது கணவன் வவுனியா பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வருகின்றார். இருவரும் வதிரியிலிருந்து அல்வாய் பகுதியிலுள்ள...

தமிழீழ விடுதலைப்புலிகள் மீதான தடையை ஐரோப்பிய ஒன்றியம் நீக்கியது போன்று, இலங்கை அரசாங்கமும் இந்திய அரசாங்கமும் விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்க வேண்டும். விடுதலைப்புலிகள் மீதான தடை நீக்கப்படுவதன் மூலமே தமிழ்மக்களின் அடிப்படை பிரச்சினைகள் உட்பட அனைத்து விதமான பிரச்சினைககளையும் சுமுகமாக தீர்த்துக்கொள்ள முடியும் என போரால் பாதிக்கப்பட்ட மக்கள் இயக்கத்தின் தலைவர் வி.சகாதேவன் தெரிவித்தார்....

காணாமற்போனவர்களின் உறவினர்கள் ஒன்றிணைந்து நாளை புதன்கிழமை கவனயீர்ப்பு போராட்டமொன்றை யாழ். அரச செயலகம் முன்பாக நடத்தவுள்ளனர். அத்துடன் ஜனாதிபதியிடம் மனு ஒன்றையும் தாம் கையளிக்கவுள்ளனர் என்றும் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த போராட்டத்தில் நாடாளுமன்ற மற்றும் மாகாணசபை உறுப்பினர்களையும், காணாமற் போனவர்களின் குடும்பங்களைச் சேர்ந்த அனைவரையும் பங்கேற்குமாறும் குறித்த சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இதேவேளை வடபகுதியில் இச்சங்கத்தினால்...

மக்களுடைய நிலங்களை விடுத்து கடல் பகுதியை அபிவிருத்தி செய்து பலாலியில் விமான நிலையம் மற்றும் துறைமுகம் என்பனவற்றை அபிவிருத்தி செய்ய புதிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் செயலாளர் நாயகம் மாவை சேனாதிராசா தெரிவித்தார். வடக்கு மாகாண ஒருங்கிணைப்பு கூட்டம் இன்று யாழ். மாவட்ட செயலகத்தில் ஜனாதிபதி மைத்திரி பாலசிறிசேன...

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் வடக்கு மாகாண அபிவிருத்திக் கூட்டம் இன்று செவ்வாய்க்கிழமை காலை 10.30. மணியளவில் யாழ் மாவட்டச் செயலகத்தில் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது. யாழிற்கு வருகை தந்துள்ள புதிய ஐனாதிபதியை வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் மாலை அணிவித்து வரவேற்றார். இதன் போது மத்திய அரசின் அமைச்சர்கள் சிலரும் வருகை தந்திருந்தனர். இந்தக்...

சாவகச்சேரி கெருடாவிலில் கொட்டன்கள் மற்றும் ஆயுதங்களுடன் நடமாடும் குழுவினரால் மக்கள் இரவில் நடமாட மக்கள் அஞ்சுகின்றனர். இந்தக் குழுவினர் இரவில் நடமாடுவோரை வழிமறித்து இடையூறு விளைவிக்கின்றனர். இதனால் அப்பகுதி மக்கள் இரவில் நடமாட முடியாத நிலை காணப்படுகின்றது. தவிர மட்டுவில், சரசாலை பகுதிகளைச் சேர்ந்த சாவகச்சேரி நகர்ப் பகுதி வர்த்தகர்கள் வியாபாரத்தை முடித்துக் கொண்டு இரவு...

All posts loaded
No more posts