- Wednesday
- July 1st, 2026
இராணுவ உயர் பாதுகாப்பு வலயமாக இருந்த வீமன்காமம் பகுதியில் மக்கள் மீள்குடியேற்றத்திற்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். இந் நிலையில் அங்கு தமது காணிகளை துப்புரவு செய்யச் சென்ற மக்கள் தாங்கள் காலம் காலமாக வணங்கிவந்த பிள்ளையார் ஆலயத்தை காணாது பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளார்கள். குறிப்பாக குறிப்பிட்ட பிள்ளையார் ஆலயம் இருந்த பகுதி இராணுவ உயர் பாதுகாப்பு வலயத்தில் தற்போதும்...
சமூக சேவைகள் அமைச்சினால் ஊனமுற்றோரின் நலன்களை வடமாகாணத்தில் பேணக்கூடிய பிராந்திய நிலையமொன்று மிக விரைவில் கிளிநொச்சியில் அமைக்கப்படவுள்ளது. இது தொடர்பாக ஆராய அமைச்சின் திட்டப்பணிப்பாளர் ஆர்.இராமமூர்த்தி அண்மையில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மாவட்டங்களுக்கு வருகை தந்தார். பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அண்மையில் மேற்படி 03 மாவட்டங்களுக்கும் விஜயம் செய்த போது ஊனமுற்றோரின் தேவைகள் குறித்து கேட்டறிந்து...
பொருட்களின் நிறைகளை நுகர்வோர் சரியாக தெரிந்து கொள்ளும் வகையில் நாடாளவிய ரீதியில் இயங்கும் ஒவ்வொரு விற்பனை நிலையம் மற்றும் பேக்கரிகளிலும் பிரத்தியேகமாக தராசு ஒன்று கட்டாயம் வைக்கப்படல் வேண்டும் என நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை அறிவித்துள்ளது. இந்த நடைமுறைச்சட்டம் எதிர்வரும் மே மாதம் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் கட்டாயமாக்கப்படும் என...
வலிகாமம் வடக்கு பகுதியில் அதியுயர் பாதுகாப்பு வலயத்திற்கு உட்பட்ட காணிகளில் மீள் குடியேற்றம் தொடர்பில் ஒன்றுக்கொன்று முரணான தகவல்களையே தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் ஊடகங்களில் தெரிவித்து வருகின்றனர் என, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். இவர்களது கூற்றுக்கள் எமது மக்களை மீள்குடியேற்ற விடயத்திலும் குழப்புவதாகவே அமைந்துள்ளன என கூறியுள்ள...
நாட்டின் அனைத்துப் பாகங்களிலும் இன்று (18) மாலையில் அல்லது இரவில் இடியுடன் கூடிய மழை பெய்யலாம் என வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. சில பிரதேசங்களில் இம் மழைவீழ்ச்சியினளவு 100 மில்லிமீற்றரைத் தாண்டலாம் எனவும் வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. அத்துடன் திருகோணமலை பொத்துவில் வழியாக மட்டக்களப்பு புத்தளம் கொழும்பு முதலான கடலோரங்களில் காலையில் மழைக்கான...
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரனுக்கும் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் ந.வேதநாயகனுக்குமிடையிலான சந்திப்பொன்று இன்று வெள்ளிக்கிழமை காலை செயலகத்தில் நடைபெற்றது. இந்தத் சந்திப்பின் போது தற்போது அரசாங்கத்தால் வலிகாமம் வடக்கில் விடுவிக்கப்பட்ட ஆயிரத்து 100 ஏக்கர் காணிகளில் இராணுவத்தின் நான்கு பாரிய முகாம்கள் அமைக்கப்பட்டிருப்பது குறித்து சுரேஷ் எம்.பியால்...
கிளிநொச்சி- முல்லைத்தீவு விசேட கல்வி வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அண்மையில் யாழ் விஜயம் செய்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இது தொடர்பில் கல்வி அதிகாரிகளுடன் கலந்துரையாடி அதற்கான அனுமதியை வழங்கியுள்ளார். இத்திட்டத்தின் கீழ் குறித்த மாவட்டங்களிலுள்ள பாடசாலைகள் மற்றும் அவற்றின் உட்கட்டுமான அமைப்புக்களை மேம்படுத்தவுள்ளது. சிவில் பாதுகாப்புப் பிரதேசங்களிலுள்ள பாடசாலைகளில் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான பரீட்சை வைக்கப்பட்டு பின்னர்...
உங்கள் விண்ணப்பப்படிவத்திற்கான அடையாள அட்டையை அவசரமாக பெற்றுக் கொடுப்பதற்கு, ஆட்பதிவுத் திணைக்களம் துரித சேவை ஒன்றை அறிமுகம் செய்கின்றது
போலிக் கடவுச்சீட்டை பயன்படுத்தி துருக்கியிலிருந்து தரைவழியூடாக இத்தாலிக்கு செல்வதற்கு முயன்ற யாழ்ப்பாணத்தை சேர்ந்த 28 வயதான இளைஞன், நாடு கடத்தப்பட்டுள்ளார். துருக்கியிலிருந்து நாடு கடத்தப்பட்ட அந்த இளைஞனை, கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் அதிகாரிகள் இன்று கைது செய்துள்ளனர். அவர் தனது செல்லுபடியான கடவுச்சீட்டை பயன்படுத்தி தமிழ்-சிங்கள புத்தாண்டு தினமான கடந்த 14ஆம் திகதி,...
யாழ்ப்பாணம், கிளிநொச்சியில் மீளக்குடியேறியுள்ள முஸ்லிம் சம்மேளனப் பிரதிநிதிகளுக்கும் வடமாகாண ஆளுநர் எச்.எம்.ஜி.எஸ்.பளிஹக்காரவுக்கும் இடையில் இன்று வெள்ளிக்கிழமை (17) வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் சந்திப்பொன்று இடம்பெற்றது. மீள்குடியேறியுள்ள முஸ்லிம் மக்களுக்கு இதுவரை காலமும் எவ்வித உதவிகளும் முன்னைய அரசாங்கத்தால் வழங்கப்படவில்லையெனவும், மீள்குடியேறிய மக்களுக்கு காணிப்பிரச்சினை, வீட்டுத்திட்டத்தில் புறக்கணிப்பு, தொழில் வாய்ப்புக்கள் இன்மை உள்ளிட்ட நிறைய பிரச்சினைகள் இருப்பதாக...
ஏப்ரல் மாதம் 30ஆம் திகதி தொடக்கம் மே 6ஆம் திகதி வரை வெசக் வாரமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது என அரச நிர்வாக- மாகாணசபை மற்றும் ஜனநாயக நல்லாட்சி தொடர்பான அமைச்சர் கரு ஜயசூரிய தெரிவித்தார். அத்துடன் மே மாதம் 3ஆம் 4ஆம் திகதிகளை வெசக் தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதுடன் தேசிய வெசக் உற்சவத்தை மஹியங்கன ரஜ மகா விகாரையில்...
இலங்கையின் முதலாவது திறந்தவெளி மிருகக்காட்சிசாலை, இன்று வெள்ளிக்கிழமை (17)காலை 10.15க்கு, பின்னவல பிரதேசத்தில் திறந்துவைக்கப்பட்டது. பின்னவல யானைகள் சரணாலயத்தை அண்மித்து நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த மிருகக்காட்சிசாலையே, இலங்கையின் இரண்டாவது மிருகக்காட்சிசாலையும் ஆகும். மிருகங்களை கூண்டுகளில் அடைத்து காட்சிப்படுத்தும் கொள்கையிலிருந்து மாறுபட்ட நிலையில், சுதந்திரமாக மிருகங்கள் நடமாடக்கூடிய வகையில் இந்த மிருகக்காட்சிசாலை நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இந்த மிருகக்காட்சிசாலையின் நிர்மாணப் பணிகளின்...
புலம்பெயர், உள்நாட்டு தமிழ் பேசும் மக்கள், மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப்பின் தலைமைத்துவத்தின் கீழ் இணைந்து எப்பேர்ப்பட்ட ஒரு அரசியல் தீர்வு வேண்டும் என்பதை அறிந்து வெளியிட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியிருக்கின்றது என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப்பின் 75ஆவது அகவைப் பூர்த்தி நிகழ்வு மன்னார் ஆயரின் வாசஸ்தலத்தில்...
எல்லை தாண்டி சட்டவிரோதமாக மீன்பிடித்தனர் என்ற குற்றச்சாட்டில் பருத்தித்துறை கடற்பரப்பில் வைத்துக் கைது செய்யப்ட்ட 37 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் 29 ஆம் திகதி வரைக்கும் விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டுள்ளது. சட்டவிரோதமாக மீன்பிடித்தனர் என்ற குற்றச்சாட்டில் கடந்த 4 ஆம் திகதி பருத்தித்துறை கடற்பரப்பில் வைத்துக் இலங்கைக் கடற்படையினரால் 5 படகுகளில் வந்த 37...
"இந்திய மீனவர்கள் இலங்கைக்குள் பிரவேசித்தால் சுடப்படுவார்கள்” என்று, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூறியது பகிடிக்காகவே என, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க குறிப்பிட்டுள்ளார். வௌிநாட்டு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். மேலும் இதனை மக்கள் சிலர் தவறாக புரிந்து கொண்டுள்ளதாகவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார். செய்தியாளர்கள், ரணில் விக்ரமசிங்கவை குழப்பும்...
இராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடம் கடற்கரையில் ஒதுங்கிய மர்மப்படகில், இலங்கையைச் சேர்ந்த கடத்தல்காரர்கள் ஊடுருவி இருக்கலாம் என்ற சந்தேகத்தில் ´கியூ´ பிரிவு பொலிஸார் விசாரித்து வருகின்றனர். தங்கச்சிமடம் கண்ணுபாடு கடற்கரையில் நேற்று 20 அடி நீளமுள்ள ஒரு மர்மப்படகு ஒதுங்கி நின்றது. அதில் வந்த கடத்தல்காரர்கள் 4 பேர் தங்க கட்டிகளுடன் ஊடுருவி இருக்கலாம், என கிடைத்த...
வடமாகாணம் போரினால் பாதிக்கப்பட்டதால் பல தொழிற்சாலைகளை மீளவும் அரம்பிக்க முடியாமல் உள்ளது.இதனால் வேலைவாய்ப்பு பிரச்சினைகள் தோற்றம் பெற்றிருப்பதாக யாழ்.மாவட்ட அரச அதிபர் வேதநாயகன் தெரிவித்துள்ளார். நேற்று யாழ்.பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற கிராமப் புற பெண்களை தொழில் முனைவோராக மேம்படுத்தும் செயலமர்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அவர் இதனைத் தெரிவித்தார். மேலும் அவர் உரையாற்றுகையில், கடந்த 30 வருடங்களுக்கு...
வலிகாமம் பகுதியில் கிணற்று நீர் மாசடைந்துள்ளமை தொடர்பில் தயாரிக்கப்பட்ட "சுன்னாகம்: தகிக்கும் தண்ணீர்" ஆவணப்படம் வெளியிடும் நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை மாலை 4 மணிக்கு சுன்னாகம் கதிரமலை சிவன்கோயில் மண்டபத்தில் நடைபெறவுள்ளது. யாழ்.ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் நடைபெறும் இந்த நிகழ்வில் சிறப்புரையை மருத்துவர் முரளி வல்லிபுரநாதன், மருத்துவர் பி.குமரேந்திரன் ஆகியோர் நிகழ்த்துவர்.
வடமாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள் உட்பட ஆறு செயலாளர்களுக்கு வழங்கப்பட்ட இடமாற்றம் மீண்டும் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. எதிர்வரும் 27ஆம் திகதி இந்த இடமாற்றம் நடைமுறைப்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் வடக்கு மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள் உள்ளிட்ட ஆறு பேருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது என்று முன்னர் அறிவிக்கப்பட்டு, மீண்டும்...
“எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தனித்துப் போட்டியிடும்” என்று கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது:- எவரிடமும் பேசுவதற்கு நாம் தயாரில்லை. எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வடக்கு, கிழக்கில் தனித்தே போட்டியிடுவோம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கொள்கை ஒரு நாளும் வெற்றியளிகாது. அதிகாரங்கள் பங்கிடப்பட்டாலும்...
Loading posts...
All posts loaded
No more posts
