Ad Widget

மீண்டும் மீள்குடியேற்றம் தொடர்பான கூட்டம் பிற்போடப்பட்டுள்ளது

வலிகாமம் வடக்கு மற்றும் வலிகாமம் கிழக்குப் பகுதிகளில் உயர்பாதுகாப்பு வலயமாக இருக்கும் பொதுமக்களின் காணிகளை மீள்குடியேற்றத்துக்கு விடுவிப்பது தொடர்பில் ஆராய்வதற்கான கூட்டம், 2ஆவது தடவையாகவும் ஒத்திவைக்கட்டுள்ளது.

கடந்த 27ஆம் திகதி நடைபெறவிருந்த கூட்டம் பிற்பொடப்பட்டு இன்று புதன்கிழமை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தத. இந்நிலையில் நேற்றய கூட்டமும் ஒத்திவைக்கப்பட்டு எதிர்வரும் மே மாதம் 8ஆம் திகதிக்கு பிற்பொடப்பட்டுள்ளது.

கடந்த 25 வருடங்களாக உயர்பாதுகாப்பு வலயமாகவிருக்கும் காணிகளில் இராணுவத் தேவைக்கு மேலதிகமாக உள்ள காணிகளை பொதுமக்களிடம் மீண்டும் கையளிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என புதிய அரசாங்கம் கூறியது.

இதன் முதற்கட்டமாக வலிகாமம் வடக்கு, வலிகாமம் கிழக்குப் பகுதிகளிலுள்ள 1000 ஏக்கர் காணிகள் இரண்டு கட்டங்களாக விடுவிக்கப்பட்டன. 3ஆம் கட்டக்காணிகள் விடுவிப்பது தொடர்பாகவும் மீள்குடியேற அனுமதிக்கப்பட்ட பகுதிகளில் மீள்குடியேறத் தயாராகும் மக்களின் தேவைகள் பிரச்சினைகள் தொடர்பாகவும் ஆராய்வதற்கான கூட்டமே இவ்வாறு பிற்போடப்பட்டுள்ளது.

இது தொடர்பில் யாழ்.மாவட்டச் செயலாளர் நாகலிங்கம் வேதநாயகனுடன் தொடர்புகொண்டு கேட்டபொழுது, மீள்குடியேற்றம் தொடர்பான கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மீள்குடியேற்ற அமைச்சர் மற்றும் அதிகாரிகள் கலந்துகொள்ள வேண்டியுள்ளது. அவர்களுக்கு நேரம் இல்லாமையால் இந்தக் கூட்டத்தை எதிர்வரும் 8 ஆம் திகதிக்கு ஒத்தி வைத்துள்ளதாக கூறினார்.

Related Posts