- Friday
- March 27th, 2026
விடுதலைப் புலிகள் சூழல் பாதிப்புக் குறித்து கூடுதலான அக்கறை கொண்டிருந்தார்கள் என்று வடமாகாண சுற்றாடல் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார். இன்று திங்கட்கிழமை (30.03.2015)இயற்கைப் பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியத்தால் கரையோர வளங்களை நல் முகாமைத்துவம் செய்வது தொடர்பான ஆய்வுப்பட்டறை ஒன்று திருநெல்வேலியில் அமைந்துள்ள சேவாலங்கா கேட்போர் கூடத்தில் நடைபெற்றுள்ளது. இந்த ஆய்வுப்பட்டறையில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே...
இன்று திங்கட்கிழமை(30) வெளியான கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின்படி, யாழ். வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலையில் 28 பேர், 9 ஏ சித்திகளைப் பெற்றுள்ளதாக அதிபர் திருமதி வி.சண்முகரட்ணம் தெரிவித்தார். 9 ஏ சித்திகளை 28 பேரும் 8 ஏ சித்திகளை 48 பேரும் 7 ஏ சித்திகளை 25 பேரும் 6...
கிளிநொச்சி, ஸ்கந்தபுரம் கரும்புப் பிள்ளையார் ஆலயத்துக்கருகில் இன்று திங்கட்கிழமை (30) காலையில் இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பஸ் மோதியதில் இளைஞன் ஒருவர் பலியாகியுள்ளதாக அக்கராயன் பொலிஸார் தெரிவித்தனர். அக்கராயன் கண்ணகிபுரம் பகுதியை சேர்ந்த கிருஸ்ணபிள்ளை தயாளன் (வயது 31) என்பவரே இந்நத விபத்தில் உயிரிழந்தார். முட்கொம்பனில் இருந்து கிளிநொச்சிக்கு சென்றுகொண்டிருந்த பஸ், மோட்டார் சைக்கிளில்...
முல்லைத்தீவு நாயாறு கடல் பகுதியில் சட்டவிரோதமான முறையில் மீன்பிடிக்கும் தென்னிலங்கை மீனவர்களை கட்டுப்படுத்தும்படி முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர் சங்கங்களின் சமாசத் தலைவர் அந்தோனிப்பிள்ளை மரியராசா, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். முல்லைத்தீவு மாவட்ட பிரச்சினைகள், தேவைகள் என்பன பற்றி பிரதிநிதிகளுடன் ஞாயிற்றுக்கிழமை (29) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே, அவர் இந்த கோரிக்கையை முன்வைத்தார். அவர்...
யாழ். மாநகரசபைக்கு உட்பட்ட நல்லூர்ப் பகுதியில் டெங்கு நுளம்பு உற்பத்தியாகக்கூடிய வகையில் சூழலை வைத்திருந்து நால்வருக்கு எதிராக யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர். பொதுச்சுகாதார பரிசோதகருடன் இணைந்து கடந்த 20ஆம் திகதி முதல் டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் யாழ். மாநகர சபை எல்லைக்குள் செய்யப்பட்டது. இதன்போது, டெங்கு பரவுக்கூடிய வகையில்...
கிளிநொச்சி மாவட்டத்தில் மீள்குடியேற்றத்துக்கு அனுமதிக்கப்படாத பகுதிகளில் மக்களை மீள்குடியேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் நேற்று ஞாயிற்றுக்கிழமை (29) வலியுறுத்தினர். கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் பிரதமருடன் நேற்று ஞாயிற்றுக்கிழமை (29) நடைபெற்ற கலந்துரையாடலின் போதே நாடாளுமன்ற உறுப்பினர்களான முருகேசு சந்திரகுமார் மற்றும் சுரேஸ் பிரேமசந்திரன் ஆகியோர் மேற்கண்ட கோரிக்கையை முன்வைத்தனர்....
வெளியாகியுள்ள கல்விப்பொதுத் தராதர சாதாரணத்தரப் பரீட்சை பெறுபேறுகளை மீள் திருத்துவதற்கான விண்ணப்பங்கள் ஏப்ரல் மாதம் 24ஆம் திகதி வரையிலும் ஏற்றுக்கொள்ளப்படும் என்று பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. இதேவேளை இன்று வெளியாகிய பரீட்சை பெறுபேறுகளை www.doenets.lk மற்றும் www.results.exams.gov.lk ஆகிய இணையத்தள முகவரிகளில் பார்வையிட முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார்.
234 உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக்காலம் மே மாதம் 15ஆம் திகதி வரையிலும் நீடிக்கப்பட்டுள்ளது என்று பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு அறிவித்துள்ளது. மார்ச் 15ஆம் திகதி மற்றும் நாளை 31ஆம் திகதி செவ்வாய்க்கிழமையுடன் பதவிக்காலம் நிறைவடைகின்ற உள்ளூராட்சி மன்றங்களுக்கான பதவிக்காலமே இவ்வாறு நீடிக்கப்பட்டுள்ளது என்று பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு அறிவித்துள்ளது. நாடாளுமன்ற எதிர்வரும் ஏப்ரல்...
வடக்கு மாகாணத்தில், ஆங்கிலம், கணிதம், விஞ்ஞானம், விவசாயம், தகவல் தொழில்நுட்பம் ஆகிய பாடங்களுக்கு ஆசிரியர்களாக 248 பட்டதாரிகள் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர். இன்று திங்கட்கிழமை காலை யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரியில், வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எஸ்.சத்தியசீலன் தலைமயில் இந்த நியமனம் வழங்கப்பட்டது. ஏற்கனவே இடம்பெற்ற நேர்முகப் பரீட்சைகளின் அடிப்படையில் வட மாகாண கல்வி அமைச்சினால்...
இலங்கையில் பிறக்கும் சிசுக்களின் செவிப்புலன் நிலமையைப் பரீட்சிப்பது தொடர்பான முதலாவது இரண்டு நாள் செயலமர்வு இன்று (30) கண்டி, பேராதனை, ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கா சிறுவர் ஆஸ்பத்திரியில் ஆரம்பமாகின்றது. இலங்கை நாட்டில் முதல் முறையாக பிறந்த குழந்தைகளுக்கு உடனடியாக செவிப்புலன் பரீட்சிக்கும் முறை அறிமுகப்படுத்தப்படுகிறது. இச்செயலமர்வின் இரண்டாம் நாளான நாளை (31ம் திகதி) முற்பகல் 11.00 மணிக்கு...
யாழ். மாநகரசபை சாரதிகள் தமக்கான மறுக்கப்பட்ட 8 அடிப்படை உரிமைகளை வழங்க கோரி இன்று திங்கட்கிழமை பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர். அகில இலங்கை ஸ்தல ஸ்தாபன சாரதிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் இன்று காலை இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. யாழ். மாநகர சபையினால் நிரந்தர நியமனம் பெற்று வாகனப் பகுதியில் கடமையாற்றுகின்ற அனைத்து சாரதிகளுக்கும் பதில் சாரதிகள்...
பல்கலைக்கழக மாணவர்களுக்கு வழங்கப்படும் மஹாபொல புலமைப் பரிசில் புதிய அரசாங்கத்தால் 2500வரை குறைக்கப்பட்டுள்ளதாக அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் குற்றம் சுமத்தியுள்ளது. மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தில் 4000 ரூபாவாக அதிகரிக்கப்பட்ட மஹாபொல புலமை பரிசில் புதிய அரசாங்கத்தால் 5000 ரூபாவாக அதிகரிக்கப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்ட போதும் அது செயற்படுத்தப்படவில்லை என அனைத்து பல்கலைக்கழக மாணவர்...
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் 100 நாள் வேலைத்திட்டத்தில் அளிக்கப்பட்ட வாக்குறுதிக்கு அமைய இலவச வைபை (WiFi) வழங்கும் திட்டம் இன்று (30) பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் கொழும்பு - புகையிரத நிலையத்திற்கு அருகில் நடைபெற்றது. இதில் அமைச்சர், பிரதி அமைச்சர்களான மங்கள சமரவீர, டி.எம்.சுவாமிநாதன், ரவி கருணாநாயக்க, ஹர்ச டி சில்வா, எரான், ரஞ்சித்...
வடமாகாண வைத்தியசாலைகளில் பணியாற்றுவதற்காக 160 தாதியர்களுக்கான நியமனக் கடிதங்கள் நாளை திங்கட்கிழமை (30) ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து வழங்கவுள்ளதாக வடமாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் எஸ்.ரவீந்திரன் தெரிவித்தார். நியமனம் பெறுபவர்கள், வடமாகாணத்திலுள்ள வைத்தியசாலைகளின் தேவைக்கு ஏற்றவாறு பணிக்கு அமர்த்தப்படுவர். வடமாகாண வைத்தியசாலைகளில் காணப்படும் தாதியர்கள் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும்படி அரசாங்கத்திடம் விடுத்த கோரிக்கைக்கமைய இந்த நியமனங்கள்...
வடக்குக்கு 3 நாள் விஜயம் மேற்கொண்ட பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சனிக்கிழமை (28) நெடுந்தீவு மற்றும் நயினாதீவு ஆகிய பகுதிகளுக்கு விஜயம் செய்தார். நெடுந்தீவுக்கு விஜயம் செய்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, நெடுந்தீவு பிரதேச செயலகத்தில் நடைபெற்ற கர்ப்பிணித் தாய்மாருக்கான சத்துணவு வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு 43 கர்ப்பிணி தாய்மாருக்கு உணவு பொதிகளை வழங்கினார்....
தமது சொந்த இடங்களை விடுவிக்க கோரும் தமிழ் மக்களின் கோரிக்கை நியாமானதே என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். வடக்குக்கு 3 நாள் விஜயம் மேற்கொண்ட பிரதமர், காங்கேசன்துறையிலுள்ள கடற்படையின் தலைமையகத்துக்கு சனிக்கிழமை(08) விஜயம் மேற்கொண்டு கடற்படையினரைச் சந்தித்து கலந்துரையாடினார். இதன்போது, கடற்படையினர் மத்தியில் உரையாற்றுகையில் அவர் மேற்கண்டவாறு கூறினர். அவர் மேலும் கூறுகையில், தமது...
புத்தூர் நவக்கிரியைச் சேர்ந்த வாழைக்குலை வியாபாரி மீது மூன்று பேரைக் கொண்ட கும்பல் மேற்கொண்ட வாள்வெட்டில் படுகாயமடைந்த அவ்வியாபாரி அச்சுவேலி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அச்சுவேலி பொலிஸார் ஞாயிற்றுக்கிழமை (29) தெரிவித்தனர். சனிக்கிழமை (28) இரவு இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் மருதயன் புஸ்பராசா (வயது 50) என்பவரே படுகாயமடைந்தார். வாழைக்குலை கொள்வனவு செய்பவர்கள் போன்று, இவரது வீட்டுக்கு...
இலங்கை இராணுவத்துக்கு சேறுபூசும் வகையில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட திரைப்படத்துக்கு குரல் கொடுத்துகொண்டிருந்த 8 பேரை கைது செய்துள்ளதாக பொரளை பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்டவர்கள் வடக்கையைச்சேர்ந்த ஐவரும் பெரும்பான்மை இனத்தைச்சேர்ந்த மூவரும் அடங்குவதாக தெரிவித்த பொரளை பொலிஸார் திரைப்படமும் கைப்பற்றப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தனர். நாரஹேன்பிட்டியவிலுள்ள வீடொன்றில் வைத்து குரல் கொடுத்துகொண்டிருந்த போதே சனிக்கிழமை(28) அவர்களை கைது...
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து டாக்காவுக்கு சென்ற மிஹின் எயார் விமானம், தொழில்நுட்ப கோளாறு காரணமாக மீண்டும் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது. இன்று காலை 7.30க்கு புறப்படவிருந்த விமானம், காலை 9.30க்கே புறப்பட்டது என்று பயணிகள் தெரிவிக்கின்றனர். விமானத்தில் ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாக. அந்த விமானம் 10.45க்கு...
இலங்கையின் வடக்கு - கிழக்கு மாகாணங்களில் வைத்திய துறையில் மருத்துவர்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சார்ந்தவர்களின் பற்றாக்குறை நிலவுவதாக மாகாண அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனை அராசங்கமும் ஏற்றுக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. யுத்தத்தினால் மோசமாகப் பாதிக்கப்பட்ட வடமாகாணத்தில் மாத்திரம் கிட்டத்தட்ட மூன்றிலொரு வைத்தியசாலைகளில் மருத்துவர்களின் பற்றாக்குறை மோசமான நிலையில் இருப்பதாக வட மாகாண சுகாதாரத்துறை அமைச்சர் டொக்டர் பத்மநாதன்...
Loading posts...
All posts loaded
No more posts
