கமெரோனுக்கு ஜனாதிபதி மைத்திரி வாழ்த்து

பிரித்தானிய பிரதமராக தெரிவு செய்யப்பட்டுள்ள டேவிட் கமெரோனுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அத்துடன், பிரித்தானியாவுடன நெருக்கமான உறவுகளை வைத்துகொண்டு ஒத்துழைப்புடன் முன்னோக்கி நகர்வதற்கு இலங்கை எதிர்பார்த்திருக்கின்றது என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

விடுவிக்கப்பட்ட பகுதிகளில் மீளக்குடியேற 993 குடும்பங்கள் பதிவு

உயர்பாதுகாப்பு வலயமாகவிருந்து அண்மையில் விடுவிக்கப்பட்ட பகுதிகளில் மீளக்குடியேறுவதற்கு 993 குடும்பங்கள் பதிவு செய்துள்ளதாக யாழ். மாவட்டச் செயலாளர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்தார். மீள் குடியேறியுள்ள மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுப்பதற்கான கலந்துரையாடல் ஒன்று யாழ். மாவட்ட செயலகத்தில் வெள்ளிக்கிழமை (08) இடம்பெற்றது. அந்தக் கலந்துரையாடலின் பின்னர் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு...
Ad Widget

வடக்கில் மக்களின் எஞ்சிய காணிகளை விடுவிக்க நடவடிக்கை – மாவை

வலிகாமம் வடக்கிலுள்ள பொதுமக்களின் எஞ்சிய காணிகள் விடுவிப்பது தொடர்பில் மீள்குடியேற்ற அமைச்சு, மீள்குடியேற்றம் தொடர்பான குழுவின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்துவோம் என தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா தெரிவித்தார். மீள்குடியேற்றம் தொடர்பிலான கலந்துரையாடல் ஒன்று யாழ். மாவட்டச் செயலகத்தில் வெள்ளிக்கிழமை (08) நடைபெற்றது....

சம்பூர் விடுவிக்கப்பட்டமை தமிழர்களின் மண் மீட்புப் போராட்டத்திற்குக் கிடைத்த மாபெரும் வெற்றி!

"திருகோணமலை மாவட்டத்தின் சம்பூர் பகுதி முதலீட்டு வலயத்துக்காக முன்னைய அரசால் சுவீகரிக்கப்பட்டது. தற்போதைய அரசு மக்களிடமே சம்பூரை மீளக் கையளித்தமையை நாம் வரவேற்கின்றோம். இது தமிழ் மக்களின் மண் மீட்புப் போராட்டத்திற்குக் கிடைத்த மாபெரும் வெற்றியாகும்.'' - இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். "தாம் பரம்பரை...

கழிவு எண்ணெயால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கான தண்ணீர் விநியோகம் நிறுத்தப்படும் அபாயம்!

யாழ்ப்பாணத்தில் கழிவு எண்ணெயால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கான குடிதண்ணீர் விநியோகம் நிறுத்தப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. குடிதண்ணீரை விநியோகிப்பதற்காக நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபைக்கு செலுத்த வேண்டிய நிலுவையை கடந்த சில மாதங்களாக பிரதேச சபைகள் செலுத்தாமையே இதற்குக் காரணம் எனத் தெரிவிக்கப்படுகின்றது. யாழ்ப்பாணத்தின் சுன்னாகம் மற்றும் இதனை பிரதேசங்களில் அண்டிய பகுதிகளின் கிணறுகளில் கழிவு எண்ணெய் சேர்ந்தது....

இ.போ.ச க்கும் தனியார் பேருந்து சங்கத்தினருக்கும் இடையிலான கலந்துரையாடல்!

வடமாகாண தனியார் தூர பேருந்து சேவைகள் சங்கத்தினருக்கும் வட பிராந்திய போக்குவரத்து சபையினருக்கும் இடையில் ஏற்படுகின்ற நேர அட்டவணைப் பிரச்சனையை 60:40 என்ற ரீதியில் தீர்க்க 11 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இப்பிரச்சனை தொடர்பாக ஆராயும் கலந்துரையாடல் ஒன்று வடமாகாண மீன்பிடி மற்றும் போக்குவரத்துத்துத்துறை அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்கள் மற்றும் மாவட்ட அரச அதிபர்...

இல. கணேசனுடன் வடக்கு மாகாண அவைத் தலைவர் கலந்துரையாடல்!

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான இல. கணேசன், வடக்கு மாகாண அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானத்துடன் கொழும்பில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இதன் போது வடக்கு மாகாணத்தின் பொருளாதார கட்டுமானங்களை மேம்படுத்தல், போரினால் பாதிக்கப்பட்ட விதவைகள் மற்றும் பொதுமக்களுக்கு வாழ்வாதார உதவிகளை மேம்படுத்தல் உள்ளிட விடயங்களுக்கு இந்திய அரசாங்கம் வடக்கு...

எரிபொருட்களின் விலையை அதிகரிக்க வேண்டாம் – பிரதமர்

உலக சந்ததையில் மசகு எண்ணெய் விலை அதிகரிக்கப்பட்டாலும் எரிபொருட்களின் விலைகளை அதிகரிக்க வேண்டாம் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, வாழ்க்கை செலவு தொடர்பாக குழுவுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

19 கிலோ கஞ்சாவுடன் ஒருவர் கைது

யாழ். பருத்தித்துறைப் பகுதியில் சுமார் 19 கிலோ எடையுடைய கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்றிரவு பருத்தித்துறை சுப்பர் மடம் பகுதியில் வல்வெட்டித்துறை மற்றும் பருத்தித்துறை பொலிஸார் அதிரடி சுற்றிவளைப்பினை மேற்கொண்டனர். சுப்பர்மடம் கடற்கரைப் பகுதியில் பாரியளவு கஞ்சா கடத்தல் இடம்பெறவுள்ளதாக தமக்கு கிடைத்த தகவலை அடுத்து வல்வெட்டித்துறை மற்றும் பருத்தித்துறை பொலிஸார் உள்ளடங்கிய...

வடக்கு சுற்றாடல் அமைச்சால் யாழில் வலசைப் பறவைகள் பற்றி மாணவர்களுக்குக் களப்பயிற்சி

வடக்கு மாகாண சுற்றாடல் அமைச்சால் வலசைப் பறவைகள் பற்றி மாணவர்களுக்கு அறிவூட்டும் விதமாக கருத்தமர்வும் வெளிக்களப் பயிற்சியும் யாழ்ப்பாணத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக சுற்றாடல் அமைச்சு ஊடகங்களுக்கு அனுப்பி வைத்திருக்கும் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தச் செய்திக்குறிப்பில், சர்வதேச ரீதியாக ஆண்டுதோறும் மே மாதத்தின் இரண்டாவது வார இறுதி நாட்களில் உலக வலசைப் பறவைகள் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இதன்படி...

18 பில்லியன் டாலர் மதிப்புள்ள மஹிந்த ஊழல் சொத்துக்கள் வெளிநாட்டில்

இலங்கை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ஊழல் மூலம் சம்பாதித்த 18 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்துக்களை வெளிநாடுகளில் பதுக்கிவைத்திருப்பதாக இலங்கையின் வெளிநாட்டு அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். வியாழனன்று கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது அவர் இதை கூறியுள்ளார். மகிந்த ராஜபக்ஷ குடும்பத்தினர் பெயரில் வெளிநாடுகளில் பதுக்கிவைக்கப்பட்டுள்ள சொத்துக்கள் தொடர்பாக இலங்கை அரசு விசாரணையொன்றை...

விபத்தில் இருவர் படுகாயம்

புத்தூர் சுன்னாகம் வீதியில் வியாழக்கிழமை (07) இலங்கை போக்குவரத்துச் சபையின் பேருந்தும் மோட்டார் சைக்கிளும் மோதி விபத்துக்குள்ளாகியதில் மோட்டார் சைக்கிளில் சென்ற இருவரும் படுகாயமடைந்து யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அச்சுவேலி பொலிஸ் நிலைய போக்குவரத்து பொறுப்பதிகாரி,டி.ஜீ.தனுஸ்க பிரசன்னா தெரிவித்தார். அச்சுவேலி தோப்பு பகுதியை சேர்ந்த தங்கராசா ஸ்ரீகுமார் (வயது 23), ஆவரங்கால் மேற்கை சேர்ந்த...

பொதுமக்கள் ஒத்துழைத்தால் போதைப் பொருளிலிருந்து வடமாகாணத்தை மீட்கமுடியும்

சரியான தகவல்களை வழங்கி பொது மக்கள் ஒத்துழைப்பு தந்தால் வடமாகாணத்தில் இருந்து முற்றாக போதைப்பொருள் விற்பனை மற்றும் பாவனையை அகற்ற தன்னால் முடியும் என வடமாகாண சிரேஸ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் லலித் ஏ ஜெயசிங்க தெரிவித்தார். காங்கேசன்துறையில் அமைந்துள்ள சிரேஸ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபரின் அலுவலகத்தில் வியாழக்கிழமை (07) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே...

சிறுமியை துஷ்பிரயோகம் செய்ய முயற்சி – மூவர் கைது

13 வயதுச் சிறுமியை துஷ்பிரயோகம் செய்ய முயன்ற 40 வயதுடைய சந்தேகநபர், மற்றும் சிறுமியை வாளால் வெட்டிக் காயப்படுத்திய சந்தேகநபருடைய இரண்டு மகன்கள் ஆகியோரை வியாழக்கிழமை (07) கைது செய்ததாக யாழ்ப்பாணப் பொலிஸார் தெரிவித்தனர். ஓட்டுமடம் பகுதியை சேர்ந்த 13 வயதுச் சிறுமியின் பெற்றோர் திருமண நிகழ்வொன்றுக்கு கொழும்புக்குச் சென்றமையால் சிறுமியை தாவடி பத்திரகாளியம்மன் ஆலயத்துக்கு...

பிரதமர் வேட்பாளர் பதவியை கேட்டு வாங்கமாட்டேன்! – மஹிந்த கூறுகின்றார்

பிரதமர் வேட்பாளர் பதவி உட்பட எதையும் தான் கேட்டுப்பெறப்போவதில்லை என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார். அத்துடன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் நடத்தப்பட்ட பேச்சு வெற்றியா அல்லது தோல்வியா என தற்போது கூறமுடியாது எனவும், மேலும் பேச்சுகள் நடத்தப்பட்ட பின்னரே அது பற்றிக் கூற முடியும் எனவும் அவர் கூறியுள்ளார். நேற்று முன்தினம் புதன்கிழமை...

சம்பூரில் 818 ஏக்கர் காணி விடுவிப்பு! வர்த்தமானி அறிவித்தலில் கையெழுத்திட்டார் ஜனாதிபதி!!

திருகோணமலை மாவட்டத்தில் சம்பூர் பகுதியில் முதலீட்டு வலயத்துக்காக சுவீகரிக்கப்பட்ட பொதுமக்களின் 818 ஏக்கர் காணி மீளக் கையளிக்கப்படவுள்ளது. இதற்கான வர்த்தமானி அறிவித்தலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று வியாழக்கிழமை கையெழுத்திட்டார் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். சம்பூர் மக்கள் தமது காணிகளை நாளை வெள்ளிக்கிழமை முதல் பார்வையிட முடியும் என்றும்...

எரிபொருள் விலையை உயர்த்த அனுமதிக்க மாட்டோம்

எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட மாட்டாது என நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். கடந்த அரசாங்கத்தின் ஹெட்ஜின் மோசடியினாலும் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் நட்டமடைந்துள்ளது. அவ்வாறு இல்லையெனில் எரிபொருள் விலையை மேலும் குறைத்திருக்க முடியும். எனினும் எரிபொருளின் விலைகளை குறைப்பதற்கு அனுமதிக்கப்பட மாட்டாது. திறைசேரி பிணைப்பத்திர விநியோகம் தொடர்பில் பாராளுமன்றில் சமர்ப்பித்த யோசனைத் திட்டத்தை எதிர்க்கட்சிகள் தோற்கடித்தன....

ஊழியர் சேமலாப நிதி மிகுதியை உடன் பார்க்கலாம்

ஊழியர் சேமலாப நிதி (ஊ.சே.நி) பெறும் அங்கத்தவர்கள், அவர்களது கணக்கு மிகுதியை தொழில் செயலகத்தில் புதிதாக பொருத்தப்பட்டுள்ள தன்னியக்க இயந்திரத்தில் சரிபார்த்துக்கொள்ள முடியும் என்று தொழில்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இதன்மூலம், சேமலாப நிதி பெறும் சுமார் 2.5 மில்லியன் தொழிலாளர்கள் அவர்களது கணக்கு மீதியை எந்தவொரு நேரத்திலும் சரிபார்த்துக்கொள்ள முடியும். தொழில் தருநர், அவருக்கு கீழ்...

20ஆம் திகதி வரை பஸிலுக்கு விளக்கமறியல் நீடிப்பு!

நிதி மோசடிக் குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பஸில் ராஜபக்‌ஷவுக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. பஸில் உள்ளிட்ட சந்தேக நபர்கள் மூவரையும் எதிர்வரும் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கடுவல நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கல்வியியற் கல்லூரிகளுக்கு மாணவர்களை இணைத்தல்

2015ஆம் ஆண்டுக்கு தேசிய கல்வியியற் கல்லூரிக்கு மாணவர்களை இணைத்துக்கொள்வதற்கான வர்த்தமானி அறிவித்தல் நாளை (08) அரச வர்த்தமானியில் வெளியிடப்படவுள்ளது என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. அதற்கமைய எதிர்வரும் மே 25ஆம் திகதி வரை விண்ணப்பங்களை அனுப்பி வைக்க முடியும்.
Loading posts...

All posts loaded

No more posts