- Thursday
- July 10th, 2025

மஹிந்த ராஷபக்ஷவிற்கு அம்பாந்தோட்டையில் இருந்து வந்து குருநாகலில் போட்டியிட முடியுமாயின், வல்வெட்டித்துறையில் இருந்து வந்து என்னால் மட்டும் ஏன் குருநாகலில் போட்டி இட முடியாது என வடமாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் கேள்வி எழுப்பியுள்ளார். வேட்புமனுத் தாக்கல் செய்த பின்னர் இனவாதத்தை தூண்டுவதற்காகவா குருநாகலில் போட்டியிடுகின்றீர்கள் என சிங்கள ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு தான் இவ்வாறு பதிலுக்கு...

உதயன் பத்திரிகைக்கு எதிரான வழக்கில் சாட்சியமளித்த ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செலாளர் டக்ளஸ் தேவானந்தா குறுக்கு விசாரணையில் ஒரு வினாவிற்குக் கூட என்னால் பதிலளிக்க முடியாது என நீதிமன்றிற்கு நேரடியாக தெரிவித்த சம்பவம் ஒன்று நேற்று இடம்பெற்றது. கடந்த 29.04.2012 ஆம் ஆண்டு விக்கிலீக்ஸ்ஸை ஆதாரம்காட்டி 2006 தொடக்கம் 2008 ஆம் ஆண்டு வரையான...

யாழ். நீதிமன்றக் கட்டடத் தொகுதி தாக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் எனக் கைதுசெய்யப்பட்ட பாடசாலை மாணவர் ஒருவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதோடு, 30 சந்தேகநபர்களின் விளக்கமறியலை நீடிக்குமாறும், யாழ். நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. யாழ். நீதிமன்றக் கட்டடத் தொகுதி தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக கைதான 31 சந்தேகநபர்கள், நேற்று யாழ். நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதன்போது, பாடசாலை மாணவர்...

இலங்கைத் தமிழரசுக்கட்சி தேசியப்பட்டியல் விபரம்.. 01. திரு.சி.க.சிற்றம்பலம் 02. திரு.சொலமன் சிறில் 03. திரு.மயில்வாகனம் தேவராஜ் 04. திரு.சூ.செ.குலநாயகம் 05. திரு.வி.கனகநமநாதன் 06. திரு.அ.குணபாலசிங்கம் 07. திருமதி.நாச்சியார் செல்வநாயகம் 08. திரு.அந்தோனிப்பிள்ளை மேரியம்மா 09. திருமதி.மேரிகமலா குணசீலன்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேர்தல் செயற்பாட்டுக் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார் என, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்த்தன குறிப்பிட்டுள்ளார். கூட்டமைப்பின் தேர்தல் செயற்பாட்டுக் குழுவின் விஷேட சந்திப்பு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் முற்பகல் ஆரம்பமானது. இதன்போதே இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் ஜனநாயகப் போராளிகள் கட்சி புலிமுகச் சிலந்தியைத் தமது சின்னமாகத் தெரிவு செய்திருப்பதாக, அதன் தலைமை வேட்பாளர் ந.வித்தியாதரன் தெரிவித்துள்ளார். ஜனநாயகப் போராளிகள் கட்சி யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் 10 வேட்பாளர்களை இந்த தேர்தலில் சுயேச்சைக் குழுவொன்றில் நிறுத்தியிருக்கிறது. யாழ். மாவட்டச் செயலகத்தில் சுயேச்சைக் குழுக்களுக்கு பல்வேறு சின்னங்கள் ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், இந்த...

யாழ். மாவட்டத்தில் போதைக் கலாசாரத்துக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கான செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு மூன்று பொலிஸ் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக யாழ். பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உதயகுமார வூட்லர், செவ்வாய்க்கிழமை (14) தெரிவித்தார். வடக்கில் போதைப்பொருள் பாவனையை ஒழிக்கும் வேலைத்திட்டம் தொடர்பாக கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ். மாவட்டத்தில் போதைப்பொருள் பாவனையை முற்றாக ஒழிப்பதற்கான...

நாம் கடந்த 5 வருடங்களாக என்ன செய்தோம் என்று கேட்பவர்கள் உண்டு. தமிழர் தாயகத்தில் பல்வேறு பட்ட பிரச்சனைகளுக்கு போராட்ட களத்தினை திறந்து வைத்தவர்கள் நாமே. முல்லைத்தீவு கேப்பாபிலவில் முழுக் கிராமம் பறி போன போது தமிழரின் ஏக பிரதிநிதிகள் தாமே என்று சொல்லிக் கொண்டோர் மௌனமாக இருந்தனர். நாமே அம்மக்களை ஒன்றிணைத்து போராட்டம் நடத்தினோம்...

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உரைக்கு ஓகஸ்ட் 17ஆம் திகதி பதில் கிடைக்கும் என்று முன்னாள் ஜனாதிபதியும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் குருநாகல் மாவட்ட வேட்பாளருமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் பங்காளிகள் கட்சிகளின் கூட்டம் கொழும்பில் தற்போது ஆரம்பமானது. அக்கூட்டத்துக்கு வருகைதந்தபோது அங்கு குழுமியிந்த ஊடகவியலாளர்கள் எழுப்பிய...

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுவின் அவசரக் கூட்டத்தை, சிறிலங்கா அதிபரும், சுதந்திரக் கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன ரத்துச் செய்து உத்தரவிட்டுள்ளார். மகிந்த ராஜபக்சவுக்கு எதிரான தனது நிலைப்பாட்டை அதிபர் மைத்திரிபால சிறிசேன வெளியிட்டதையடுத்து, குழப்பமடைந்த, மகிந்த ராஜபக்ச தரப்பு சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலர் அனுர பிரியதர்சன யாப்பாவைப் பயன்படுத்தி இன்று கட்சியின் மத்திய...

தனக்குத் தேசியப்பட்டியலில் இடமளிப்பதாக வாக்குறுதி அளித்து ஏமாற்றிவிட்டதாக விசனமும், அதிர்ச்சியும் வெளியிட்டுள்ளார், முன்னாள் பிரதி அமைச்சர் கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன். ”தேசியப்பட்டியலின் ஊடாக நாடாளுமன்றத்துக்கு அனுப்பி வைப்பதாக சுசில் பிரேம் ஜெயந்தவும், அனுர பிரியதர்சன யாப்பாவும் எனக்கு வாக்குறுதி அளித்திருந்தனர். ஆனால் கடைசியில் எனது பெயர் தேசியப்பட்டியலில் உள்ளடக்கப்படாதது வருந்தத்தக்கது. இந்தச் சூழலில், இதுபற்றி...

யாழ்ப்பாணம் மட்டுமல்ல இலங்கை முழுவதும் வேலை இல்லாத இளைஞர், யுவதிகளின் எண்ணிக்கை என்றுமில்லாதவாறு அதிகரித்து வருகின்றது. இதன் காரணமாக இளைய சமுதாயத்தினர் மத்தியில் குற்றச் செயல்கள் அதிகரித்து வருவதாக கூறுகிறது பொலிஸ் குற்றப் பிரிவின் அறிக்கை ஒன்று. படித்துப் பட்டம் பெற்ற இளைஞர், யுவதிகளுக்கு வேலை வாய்ப்பை உரிய முறையில் பெற்றுக் கொடுக்க பதவியில் உள்ள...

எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு வெற்றியீட்டினாலும் மஹிந்த ராஜபக்ஸவிற்கு பிரதமர் பதவி வழங்கப்படாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திட்டவட்டமாக அறிவித்துள்ளார். நாட்டு மக்களுக்கும் ஊடகங்களுக்கும் ஜனாதிபதி செயலகத்தில் நேற்று மாலை ஆற்றிய விசேட உரையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். நாட்டுத் தலைவர்கள் பொதுவாக விசேட உரைகளை ஆற்றும் போது அவற்றை...

இலங்கையில் தமிழ் மக்கள் அடுத்த 15 வருடங்களில் 2ம் நிலை சிறுபான்மை இனமாக மாற்றப்படும் அபாயம் உள்ளதாக சமுதாய மருத்துவ நிபுணரும் தற்போதைய யாழ்.மருத்துவர் சங்கத்தின் தலைவருமாகிய முரளி வல்லிபுரநாதன் தெரிவித்துள்ளார். 2012ம் ஆண்டு 11.2 வீதமாக இருந்த தமிழர்கள் 2031ம் ஆண்டில் 10.3 வீதமாக மாறும் அபாயத்தை ஆய்வுகள் குறிப்பிடுவதாகவும் அவர் கூறியுள்ளார். ஜுலை...

எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அல்லது அவர்களது ஆதரவாளர்கள் சட்டத்தை மீறும் நடவடிக்கைகளில் ஈடுபட்டால், பொதுமக்களுக்கு தகவல்களை வழங்க முடியும் என பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. இது குறித்த முறைப்பாடுகளை தொலைபேசி அல்லது மின்னஞ்சல் மூலம் அறிவிக்க முடியும் என, பொலிஸ் தலைமையகத்தால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. வேட்புமனு வழங்கிய தினத்தில் இருந்து தேர்தல்...

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.தேர்தல் மாவட்டத்திற்கான முதலாவது பிரசாரக் கூட்டம் அதன் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையில் எதிர்வரும் 25ஆம் திகதி உடுவிலில் நடைபெறவுள்ளது. இது தொடர்பில் தமிழரசுக் கட்சியின் தலைவரும் யாழ். மாவட்ட முதன்மை வேட்பாளருமான மாவை. சேனாதிராஜா தெரிவிக்கையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது தேர்தல் செயற்பாடுகளை விரைவாக ஆரம்பிக்கவுள்ளது. இரண்டு வார...

"பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவால் தற்போது வடக்கில் பாதுகாப்பற்ற நிலைமை உருவாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அவரை மீண்டும் பிரதமராக்கினால் 2009ஆம் ஆண்டு வென்றெடுக்கப்பட்ட சமாதானம் இல்லாதொழிக்கப்படும். மேற்குலக நாடுகளின் காலனித்துவ நாடாக இலங்கை மாறும்." - இவ்வாறு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கொழும்பு மாவட்ட வேட்பாளர் விமல் வீரவன்ஸ எச்சரிக்கை விடுத்தார். இந்த ஆபத்திலிருந்து நாட்டைக் காப்பற்ற...

வடக்கு மாகாண சிக்கனக்கடன் கூட்டுறவுச் சங்கங்களின் அங்கத்தவர்களுக்கு ஐக்கிய இராச்சியத்தின் மான்செஸ்டர் கூட்டுறவுக் கல்லூரியினால் பயிற்சிப் பட்டறையொன்று நேற்று செவ்வாய்க்கிழமை (14.07.2015) யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நான்கு நாட்கள் நடைபெறவுள்ள இப்பயிற்சிப் பட்டறையை வடமாகாண கூட்டுறவு அமைச்சர் பொ.ஐங்கரநேசன் ஆரம்பித்து வைத்துள்ளார். வடக்கு கூட்டுறவுத்துறையின் அபிவிருத்தியை மேம்படுத்தும் வகையில் நூறு நாள் வேலைத்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகிறது....

இராஜ அணிகலத்தின் மறுவடிவமைப்பு குறித்த அதிகாரபூர்வமான அறிவிப்பு. யாழ்ப்பாணத்து அரச குடும்பத்தின் இராஜ அணிகலமானது 24 ஜூன் 2015 இன்று வெளியிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாண அரசர்களான ஆரியச் சக்கரவர்த்திகளின் இராஜ அணிகலமானது 13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகும். இவ் இராஜ அணிகலமானது 2005 ஆம் ஆண்டு மறுபடியும் மீளமைப்பு செய்யப்பட்டது. 2015 ஆம் ஆண்டு இராஜ அணிகலமானது அதன்...

தேர்தல் வேட்பாளர்களது போஸ்டர்களை அரச பேருந்தில் ஒட்டுவது தேர்தல் சட்டத்திற்கு முரணானது எனவே எதிர்காலத்தில் அவ்வாறான செயற்பாட்டில் ஈடுபடும் பேருந்துகளின் சாரதி, நடத்துநருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என யாழ். பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி யு.கே. வூட்லர் தெரிவித்துள்ளார். இ.போ.ச சாரதிகள் மற்றும் நடத்துநர்களுக்கு யாழ். பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி வூட்லருக்கும் இடையில் யாழ்.பிரதான...

All posts loaded
No more posts