- Friday
- May 15th, 2026
தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம். சுமந்திரன் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமாச் செய்து விட்டு அரசியல் பயிற்சி பெறுவதற்குச் சென்று வர வேண்டுமெனத் தமிழர் விடுதலைக் கூட்டணியின் பொதுச் செயலாளார் வீ.ஆனந்தசங்கரி நேற்றுத் திங்கட்கிழமை தெரிவித்தார். யாழ்ப்பாணம் நாச்சிமார் கோவில் பகுதியில் அமைந்துள்ள தமிழர் விடுதலைக் கூட்டணி அலுவலகத்தில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அச்சந்திப்பின்...
நீண்ட காலமாக பல்வேறு துன்பங்களுக்கு முகங் கொடுக்கும் தமிழ் மக்களுக்கு மிக விரைவில் விடிவு ஏற்பட வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். தீபாவளி வாழ்த்துச் செய்திக் குறிப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, 'மிகவும் குதூகலமாக தீபாவளிப் பண்டிகையை கொண்டாடும் அனைவருக்கும் எமது இனிய தீபாவளி...
அரசியல் கைதிகளின் விடுதலைக்காக 13ஆம் திகதி வடக்கு, கிழக்கில் பூரண ஹர்த்தால் : கூட்டமைப்பும் அழைப்பு?
சிறைச்சாலைகளில் போராடும் அரசியல் கைதிகள் விடுதலைபெற வேண்டும், நீதி நிலை நாட்டப்பட வேண்டும் என்பதே எமது இலக்கு என்று தெரிவித்துள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா, கைதிகளின் விடுதலைக்காக எதிர்வரும் 13ஆம் திகதி வடக்கு, கிழக்கில் பொது வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு கூட்டமைப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டு...
யாழ்ப்பாண பல்கலைகழக 1ஆம் வருட மாணவனை அடித்து துன்புறுத்திய இரு மாணவர்களை, எதிர்வரும் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்ற நீதவான் பொ.சிவகுமார், திங்கட்கிழமை (09) உத்தரவிட்டார். துன்புறுத்தலுக்கு உள்ளான 21 வயதுடைய மாணவன், யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார். குறித்த மாணவனை 3 ஆம் வருட மாணவர்கள்,...
சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் மீண்டும் உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். நேற்று முதல் இவர்கள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் ஜெனரல் ரோஹன புஷ்பகுமார தெரிவித்தார். கடந்த தினங்களில் தம்மை பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்யக்கோரி சிறைச்சாலைகளில் தமிழ் அரசியல் கைதிகள் உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர். இந்நிலையில் இதுதொடர்பாக உரிய அதிகாரிகளுடன் முன்னெடுக்கப்பட்ட...
வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனை கட்சியில் இருந்து நீக்க கோரும் அதிகாரம் எம். ஏ சுமந்திரனுக்கு இல்லை என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்தார். வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரனை கட்சியிலிருந்து நீக்க வேண்டும் என்று எம். ஏ. சுமந்திரன் தெரிவித்திருந்தார். இது தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின்...
ஈழத்தின் மூத்த எழுத்தாளர் சி. சிவசரவணபவன் (சிற்பி) அவர்கள் இன்று (09-11-2015) காலமானார் . அன்னாரின் இறுதிக் கிரியைகள் நாளை (10-11-2015) செவ்வாய்க் கிழமை மாலை 5.00 மணியளவில் கந்தரோடையில் நடை பெற்றுத் தகனக் கிரியை கந்தரோடை இந்து மயானத்தில் நடை பெறும். 1933ல் காரைநகரில் பிறந்த இவர் ஓய்வு பெற்ற பாடசாலை அதிபர் ஆவார்.உசன்...
அச்சுவேலி அரச சான்று பெற்ற பாடசாலையில் மகளிர் விவகார அமைச்சின் 10 மில்லியன் ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட பெண்கள் பாதுகாப்புக் கட்டடம் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனால் திங்கட்கிழமை (09) திறந்து வைக்கப்பட்டது. கடந்த 2014ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 1ஆம் திகதி அடிக்கல் நாட்டப்பட்டு, ஆரம்பிக்கப்பட்ட இந்தக் கட்டடத்தில், 11 அறைகள், மருத்துவ அறை, தொழிற்பயிற்சி...
யாழ்ப்பாணத்தில் கடுமையான காற்று வீசி வருவதால், தீவகம் கல்வி வலயத்துக்குட்பட்ட வேலணை தெற்கு ஐயனார் வித்தியாலயத்தின் கற்றல் செயற்பாடுகள் இன்று திங்கட்கிழமை (09) காலை 10 மணியுடன் இடைநிறுத்தப்பட்டு, மாணவர்கள் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். கடும் காற்றுக்காரணமாக பாடசாலையின் கூரைகள் தூக்கி எறியப்படும் நிலையில் இருந்தமையால் மாணவர்களால் கற்றல் நடவடிக்கைகளில் ஈடுபட முடிவில்லை என்றும் இதனாலேயே...
ஊடகங்கள் வாயிலாக தனக்கு தொடர்ந்து சேறு பூசுவதாகவும், தன்மீது சேறு பூசிக் கொள்ள தனக்கு விருப்பமில்லை என்பதனால் அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்ய தீர்மானித்ததாகவும் முன்னாள் சட்டம், ஒழுங்கு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் திலக் மாரப்பன தெரிவித்துள்ளார். எவன் கார்ட் நிறுவனத்தின் சர்ச்சைக்குறிய ஆயுதக் கப்பலில் இருந்து நாளொன்றுக்கு சுமார் 30 தடவையாவது ஆயுதங்கள்...
கடந்த காலப்பகுதியில் ஸ்ரீலங்கா அரசினால் கைது செய்யப்பட் பல நூற்றுக் கணக்கான தமிழர்கள் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். யுத்தம் முடிந்து ஆறு ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும் அவர்கள் விடுதலை செய்யப்படாது தொடர்ந்தும் சிறைகளில் வாடுகின்றனர். அவர்கள் தமது விடுதலையை வலியுறுத்தி கடந்த மாதம் சாகும் வரையான உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டபோது அவர்களது...
இணுவில் கந்தசுவாமி ஆலய வளாகத்தில் வசித்து வந்த முதியவர் ஒருவரின் இறுதிக்கிரியைகளை, அந்த பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர்கள் ஒன்று சேர்ந்து நேற்று ஞாயிற்றுக்கிழமை (08) நடத்தியுள்ளனர். புலோலியூரைச் சேர்ந்த மேற்படி முதியவர், கடந்த 20 வருடங்களாக இணுவில் கந்தசுவாமி ஆலயத்தில் வசித்து வந்துள்ளார். அந்தப் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் அவரை, அடியவர் என புனைப்பெயர் கொண்டு...
எங்களுடைய பிரச்சினைகள் மற்றும் தேவைகள் தொடர்பில் அரசாங்கம் அக்கறையுடன் செயற்பட்டு நடந்துகொண்டாலே உண்மையான நல்லிணக்கம் ஏற்படும் என தென்னாபிரிக்க அரசாங்க பிரதிநிதிகள் மற்றும் தொண்டர் நிறுவனங்களுக்கு தெரிவித்ததாக வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்தார். வடமாகாண சபை உறுப்பினர்களான அனந்தி சசிதரன், எம்.கே.சிவாஜிலிங்கம் மற்றும் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் ஆகியோர் தென்னாபிரிக்க...
வடமாகாண அமைச்சர்களை மாற்றுதல் மற்றும் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரை நீக்குதல் ஆகிய விடயங்கள் தற்போது அதிகமாகப் பேசப்பட்டு வருகின்றன. இந்த இரண்டு விடயங்களிலும் நான் தலையீட்டை மேற்கொள்ளாமல் நடுநிலையாகச் செயற்படுவேன் என வடமாகாண சபை அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தமிழ்மிரருக்குத் தெரிவித்தார். வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை நீக்குமாறு கட்சியிடம் கோரியிருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், அவுஸ்திரேலியாவில் வைத்துக்...
தனது பதவியை இராஜினாமா செய்துகொண்டுள்ளதாக சட்டமும் ஒழுங்கும் மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் திலக் மாரப்பன, அனுப்பிவைத்துள்ள இராஜினாமா கடிதம் கிடைத்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார். ஜனாதிபதி தலைமையில் தற்போது நடைபெற்று கொண்டிருக்கின்ற விசேட அமைச்சரவைக் கூட்டத்திலேயே அவர் மேற்கண்டவாறு அறிவித்துள்ளார்.
படகின் இயந்திரம் பழுதடைந்த நிலையில் இந்திய மீனவர்கள் 04 பேர் இன்று திங்கட்கிழமை அதிகாலை மாதகல், வலித்தூண்டல் கடற்கரையில் கரையொதுங்கியதாக பொலிஸார் தெரிவித்தனர். இராமநாதபுரம், கோலியக்கரையைச் சேர்ந்தவர்களான குஞ்சப்பன் பாலசுப்பிரமணியம் (வயது 60), கணேசன் இராஜகண்ணா (வயது 55), மணிவண்ணன் வீரமணி (வயது 30), பழனித்துரை செல்வன் (வயது 28) ஆகியோரே கரையொதுங்கினர். இவர்களின் மீன்பிடி...
சட்டம், ஒழுங்கு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் திலக் மாரப்பன தனது அமைச்சு பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளார். இவர் தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அனுப்பி வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
யாழ். மாவட்டத்தில் கடந்த காலங்களை விட இந்த வருடம் சிறுவர்கள் மத்தியில் தொழுநோய்த் தொற்றின் தாக்கம் அதிகரித்துள்ளதாக யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் தொற்றுநோய்ப் பிரிவு எச்சரித்துள்ளது. யாழ்.மாவட்டத்தில் கடந்த 5 வருடங்களுடன் ஒப்பிடுகையில் இந்த வருடம் தொழு நோய்த் தொற்று அதிகரித்து காணப்படுகின்றது. அதிலும் 15 வயதிற்கு உட்பட்ட சிறுவர்களே அதிகமாக இந்த...
யாழ்.மாவட்டத்தில் வாகனங்களுக்கு புகைப்பரிசோதனை மேற்கொள்ள வருபவர்கள் முக்கிய ஆவணங்களை கொண்டு வருவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதென்பதுடன் அவ்வாறு கொண்டுவரத் தவறும் பட்சத்தில் புகைப்பரிசோதனை மேற்கொள்ளப்படமாட்டாது என யாழ்.மாவட்டச் செயலகத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் புகைப்பரிசோதனையின் போது மூலப் பதிவுச் சான்றிதழ் (Original Certificate of Registration) அல்லது வாகன அடையாள அட்டை மூலப்பிரதி (Original Vehicle Identy Card) இனை...
மலரும் தீபாவளி திருநாளில் வடகிழக்கு மக்களின் வாழ்வில் இருக்கும் துன்ப துயரங்கள் மறைந்து நல்வாழ்வு மலரட்டும் என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தனது தீபாவளி நல்வாழத்துக்களை தெரிவித்துள்ளார். இருள் நீங்கி ஒளி சேரும் ஒரு நாள். பழையன கழிதலும், புதியன வருதலும் பழைய இருளடைந்த வாழ்க்கை நீக்கப்பட்டு, புதியதொரு ஒளி மிகுந்த வாழ்க்கையை வரவேற்பதே தீபாவளியின்...
Loading posts...
All posts loaded
No more posts
