அரசியல் கைதிகளை விடுதலை செய்யக் கோரி ஹர்த்தாலுக்கு அழைப்பு!

விடுதலை கோரி சிறைச்சாலைகளில் மீண்டும் உண்ணாவிரதம் இருந்துவரும் தமிழ் அரசியல் கைதிகளின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தும், தமிழ் அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்யக்கோரியும் வவுனியாவில் 13ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஹர்த்தால் (பொதுவேலைநிறுத்தம்) நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் சகல வர்த்தக நிலையங்களையும், வங்கி உட்பட அரச மற்றும் தனியார் அலுவலகங்களையும் மூடி இந்த ஹர்த்தாலுக்கு...

சுமந்திரனுக்கு எதிராக ஆஸ்திரேலியாவில் ஆர்ப்பாட்டம்!

ஆஸ்திரேலியாவுக்கு விஜயம் செய்துள்ள தமிழ்த் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டதுடன் கடுமையான வாய்த்தர்க்கம் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. ஆஸ்ரேலியாவின் சிட்னி நகரத்தில் உள்ள மண்டபம் ஒன்றில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனுடைய அரசியல் செயற்பாடுகள் தமிழ் மக்களின் தேசிய உணர்வைக் கொச்சைப்படுத்தும்...
Ad Widget

வடக்கு, கிழக்கு மீனவர்களை கடலுக்குச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை!

வடக்கு, கிழக்குக் கடல் பகுதிகளில் கடும் கடல் கொந்தளிப்பு அபாயம் நீடிப்பதால் மீனவர்களை கடலுக்குச் செல்லவேண்டாம் என திருநெல்வேலி வானிலை அவதானிப்பு நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. யாழ்ப்பாணத்தில் இருந்து வடகிழக்குத் திசையில் 300 கிலோமீற்றருக்கு அப்பால் மணிக்கு 300 கிலோமீற்றர் வேகத்தில் தாழமுக்கம் மையங்கொண்டுள்ளது. இதனால் கடும் காற்று வீசுவதுடன் மிகக் கொந்தளிப்பான கடலும் காணப்படும்....

வடக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரனை கட்சியிலிருந்து நீக்குமாறு சுமந்திரன் வேண்டுகோள்!

வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை கட்சியிலிருந்து நீக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தமது கட்சியிடம் கேட்டிருக்கின்றார். ஆஸ்திரேலியா சென்றிருக்கும் அவர் அந்நாட்டு வானொலி ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில் - முதலமைச்சர் விக்னேஸ்வரனை இந்தப் பொறுப்புக்கு அழைத்து வந்தவர்களில் நானும் முக்கியமான ஒருவன். அவருக்கு வடமாகாண சபையை நிர்வகின்ற பொறுப்பை கட்சி...

ஐநா விசேட குழு இன்று இலங்கை வருகிறது!

காணாமல் போனவர்கள் தொடர்பில் இலங்கை அரசு முன்னெடுக்கும் நடவடிக்கைகள் தொடர்பில் ஆராய்வதற்கு ஐநா விசேட குழுவொன்று இன்று (09) இலங்கை வரவுள்ளது. எதிர்வரும் 18ஆம் திகதி வரை ஒரு வார காலத்திற்கு தங்கியிருக்கும் இக்குழு காணாமல் போனவர்கள் தொடர்பில் அரசு மேற்கொண்டுள்ள செயற்பாடுகள் தொடர்பில் விரிவாக ஆராய்ந்து எதிர்வரும 2016ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதமளவில் ஐநா...

வடக்கு அமைச்சர்கள் சிலரை மாற்றுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதா?

வடமாகாண அமைச்சர்கள் நால்வரை மாற்றுவது குறித்து தன்னிடம் எந்தவித கோரிக்கைகளும் விடுக்கப்படவில்லை என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். நேற்று ஞாயிற்றுக்கிழமை முதலமைச்சரின் வாசஸ்தலத்தில் இடம்பெற்ற ஊடகவிலயாளர் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். வடமாகாண அமைச்சர்கள் சிலரை மாற்றுமாறு சிலர் கோரிக்கைகள் விடுத்திருப்பது உண்மை. ஆனால், நேரடியாக தன்னிடம் எந்தவிதமான...

சூறாவளி ஏற்படும் அபாயம் !!: வளிமண்டலவியல் ஆராய்ச்சித் திணைக்களம் எச்சரிக்கை!!

இலங்கையின் கிழக்காக வங்காள விரிகுடாப் பகுதியில் உருவாகியிருந்த தாழமுக்க வலயமானது ((Low Pressure area)) நேற்றய தினம் திருகோணமலையிலிருந்து கிழக்காக 350 கிலோமீற்றர் தூரத்தில் காணப்பட்டது. தற்போது அது தாழமுக்கமாக ((Low Pressure area)) வலுவடைந்து இன்றய தினமும் (2015.11.08) யாழ்ப்பாணத்திலிருந்து கிழக்காக 250 கிலோமீற்றர் காணப்படுகிறது. இதனால் இலங்கைத்தீவின் கிழக்கு மற்றும் வடக்குப் பிராந்தியங்களில்...

ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணை யாழில் 6 நாட்களுக்கு நடைபெறும்

காணாமற் போனோர் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகள் எதிர்வரும் டிசெம்பர் மாதம் 11 ஆம் திகதியில் இருந்து 16 ஆம் திகதி வரை யாழ். மாவட்டத்தில் நடைபெறும் என யாழ். மாவட்ட அரச அதிபர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார் யாழ். மாவட்டச்செயலர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பாக...

மர்மப்பொருள் விழும் நாளில் விமானங்கள் பறக்க, மீன்பிடிக்கத் தடை?

விண்வெளியில் இருந்து WT 1190F எனப் பெயரிடப்பட்டுள்ள மர்மப்பொருள், எதிர்வரும் 13ஆம் திகதி வெள்ளிக்கிழமை விழும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இலங்கையின் தென்பகுதிக் கடலில், மீன்பிடிக்கவும், விமானங்கள் பறக்கவும் தடை விதிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விண்கலம் ஒன்றின் பாகமாக இருக்கலாம் என்று கருதப்படும், 2 மீற்றர் நீளமான – WT 1190F எனப் பெயரிடப்பட்டுள்ள மர்மப்பொருள், எதிர்வரும்...

வேண்டத்தகாத செயல்கள் அச்சத்தை ஏற்படுத்துகின்றன – முதலமைச்சர் சி.வி

வடமாகாணத்திலுள்ள பாடசாலைகளில் தற்போது வேண்டத்தகாத பல செயல்கள் வேகமாகப் பரவி வருவது, அச்சத்தையும் மன வேதனையையும் தருகின்றது. போதை பொருள் பாவனை, சிறுவர் துஷ்பிரயோகம், வேண்டத்தகாத இணைய பக்கங்களில் நுழைந்து உணர்வுகளைத் தூண்டக் கூடிய காட்சிகளைப் பார்வையிடல் போன்ற செயற்பாடுகளில் ஈடுபடுவதால் மாணவ சமுதாயம், படிப்பில் அக்கறையின்றி புலனுணர்வு சார்ந்த விடயங்களில் பொழுதைக் கழித்து கல்வியை...

மாதுலுவாவே சோபித்த தேரர் காலமானார் : வியாழன்று தேசிய துக்கதினம்

மறைந்த சமூக நீதிக்கான மக்கள் இயக்கத்தின் தலைவர் மாதுலுவாவே சோபித்த தேரரின் இறுதி கிரியை நடைபெறும் எதிர்வரும் 12ஆம் திகதி வியாழக்கிழமை தேசிய துக்க தினமாக அரசாங்கம் பிரகடனப்படுத்தியுள்ளது. அன்னாரது இறுதி கிரியை பூரண அரச மரியாதையுடன் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள மைதானத்தில் எதிர்வரும் 12 ஆம் திகதி வியாழக்கிழமை மாலை 3 மணிக்கு இடம்...

ஈழத் தமிழ் மக்களையும், ஈழ மண்ணையும் ஆழமாக நேசித்த அன்புத் தாய் மாரியம்மாள்

வைகோ அவர்களின் தாயாரின் மறைவிற்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிவெளியிட்டுள்ள இரங்கல் செய்தி வருமாறு ஈழத் தமிழ் மக்களின் அன்புக்கும் பெருமதிப்பிற்கும் உரிய அண்ணன் வை.கோபால்சாமி அவர்களின் அன்புத் தாயார் மாரியம்மாள் அவர்களின் மறைவுச் செய்தி கேட்டு ஆழ்ந்த கவலையடைகின்றோம். கடந்த மூன்றரை தசாப்தங்களாக ஈழத் தமிழ் மக்கள் மேற்கொண்டுவந்த உரிமைப் போராட்டம் வெற்றி பெற...

யாழ் நகரில் நாக விகாரையில் ”கட்டின” பூஜையும் பெரகரவும்!

பொம்மைவெளி காக்கை வெளிப்பிரதேசத்தில் குடியிருப்புக்கள் வெள்ளத்தில்!

நாவாந்துறை பொம்மைவெளி காக்கை வெளிப்பிரதேசத்தில் சரியான வடிகாலமைப்பு வசதிகள் இன்றி குடியிருப்புக்கள் வெள்ளத்தினால் பாதிக்கபட்டுள்ளன. நகரில் இருந்து ஒரு கிலோமீற்றருக்குள் மக்கள் தண்ணீரால் அவதிப்படும் காட்சி வருத்தமளிப்பதாக சமூக வலைத்தளத்தில் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகி்றது . யாழ்ப்பாணத்தில் தொடரும் கடும் மழையின் காரணமாக இப்பிரதேசத்தில் வாழும் சிறுவர்கள் குழந்தைகள் சுகாதாரபிரச்சனைகளை எதிர்கொண்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது. இது...

வடக்கின் மரநடுகைத் திட்டத்தில் புலம்பெயர் தமிழர்களும் இணைவு

வடமாகாண மரநடுகை மாதத்தைக் கொண்டாடும் விதமாக, வடக்கின் ஐந்து மாவட்டங்களிலும் பொதுமக்கள் அதிக ஆர்வத்துடன் மரக்கன்றுகளை நாட்டி வரும் நிலையில், இத்திட்டத்தில் இணைந்து கொள்வதில் புலம்பெயர் தமிழர்களும் அக்கறை கொள்ள ஆரம்பித்துள்ளனர். தெல்லிப்பளையில் இருந்து புலம்பெயர்ந்து இலண்டனில் வாழ்ந்துவரும் வைத்திய நிபுணரான சீ.நவரத்தினம் என்பவர் தெல்லிப்பளை வித்தகபுரம் கிராமத்துக்கு ஆயிரம் மரக்கன்றுகளை அன்பளிப்புச் செய்துள்ளார். வித்தகபுரத்தில்...

இளைஞர் நாடாளுமன்றத் தேர்தல் இன்று

மூன்றாவது இளைஞர் நாடாளுமன்றத் தேர்தல் இன்று நாடு முழுவதும் சுமூகமாக இடம்பெற்று வருகின்றது. 225 நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக 160 தொகுதிகளில் 334 பிரதேச செயலகங்களில் வாக்கெடுப்பு இடம்பெற்று வருகின்றது. இதில் சுமார் 5 இலட்சம் இளைஞர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்தனர்.காலையில் ஆரம்பமாகி வாக்கெடுப்பு இன்று மாலை 3 மணி வரை இடம்பெறும் ....

வசீம் தாஜூ கொலையாளி யாழில்!!

பிரபல ரகர் வீரர் வசீம் தாஜூடீனின் உடல் பாகங்களைக் காணவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. தாஜூடீனின் சடலத்தின் சில பாகங்களைக் காணவில்லை என கொழும்பு ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது. வசீம் தாஜூடீனின் சடலம் அண்மையில் மீள தோண்டி எடுக்கப்பட்டு சோதனைக்கு உட்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. முதலாவது பிரேதப் பரிசோதனையின் போது இந்த உடல் பாகங்கள் காணாமல் போயிருக்கலாம் என...

வாக்காளர் இடாப்பு இறுதிச் சந்தர்ப்பம்

2015-ம் ஆண்டு வாக்காளர் இடாப்பிற்கான பெயர்களை உள்வாங்கும் இறுதிக்கட்ட நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளதாக மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.மொஹமட் தெரிவித்துள்ளார். 2015ஆம் ஆண்டு வாக்காளர் இடாப்பிற்கு பெயர் உள்வாங்கப்படாத, வாக்களிக்க தகுதியானவர்கள் இருப்பார்களாயின் அவர்கள் தமது உரிமை கோரிக்கை கடிதத்தை தேர்தல்கள் செயலகத்திற்கு எதிர்வரும் 12ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டார்....

நாகதீபம் என்று பெயர் மாறிய நயினாதீவு!!

நயினாதீவு என்ற தமிழப் பெயரைச் சத்தம் சந்தடியின்றி நாகதீபம் என்று மாற்றி வட்டாரப் பிரிப்பின் போது எல்லை நிர்ணயம் மேற்கொள்ளப்பட்டு வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. இந்தப் பெயரை மீண்டும் நயினாதீவு என மாற்றம் செய்து வர்த்தமானியில் உடனடியாகப் பிரகடனம் செய்ய வேண்டும். இவ்வாறு வடக்கு மாகாண சபை தீர்மானம் ஒன்றை நேற்று முன்தினம் நிறைவேற்றியிருக்கின்றது. வட மாகாணசபையின்...

தமிழ் அரசியல் கைதிகள் 8ம் திகதி முதல் மீண்டும் உண்ணாவிரதம்!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொதுமன்னிப்பில் தங்களை விடுதலை செய்யவேண்டும் எனக் கோரி, நாடு முழுவதிலும் உள்ள 14 சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள 217 தமிழ் அரசியல் கைதிகள் நாளை ஞாயிற்றுக்கிழமை முதல் மீண்டும் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர். "எமது விடுதலை தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கிய வாக்குறுதியை எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்...
Loading posts...

All posts loaded

No more posts