பாடசாலை ஆசிரியர்கள் கைத்தொலைபேசி பயன்படுத்த தடை

ஊவா மாகாணத்தில் உள்ள பாடசாலை ஆசிரியர்கள் பாடசாலை நேரத்தில் கைத்தொலைபேசி பயன்படுத்துவதற்கு தடைசெய்யப்படவுள்ளது. அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் தடை செய்யப்படவுள்ளதாக ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தஸநாயக்க தெரிவிக்கின்றார். அத்துடன் மாணவர்கள் சிலரும் பாடசாலைக்கு கைத்தொலைபேசிகளை எடுத்து வருவதாக அறியக் கிடைத்துள்ளதாகவும், இது தொடர்பில் நடவடிக்ககை எடுக்க பாடசாலை அதிபர்களுக்கு அறிவுறுத்தல்...

தனியார் துறை ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க நடவடிக்கை

தனியார் துறை ஊழியர்களின் சம்பளத்தை 2500 ரூபாவால் அதிகரிப்பதற்கான பிரேரணை ஒன்றை பாராளுமன்றத்தில் முன்வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தொழிலாளர் மற்றும் தொழிற்சங்க உறவுகள் அமைச்சர் டப்ளியூ.டீ.ஜே. செனவிரத்ன தெரிவித்துள்ளார். அத்துடன் தனியார் துறை ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தை 10,000 ரூபாவாக அதிகரிக்க சம்பந்தப்பட்ட தரப்பினருடன் பேச்சுவார்த்தை மேற்கொண்டு வருவதாகவும் குறிப்பிட்டார். நேற்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர்...
Ad Widget

வடக்கிற்கான புகையிரத சேவைகள் பாதிப்பு

புயைிரதம் ஒன்று தடம் புரண்டதால் வடக்கிற்கான புகையிரத சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. தம்புத்தேகம் புகையிரத நிலையத்திற்கு அருகாமையில் புயைிரதம் ஒன்று தடம் புரண்டுள்ளதால் வடக்கிற்கான ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் குறிப்பிட்டுள்ளது.

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தும் பணிப்புறக்கணிப்பு திட்டமிட்டவாறு இடம்பெறும்

அரசியல் கைதிகள் அனைவரதும் விடுதலையை வலியுறுத்தி ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பணிப்புறக்கணிப்பு போராட்டம் வெள்ளிக்கிழமை(13-11-2015) திட்டமிட்டவாறு நடைபெறும் என தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் அறிவித்துள்ளார். அவரது அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது பல நூற்றுக் கணக்கானவர்கள் தசாப்தகாலமாக கொடிய பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் சிறைகளில் வாடும்போது ஒரு சிலருக்கு மட்டும் பிணைவழங்குவதன் மூலம் சர்வதேச சமூகத்தை ஏமாற்றுவதற்கு...

31 தமிழ் அரசியல் கைதிகளுக்கு பிணையில் விடுதலை கிடைத்தது

சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளில் 31 பேர் நீதிமன்றத்தினால் பிணையில் விடுதலை ​செய்யப்பட்டுள்ளனர். கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றினால் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் இவர்கள் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர். சட்டமா அதிபர் திணைக்களத்தினால் அவர்களை பிணையில் விடுதலை செய்வதற்கான அறிவித்தல் கிடைக்கப்பெறவில்லை எனக்கூறி எதிர்வரும் நவம்பர் 24ம் திகதி வரை அவர்களை...

சுவாமிநாதனுக்கும்- சாகலவுக்கும் மாரப்பனவின் அமைச்சுக்கள்

புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம். சுவாமிநாதன், சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்துள்ளார். மேலும் தெற்கு அபிவிருத்தி மற்றும் பிரதமர் காரியாலய பொறுபதிகாரியுமான சாகல ரத்னாயக்க, சட்ட, ஒழுங்கு அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்துள்ளார். இன்று (11) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற இப்பதவியேற்பு நிகழ்வில் ஜனாதிபதியின் முன்னிலையில் இருவரும் பதவிப் பிரமாணம் செய்தனர். நேற்று...

HNDA விவகாரம்; இன்னும் வர்த்தமானி அறிவித்தல் வெளிவரவில்லை

கணக்கியல் உயர் தேசிய டிப்ளோமா (HNDA) பாடநெறி பி.கொம் (B.Com) பட்டத்திற்கு சமனானதாக தரம் உயர்த்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருந்தும், இதுவரை வர்த்தமானி அறிவித்தல் வெளிவரவில்லை என்று அகில இலங்கை மாணவர் ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் லஹிரு வீரசேகர தெரிவிக்கின்றார். அதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கி பல நாட்கள் கடந்து விட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். கொழும்பில் இன்று...

பாடசாலை ஆசிரியைகள் தொப்புள் தெரிய சேலை அணியக்கூடாது! -மேல்மாகாண முதலமைச்சர்

பாடசாலை ஆசிரியைகள்  தொப்புள் தெரிய சேலை அணியக்கூடாது என்ற விதியை கொண்டுவரப்போவதாக    மேல்மாகாண முதலமைச்சர் இசுரு தேவப்பிரிய விடுத்திருந்த அறிக்கை தொடர்பில் இலங்கை ஆசிரியர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. பாடசாலை மாணவிகள் அணியும் நடன ஆடையைக் கூட தொப்புள் தெரிவது போல அணிய அனுமதிக்கப்போவதில்லை என்று  முதலமைச்சர் விடுத்திருந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. தாம் அணியும் ஆடைகள்...

நாகதீபத்தின் பெயரை மாற்ற முடியாது! பைஸர் முஸ்தபா மறுப்பு

யாழ்ப்பாண தீபகற்பத்திற்கு உட்பட்ட நாகதீபம் என்ற தீவின் பெயரை மாற்றுவதற்கு முடியாது என்று உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைஸர் முஸ்தபா தெரிவித்துள்ளார். கடந்த 5ம் திகதி வடமாகண சபை அமர்வின் போது பெயர் மாற்றம் தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் இது குறித்து கருத்து வெளியிடும் போது அமைச்சர் இந்த தகவலை வெளியிட்டார்.

அமரர் நடராஜா ரவிராஜின் நினைவுப் பேருரை

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரர் நடராஜா ரவிராஜின் நினைவுப் பேருரை யாழ்.சாவகச்சேரி நகரசபை பொன்விழா மண்டபத்தில் நேற்று பிற்பகலில் இடம்பெற்றது. இதன்போது அமரர் ரவிராஜின் உருவப் படத்திற்கு தமிழரசுக் கட்சியின் தலைவரும், யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற...

கொட்டும் மழையிலும் களைகட்டும் மலர்க்கண்காட்சி இன்று நிறைவடைகிறது

நல்லூர் சங்கிலியன் பூங்காவில் இடம்பெற்றுவரும் மலர்க்கண்காட்சியை கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது தினமும் ஆயிரக்கணக்கானோர் வந்து பார்வையிட்டுச் செல்வதோடு மரக்கன்றுகளையும் வாங்கிச் செல்கின்றனர். அலங்காரப் பூச்செடிகளை மாத்திரம் அல்லாமல் பழமரக்கன்றுகள், தென்னம் நாற்றுகள், தேக்கு, சமண்டலை போன்ற வெட்டுமரக்கன்றுகள், பூச்சாடிகள் போன்றவற்றை வாங்குவதிலும் பொதுமக்கள் அதிக ஆர்வம்காட்டி வருகின்றனர். கடந்த ஆண்டு மலர்க்கண்காட்சியில் விற்பனையான மரக்கன்றுகளைவிட இந்த...

உண்ணாவிரதக் கைதிகளின் உடல்நலம் பாதிப்பு

தம்மை விடுவிக்குமாறு கோரி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தமிழ் அரசியல் கைதிகளில் மூவரின் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது. இவர்களில் ஒருவர், கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டவர் என்றும் மற்ற இருவரும் பல்லேகல தும்பர சிறைச்சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் என்றும் அறியமுடிகின்றது. தங்களை விடுவிக்குமாறு கோரி இரண்டாவது முறையாக உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ள...

தமிழ் அரசியல் கைதிகளுக்கு பிணை இல்லை!! : விளக்கமறியல் நீடிக்கப்பட்டது

சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளில் 32 சந்தேகநபர்களின் விளக்கமறியல் எதிர்வரும் நவம்பர் 24ம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. சட்டமா அதிபர் திணைக்களத்தினால் அவர்களை பிணையில் விடுதலை செய்வதற்கான அறிவித்தல் கிடைக்கப்பெறவில்லை என்பதனால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 32 தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு கோரிய விண்ணப்பத்தை நீதிமன்றில் இன்று தாக்கல் செய்யுமாறு...

யாழில் விசேட தேவையுடையோருக்கு உபகரணங்கள் வழங்கிய அஜித் ரசிகர்கள்!!

தங்கள் சினிமா கதாநாயகனின் திரைப்படம் வெளியாகும் போது தீபாவளி, புதுவருடக் கொண்டாட்டங்கள் போல, பாலபிஷேசம் செய்து பட்டையக் கிளப்பும் ரசிகர்கள் பட்டாளத்திற்கு நடுவில் தீபாவளித்தி திருநாளன்று வெளியாகிய தங்கள் சினிமா கதாநாயகனின் புதுப்படத்தைக் கொண்டாடப்போன யாழ்ப்பாண அஜித் ரசிகர்கள் திரையரங்கு வாயியில் புதியதோர் தொடக்கத்தை ஆரம்பித்து வைத்திருக்கிறார்கள். யாழ் செல்லா திரையரங்கில் விசேட தேவையுடையோரை அழைத்த...

சுனாமியால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு வீடு ஒதுக்கிக் கொடுக்க உத்தரவு : நீதிபதி இளஞ்செழியன் தீர்ப்பு

சுனாமியால் பாதிக்கப்பட்ட மருதமுனையைச் சேர்ந்த முஸ்லிம் பெண் ஒருவருக்கு மருதமுனை சுனாமி வீடமைப்புத் திட்டத்தில் வீடு ஒன்றை ஒதுக்கிக் கொடுக்குமாறு, அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபருக்கு உத்தரவிட்டு கல்முனை மேல் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. குறித்த பாதிக்கப்பட்ட முஸ்லிம் பெண்மணி தாக்கல் செய்த உறுதிகேள் எழுத்தாணை வழக்கு விசாரணைக்கென பிரதம நீதியரசரால் நியமனம் செய்யப்பட்ட யாழ்ப்பாணம்...

சிறைச்சாலையில் அசௌகரியங்களை எதிர்கொள்கின்றோம் – புங்குடுதீவு மாணவி கொலை சந்தேகநபர்கள்

சிறைச்சாலையில் தாங்கள் அசௌகரியங்களை எதிர்கொள்வதாக புங்குடுதீவு மாணவியின் கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் தெரிவித்தனர். புங்குடுதீவி மாணவி கொலை வழக்கு திங்கட்கிழமை (09) நீதவான் செல்வநாயகம் லெனின்குமார் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்ட போது, சந்தேகநபர்களிடம் ஏதாவது சொல்ல விரும்புகின்றீர்களா என நீதவான் கோரியபோதே, சந்தேகநபர்கள் இவ்வாறு கூறினர். அடுத்த அமர்வில் அது தொடர்பில் கவனம் செலுத்தப்படும்...

பூரண ஹர்த்தாலுக்கு ஒத்துழைக்கவேண்டும் மக்கள்! – டெனிஸ்வரன்

அரசியல் கைதிகளின் விடுதலைக்காக எதிர்வரும் 13ஆம் திகதி வெள்ளிக்கிழமை வடக்கு, கிழக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏற்பாடு செய்துள்ள பூரண ஹர்த்தாலுக்கு மக்களை ஒத்துழைக்குமாறு கோரியுள்ளார் வடக்கு மாகாண அமைச்சர் பா. டெனிஸ்வரன். இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு:- "கடந்த மாதம் தமிழ் அரசியல் கைதிகள் முன்னெடுத்த உண்ணாவிரதப் போராட்டம் ஜனாதிபதியின்...

வடக்கில் கறுப்புத் தீபாவளி அனுஷ்டிப்பு!

தமிழ் மக்கள் நேற்று தீபாவளித் திருநாளை கொண்டாடிய நிலையில், தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி வடக்கு, கிழக்கின் பல இடங்களில் நேற்றய தினம் கரிநாளாக அனுஷ்டிக்கப்பட்டுள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பினரும்,பொது அமைப்புக்களும் நேற்றய தினத்தை கரிநாளாக அனுஷ்டித்துள்ளனர். இலங்கை சிறைகளிலுள்ள தமிழ் அரசியல் கைதிகள் தீபாவளிக்கு முன்னதாக விடுதலை செய்யப்படுவார்கள் தொடர்பில் தாங்கள் ஏமாற்றம்...

அரசியல் கைதிகளை நிபந்தனையின்றி விடுதலை செய்ய வேண்டும்! அரசாங்கம் இதயசுத்தியுடன் செயற்படவில்லை!!

தமிழ் அரசியல் கைதிகள் நிபந்தனையின்றி விடுவிக்க வேண்டும் இதுவே வடக்கு மாகாண சபையின் எதிர்பார்ப்பு எனத் தெரிவித்துள்ள வடக்கின் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிய அரசாங்கம இதய சுத்தியுடன் செயற்படுவதாக தெரியவில்லை எனவும் குற்றஞ்சாட்டியுள்ளார். இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு: போர் முடிந்து ஆறு ஆண்டுகள் கடந்து விட்டபோதும், தமிழ் அரசியல்...

அடுத்தவர்களுக்கு உதவுவதில் இலங்கைக்கு 8வது இடம்

அடுத்த மக்களுக்கு உதவும் நாடுகளின் பட்டியலில் இலங்கை 8வது இடம் பிடித்துள்ளது. Charity aid Foundation என்ற அமைப்பு இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. 2014ம் ஆண்டு வெளியிடப்பட்ட இந்தப் பட்டியலில் இலங்கை 9வது இடத்தில் காணப்பட்டது. 2014ம் ஆண்டை விட இலங்கை ஒரு இடம் முன்னேற்றம் அடைந்துள்ளது. இந்தப் பட்டியலில் அதிக செல்வந்த நாடுகளை விட...
Loading posts...

All posts loaded

No more posts